குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மீனம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) – மீனம்

சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி கிரக நிலைகள் -2023

குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக் மற்றும் 10-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானமான 2-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே நோய்-கடன் (6-மிடம் )ஆயுள் -அவமானம் (8-மிட)தொழில் (10மிடம்) ஸ்தானங்களில் பதியும்.

இதுவரையில் உங்கள் ஜென்ம ராசியிலிருந்து பல வகையிலும் உங்களை அல்லல்படுத்தி வந்த குரு பகவான் தற்பொழுது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான மேஷத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இரண்டாம் இடமான மேஷத்துக்கு நகர்வதால் ராஜயோகம் பெறக்கூடிய ராசிகளில் மீன ராசியும் ஒன்று. குரு இரண்டில் சஞ்சரிக்கும் காலத்தில் எடுக்கும் முயற்சிகளும், காரியங்களும் எளிதில் வெற்றியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் நீங்கி தொழில் முன்னேற்றத்தை பெறும். சிறப்பான பொருளாதார நிலை உருவாகும். தாராளமான தன வரவுகள் போன்றவற்றால் சேமிப்புகள் கூடும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

வீடு, மனை, நகை, வண்டி, வாகனங்கள் வந்து சேரும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். உற்றார் உறவினர்களால் அனுகூலம், பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கல்வியில் உயர்வு, மேற்படிப்பு யோகம், உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். கொடுக்கல் வாங்கல், பண விவகாரங்கள் சிறப்பாக அமையும். ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யமும் இணக்கமான சூழலும் உண்டாகும். வீடு நிலங்களில் முதலீடு செய்யலாம். கூட்டு தொழில்கள் மூலமாக நல்ல லாபத்தை காணலாம்.

குருவின் பார்வை பலன்கள்

குருபகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியின் ஆறாம் இடத்தை பார்ப்பதால் தொழில் போட்டிகள் பொறாமைகள் குறையும். வெற்றிவாகை தேடி வரும். எதிரிகள் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். போட்டி தேர்வில் வெற்றி கிடைக்கும். இழுபறியில் இருந்து வந்த கோர்ட்டு கேஸ் வழக்குகள் தீர்ப்புகள் சாதகமாக அமையும். வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வும் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசியின் எட்டாம் இடத்தை பார்ப்பதால் ஆபத்துகள் விபத்துகள் நடைபெறாது. எதிரிகளால் பிரச்சனை இருக்காது. வம்பு வழக்குகள் ஏற்படாது. பெரிய சிக்கலில் இருந்து விடுதலை கிடைக்கும். தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபித்து காட்டுவார்கள்.

குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியின் பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழில் விரிவுபடும். லாபகரமாக அமையும். பதவி உயர்வுகள் தேடி வரும். அந்த நிலையில் இருந்து வந்த வியாபாரங்கள் செழிப்படையும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

பலன் தரும் பரிகாரம்

அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு புதன் கிழமை புதன் ஓரையில் சென்று வாருங்கள்.ஒரு முறை ஸ்ரீ ரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள்.வாழ்க்கை செழிப்படையும்.

Leave a Comment

error: Content is protected !!