திருமணத்தின் போது கட்டாயம் பார்க்க வேண்டிய மிக முக்கிய பொருத்தம் -யோனி பொருத்தம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

யோனி பொருத்தம்-Yoni Porutham

யோனி(yoni)என்பது புணர்ச்சி உறுப்புகளைக்குறிக்கும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்,பெண் இருவருக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் என்பதை கண்டறிய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
மனித யோனிகளின் தன்மைகளை மிருக யோனிகளின் தன்மையோடு ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள்.

தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம்மற்றும் செயல்பாடுகள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும்.

யோனி பொருத்தம்

நட்சத்திர யோனி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அசுவினி – ஆண் குதிரை
பரணி – ஆண் யானை
கார்த்திகை – பெண் ஆடு
ரோகிணி – ஆண் நாகம்
மிருகசீரிஷம் – பெண் சாரை
திருவாதிரை – ஆண் நாய்
புனர்பூசம் – பெண் பூனை
பூசம் – ஆண் ஆடு
ஆயில்யம் – ஆண் பூனை
மகம் – ஆண் எலி
பூரம் – பெண் எலி
உத்தரம் – எருது
அஸ்தம் – பெண் எருமை
சித்திரை – ஆண் புலி
சுவாதி – ஆண் எருமை
விசாகம் – பெண் புலி
அனுஷம் – பெண் மான்
கேட்டை – கலைமான்
மூலம் – பெண் நாய்
பூராடம் – ஆண் குரங்கு
உத்திராடம் – மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் – பெண் குரங்கு
அவிட்டம் – பெண் சிங்கம்
சதயம் – பெண் குதிரை
பூரட்டாதி – ஆண் சிங்கம்
உத்திரட்டாதி – பாற்பசு
ரேவதி – பெண் யானை

யோனி பொருத்தம்

மிருகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம் அவை:
1.தாவர உண்ணிகள்
2.ஊண் உண்ணிகள்
3. அனைத்துண்ணிகள்.

தாவர உண்ணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அவை:
1. கொம்புள்ளவை
2. கொம்பில்லாதவை
ஆடு, எருது,பசு,எருமை,மான், இவை கொம்புள்ள தாவர உண்ணிகளாகும்.

குதிரை,யானை இவை கொம்பில்லாத தாவர உண்ணிகளாகும்.

நாய்,பூனை, புலி,சிங்கம், நாகம்,சாரைஇவை ஊண் உண்ணிகளாகும்.

எலியும் குரங்கும் அனைத்துண்ணிகளாகும்.

கொம்புள்ள தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். இதுபோல் கொம்பில்லாத தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஊண் உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.

எலி, கீரி போன்ற அனைத்துண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரியாக இருக்கும்.

நாகம்,சாரை போன்ற ஊண் உண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.

மனிதர்களின் யோனி பேதங்கள் மிருகங்களின் யோனி பேதங்களை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும். ஆண்,பெண் இருவருடைய யோனி பேதங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.

மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.

பூனை, புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.

யானை,நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.

அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் புணர்ச்சியின்போது எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தாவர உண்ணிகளுக்கும் அனைத்துண்ணிகளுக்கும் ஊண் உண்ணிகள் பகையாகும்.
கொம்புள்ள தாவர உண்ணிகள் கொம்பில்லா தாவர உண்ணிகளுக்கு பகையாகும்.
ஒரே வகையை சேர்ந்த மிருகங்களின் யோனிகள் பரஸ்பர நட்பாகும்.
வெவ்வேறு வகையை சேர்ந்த மிருக யோனிகள் பரஸ்பரம் பகையாகும்.இதன் அடிப்படையில் மிருக யோனிகளின் பகை விவரம் தரப்பட்டுள்ளது.

பகை யோனிகள் நட்சத்திரம்
குரங்கும் -ஆடும் பூராடம் ,திருவோணம் ✖ பூசம் ,கிருத்திகை
சிங்கமும் -யானையும் அவிட்டம்,பூரட்டாதி ✖பரணி ,ரேவதி
குதிரை-எருமை அசுவனி ,சதயம் ✖சுவாதி ,ஹஸ்தம்
பசு -புலி உத்திரம் ,உத்திராடம் ,உத்திரட்டாதி ✖விசாகம் ,சித்திரை
எலி -பூனை மகம் ,பூரம் ✖ஆயில்யம் ,புனர் பூசம்
பாம்பு -எலி ரோகிணி ,மிருசீரிடம் ✖ மகம் ,பூரம்
கீரி -பாம்பு உத்திராடம் ✖ரோகிணி ,மிருகசீரிடம்
மான்-நாயும் கேட்டை ,அனுஷம் ✖ மூலம் ,திருவாதிரை

Leave a Comment

error: Content is protected !!