கணப் பொருத்தம் | Gana Porutham
கணங்கள் மூவகைப்படும். 1. மனித கணம், 2. தேவ கணம். 3. ராட்சஸ கணம். சிலர் தேவ, மனித, ராட்சஸ கணம் என்று சிறப்புக் கருதி சொல்லுவர். எல்லாம் ஒன்றுதான்.
பில்லி, சூனியம், ஏவல் போன்றவை தேவ கணத்தைச் சேர்ந்தவரையும், ராட்சஸ கணத்தைச் சேர்ந்தவரையும் பாதிக்காது என்றும், மனித கணத்தைப் பாதிக்கும் என்பார் உளர். ஆனால், அது தவறானது.
தேவ கணத்தினர் பிறரை ஏமாற்றுபவர்கள், பிரச்சினைகளைக் கண்டு பிறரிடம் ஒப்படைத்து விடுவர்.
ராட்சஸ கணத்தினர் போராட்டங்களை எதிர் கொள்வர். விரோதிகளை எதிர்த்து நேரிலேயே போராடுவர். சொல்லிக் காட்டுவர்.
மானுட கணத்தவர் பயம், மறைந்து இருந்து பார்த்தல் போன்ற குணமுடையவர். அதன்படி மானுட கணத்தவர் அமைதி (சாத்வீக) குணமுள்ளவர்.
ராட்சஸ கணத்தவர் சோம்பல் (தாமச) குணமுள்ளவர்.
தேவ கணத்தவர் அரச (ராஜஸ) குணமுள்ளவர் என்று கொள்ள வேண்டும்.
தேவ கணத்தையும் மனித கணத்தையும் சேர்க்கலாம்.
தேவ கணத்தையும் ராட்சஸ கணத்தையும் சேர்க்கலாம்.
ராட்சஸ கணத்தையும் ராட்சஸ கணத்தையும் சேர்க்கலாம்.
மனித கணத்தையும் மனித கணத்தையும் சேர்க்கலாம்.
மனித கணம் – ராட்சஸ கணம் சேர்க்கக் கூடாது. (இருபாலருக்கும்)
தேவ கணம் நட்சத்திரங்கள் : அசுபதி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம். திருவோணம், ரேவதி ஆகியவை.
ராட்சஸ கணம் நட்சத்திரங்கள் : கார்த்திகை, மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம் சதயம், ஆயில்யம் ஆகியவை.
மானுட கணம் நட்சத்திரங்கள் : பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம்,பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை.
27 நட்சத்திரங்களை ஒன்பது ஒன்பதாகப் பிரித்திருக்கின்றனர்.
தேவ கணக்காரர்கள் சிரித்தப்படி காரியத்தைச் சாதிப்பர்.
ராட்சஸ கணக்காரர்கள் சண்டையிட்டு போராடி வாங்குவர்.
மனித கணக்காரர்கள் தோல்வி கண்டு, மேற்கண்ட இருகணத்தவர் உதவியுடன் காரியம் சாதிப்பர், ( இவற்றையெல்லாம் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. கொஞ்ச நாள் பஞ்சாங்கத்தை வைத்துப் பொருத்தம் பார்க்கப் பழகினால் தானாக மனப்பாடமாகும்)
ராட்சஸ கணக்காரரை மனித கணக்காரர் மணந்தால் மனித கணக்காரர் துன்புறுவார். தேவ கணக்காரரை ராட்சஸ கணக்காரர் மணந்தால் ராட்சஸ கணக்காரர் துன்புறுவர்,
தேவ – தேவ கணம். ராட்சஸ் – ராட்சஸ் கணம், மானுட – மானுட கணக்காரர் என்று திருமணமானால் மிக உத்தம் வாழ்வு உண்டு. மகிழ்வு, புத்திர இலாபம் உண்டு.
1, 3, 5, 7 என்று பெண் – ஆண் நட்சத்திரங்கள் வேற்று சாதி, மத திருமணம் செய்யக்கூடிய புத்திரர்களைப் பெற வைக்கும். 1 மற்றும் 3 ஆம் நட்சத்திரம் அவர்களின் குழந்தைகளுக்குப் பிற மத மணத்தை ஏற்படுத்தும். 5 மற்றும் ஏழாவது நட்சத்திரம் (பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை கண்டது பெண் குழந்தைகள் நிறையப் பிறக்கும், பணமுடை உண்டாகும்.
மற்றொரு விஷயம். பஞ்சாங்கத்தின் முதல், கடைசி 5 பக்கங்களை ஓய்வு நேரங்களில் பார்வையிட்டு வந்தாலே கைதேர்ந்த சோதிடராகலாம்.