Homeஅடிப்படை ஜோதிடம்நட்சத்திர ரகசியங்கள் :சுவாதி நட்சத்திரம்

நட்சத்திர ரகசியங்கள் :சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரம் 

இருபத்தேழு நட்சத்திர வரிசையில் பதினைந்தாவது இடத்தைப் பெறுவது சுவாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு ஆண்-பெண் இனமாக கருதப்படுகிறது.இவர் துலாராசிக் குரியவராவார்.உடல் பாகத்தில் தோள்பட்டை, சிறு நீரகம் போன்ற உறுப்புகளை இவர் ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ரூ, ரே, ரோ, த; தொடர் எழுத்து தா ஆகியவையாகும்.

குண அமைப்பு:

சுவாதி நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் அதிகமிருந்தாலும் நல்ல அறிவுள்ள திறமைசாலிகள். நற்பண்புகளும் உடையவர். மனித உரி மைகளைப் பற்றி அடிக்கடி சட்டம் பேசுவார்கள், பிறருக்காக அதிகம் உதவி செய்வார்கள். அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். 

சிலநேரங்களில் தான் சொல்வது தான் சரி என தவறான வழியினையும் காட்டிவிடுவார்கள். திடமான புத்தி உடையவர்கள் என்றாலும், அடிக்கடி புத்தியை மாற்றிக் கொள்வார்கள். எளிதில் பயப்படும் குணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாரிடமிருந்தும் வித்தியாசப்படுவார்கள். 

எல்லா நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படுவார்கள். புன்னகை பூத்த முகமும் நீண்ட விரல்களும், பிறரை வசீகரிக்கும் தோற்றமும் பலர் மத்தியில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். விளையாட்டு குணம் அதிகமிருக்கும். சுய மரியாதையை இழக்க விரும்ப மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப்பட்டதை மட்டுமே செய்வார்கள். அதில் தவறுகள் நேர்ந்தால் பகிரங்கரமாக மன்னிப்பையும் கேட்பார்கள். பெரியவர், சிறியவர் என பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாகப் பழகுவார்கள். 

இவர்களின் தோற்றத்தைக் கொண்டு வயதை எடைபோட முடியாது. நல்ல எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர்கள்.

குடும்பம்:

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எது நல்லது, எது கெட்டது என ஆராய்ந்து செயல்படுவார்கள். உற்றார் உறவினர்கள்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். 

மண வாழ்க்கை சற்று தாமதமாகத்தான் அமையும். அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் பிள்ளைகள்மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுப்பதுடன் அவர்களுக்குத் தேவையானவற்றை தாராளமாக செய்து கொடுப்பார்கள். 

முன் கோபம் அதிகமுடையவர்கள் என்பதால் கணவன், மனைவியிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். பிராணிகள், பறவைகள் அனைத்தின் மீதும் பாசம் கொண்டவர்கள். மலை, கடல், மரம், கொடி, செடி போன்றவற்றினை விரும்பி நேசிப்பார்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களை மிகவும் தைரியமாக முடிப்பார்கள்.தங்களுடைய காரியங்களில் அரசர்களாக இருப்பார்கள். சிலர் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலில் ஈடுபடுவார்கள்.சிலர் வணிக  பொருள்களுக்கு ஏஜெண்டுகளாக இருப்பார்கள்.பண விவகாரங்களில் மிகவும் கவனம் உள்ளவர்கள்.வர்த்தகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இனிமையாகப் பேசுவார்கள்.

இரக்க குணம் உள்ளவர்கள்.நேர்மையானவர்கள்.தன் தர்மத்தை பற்றி பெருமையாக நினைப்பார்கள்.அலங்காரப் பிரியர்கள்.பெயர் புகழுடன் இருப்பார்கள். சிலர் கதைகள் எழுதுவார்.சமூக சேவகர்களாக இருப்பார்கள்.எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.வீடு வாங்கினால் அது கலைநயத்துடன் இருக்க விரும்புவர்

யோனி-மகிஷம் 

கணம்-தேவ கணம் 

நாடி-அனந்த நாடி 

அதிபதி-வாயுதேவன் 

கிரகம்-ராகு 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால் அது குணமாவதற்கு 17 நாட்கள் ஆகும்.நோய் குணமாக வாயோர கணேதி  மந்திரத்தை கூற வேண்டும்.நெய்யை தானமளிக்க வேண்டும்.அர்ஜுன மரத்தை வழிபட வேண்டும். 

  • பிறக்கும்போது ராகு பகவான் 6-ல் இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். 
  • ராகு சந்திரனுடன் எட்டில் இருந்தால் சீதளம் பிடிக்கும் 
  • ராகு செவ்வாயுடன் 6,8,12ல் இருந்தால் அடிக்கடி ஜுரம் வரும். 
  • குழந்தை வளர்ந்த பிறகு பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். 
  • ராகு, லக்னத்தில் சூரியன் இருந்தால் சூரிய கிரகணத்தால் விஷப் பூச்சிக் கடியால்  ஜுரம் வரும். 
  • ராகு சனி செவ்வாயுடன் எட்டில் இருந்தால், இளம் வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதாயிருக்கும், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
  •  ராகு சந்திரன் செவ்வாய் 8 ,12ல் இருந்தால் சீதளம் உண்டாகும். கபம் கட்டும்.

தொழில் :

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் கற்றது கை மண் அளவு என்பதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். 

சங்கீதம், நாட்டியம், இலக்கியம் போன்றவற்றில் அதிக நாட்டம் இருக்கும். நல்ல மனவலிமை கொண்டவர்கள் என்பதால் தொழில்ரீதியாக உண்டாகக்கூடிய பிரச்சினைகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பார்கள். மொத்த வியாபாரிகளாகவும், மார்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். 

எப்பொழுதும் சுதந்திரமாகவே செயல் படுவார்கள். சகல சாஸ்திரங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார்கள். சிலர் கலைத்துறையைச் சார்ந்தவர் களாகவும், பேராசிரியர்களாகவும் கெமிக்கல் இஞ் சினியர்களாகவும் ஏரோனாட்டிக்ஸ்.. கம்ப்யூட்டர் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். 

நோய்கள்:

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தோல் நோய், ஹார்ட் அட்டாக், சிறுநீர்க் குழாய்களில் பாதிப்பு, இரண்யா கோளாறு, கர்ப்பப்பை போன்ற வற்றில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

தசைப் பலன்கள்:

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதல் தசையாக வரும். இத்தசையின் மொத்த வருட காலங்கள் 18 என்றாலும் பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு ராகு தசையின் மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். 

இளம்வயதில் ராகு தசை நடைபெறும் என்பதால் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். அதுவே ராகு பாவ கிரக சேர்க்கையுடனிருந் தால் பேச்சில் வேகம், கல்வியில் மந்தநிலை, பிடிவாத குணம், பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

இரண்டாவதாக வரும் குரு தசைக் காலங்களில் வாழ்வில் முன்னேற்றம், கல்வியில் ஈடுபாடு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பெற்றோர் பெரியோர்களிடையே ஒற்றுமை; குடும்பத்தில் திருமண சுபகாரியங் கள் நடைபெறும் அமைப்பு, பணவரவுகள் தாராளமாக இருக்கும். யோகம் கொடுக்கும்.

மூன்றாவதாக வரும் சனி தசை 19 வருட காலங்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் யோகமும், முன்னேற்றமும், சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.

நான்காவதாக வரும் புதன் தசையிலும் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களின் ஸ்தல மரம் மருத மரமாகும். இம்மரம் அமைந்துள்ள திருத்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. மாணிக்கம் போன்ற ஜோதியுடன் காட்சி தரும் இந்த நட்சத்திரத்தை ஜூன் மாதம் இரவு 10 மணியளவில் வானத்தில் காணலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் செய்யக்கூடிய நல்ல காரியங்கள்

மாங்கல்யம் செய்தல், திருமணம் செய்தல், பெயர் சூட்டுதல், பூ முடித்தல், முடி களைதல், வீடு வாகனம் வாங்கல், கல்வி, ஜோதிடம், மருத்துவம் கற்றல், அன்னதானம், ஆயுத பிரயோகம், சமுத்திர யாத்திரை செய்தல், பயிரிடுதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்ற நற்காரியங்களைச் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

பிள்ளையார்பட்டி:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு கிழக்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மருதீசுவரர் அருள்பாக்கும் மருதகுடி ஸ்தலம்.

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தருகிலுள்ள காட்டழகிய சிங்கர் திருக்கோவில்.

திருப்புடைமருதூர்:

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு வட கிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள இந்திரன் வழிபட்ட ஸ்தலம். தைப் பூசத்தன்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு.

கடத்தூர்:

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு வட கிழக்கே 18 கி.மீ தொலைவில் அமராவதி ஆற்றங்கரையில் சுயம்புங்கமாக அருள்பாலிக்கும் அர்ஜுனேஸ் வரர் திருக்கோவில்.

கூறவேண்டிய மந்திரம்

உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்

ஜீவலந்தம் ஸர்வதேமுகம்

ந்ருஸிம்ஹம் பிஷனம் பத்ரும்

ம்ருத்யும் ருத்யும் நமாம்யஹம்!

பொருந்தாத நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் திருமணத்திற்குப் பொருந்தாது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular