ரஜ்ஜு பொருத்தம் | Rajju Porutham
ரஜ்ஜு பொருத்தம் தினப் பொருத்தத்திற்கு அடுத்தபடி மிக முக்கியமானதாகும். இதை தினப் பொருத்தத்தின் கீழ் விபரமாக ஏற்கனவே பார்த்தோம். பெண் ரஜ்ஜுவும் ஆண் ரஜ்ஜுவும் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்க வேண்டும்.
பாத ரஜ்ஜு (பாதம்) என்றால் என்ன?
பாத ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஒருவர் இருக்கும் இடத்திற்கே ஆபத்தாக்கும். பிரிவு ஏற்படுதல் அல்லது சன்னியாசம் செல்லுதல்.
1. பாத ரஜ்ஜு(கால் பாதம் ): அசுபதி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி
2. கடி ரஜ்ஜு(தொடை ) : பரணி, பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ஊரு ரஜ்ஜு (தொடை) என்றால் என்ன?
ஊரு ரஜ்ஜு என்பது இல்லாவிட்டால் அந்த வீட்டில் செல்வங்கள் மட்டுமில்லாமல் சேமித்த சொத்துக்களும் இழக்க நேரிடும்.
3. உதர ரஜ்ஜு(வயிறு): கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம் விசாகம், பூரட்டாதி
கண்ட ரஜ்ஜு என்றால் என்ன?
மாங்கல்யம் அணியக்கூடிய கழுத்து கொண்ட பெண்களுக்கு தீமை உண்டாக்க வல்லது. அதாவது கண்டக ரஜ்ஜுவினால் மனைவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.
4. கண்ட ரஜ்ஜு(கழுத்து ) : ரோஹிணீ, ஹஸ்தம், திருவோணம், திருவாதிரை – ஸ்வாதி, சதயம்
சிரசு ரஜ்ஜு என்றால் என்ன?
இந்த ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஆணுக்கு தீங்கு தருவதாக இருக்கும். சிரசு ரஜ்ஜு இருந்தால் தலைக்கு பாதிப்பு அதாவது தலைவனுக்கு பாதிப்பாகும்.
5. சிரோ ரஜ்ஜு : மிருகசீரஷம், சித்திரை, அவிட்டம்
ஆண்ரஜ்ஜுவும் பெண் ரஜ்ஜுவும் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்க வேண்டும். பல்வேறு பஞ்சாங்கங்களில் ஆண் – பெண் ரஜ்ஜு ஒன்றாக இருந்தாலும் அவற்றில் ஒன்று ஆரோஹ ரஜ்ஜுவாகவும் மற்றது அவரோஹ ரஜ்ஜுவாகவும் இருந்தால் சேர்க்கலாம் என்று கண்டிருக்கும் இது சரியல்ல.
ரஜ்ஜு பொறுத்தம் பார்க்க வேண்டும்
மணமகள் மற்றும் மணமகன் ஜாதகத்தை என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும் -09362555266