வெளிநாடு யோகம்
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது ஆன்றோர் வாக்கு. இன்றைய காலகட்டத்தில் மனிதன் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறி வருகிறான் என்பதுதான் உண்மை. அரசு வேலை கிடைக்காதவர்கள், சொந்தத் தொழில் செய்ய மூலதனம் இல்லாதவர்கள் என இந்த வகையினர் அடுத்த நாடிச் செல்வது வெளிநாட்டு வேலைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே ஒரு தனி மரியாதை இன்றும் கூட சமூகத்தில் இருப்பதை நாம் சில இடங்களில் காண்கின்றோம். காரணம்? அவர்கள் சம்பாதிப்பது பணம் அல்ல டாலர்களும் தினார்களும் தான். இப்படிப்பட்ட வெளிநாட்டு வேலை ஜாதகத்தில் யாருக்கெல்லாம் கிடைக்கும்? அதற்கு எப்படிப்பட்ட அமைப்பு இருக்க வேண்டும்? என்பதை பார்ப்போம் வாருங்கள்.
- கடக லக்னம் மற்றும் கடக ராசியில் பிறந்து ஐந்தில் சந்திரன் இருந்தால் வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டாகும்.
- 5-ம் அதிபதி சந்திரனாக இருந்து அவரை குரு பார்த்தால் வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டாகும்.
- லக்னாதிபதி 5-ம் இடத்தில் இருந்து குரு பார்வை பெற்றால் அவர்கள் வெளிநாடு செல்வார்கள்.
- லக்னதுக்கு 12-ம் இடத்தில் சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் அவர்கள் வாழ்க்கை அன்னிய தேசத்தில் கழியும்.
- சந்திரன், குரு, ராகு, செவ்வாய் இவர்கள் 9, 12-ம் வீடுகளுடன் சேர்ந்திருந்தாலும், தொடர்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் கிடைக்க பெறும்.
- சந்திர திசை, ராகு திசை, சனி திசை, சுக்கிர திசை நடக்கும் போது வெளிநாட்டுப் பயணம் ஏற்படலாம்.
- ஜாதக ரீதியாக 3,7,9, 12 ஆகிய வீட்டிலிருக்கும் கிரகங்களின் திசை மற்றும் புத்திகள் நடப்பது, இத்தகைய தசா காலங்களில் அவர்களே எதிர்பாராத வகையில் வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாக கூட வெளிநாடு செல்லலாம்.
- 5-ம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டாலும் கூட வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டு.
- 5-ம் அதிபதி உச்சம் பெற்று சந்திரனுடன் இணைந்து இருந்தால், சந்திர திசை அல்லது சந்திர புத்தி நடக்கும் சமயம் அவர்கள் வெளிநாடு செல்வார்கள்.
- மேஷம், கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சரராசிகள். லக்னரீதியாக 9, 12-ம் வீடுகள் சர ராசிகளாக இருந்தால், வெளிநாடும் செல்லும் யோகம் உண்டு.9, 12-ம் வீட்டின் அதிபதிகள் சர ராசிகளில் இருந்தாலும் கூட அந்த ஜாதகர் வெளிநாடு செல்வார்.
- உச்சம் பெற்ற சந்திரன் லக்னம் அல்லது ராசிக்கு 5-ம் இடத்தை பார்த்தால் அந்த ஜாதகர் வெளிநாடு செல்வார்.
- 9-ம் வீடு அல்லது 12-ம் வீட்டில் ராகுவோ, சனியோ இருந்து 9 அல்லது 12-ம் அதிபதி சேர்க்கை இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.
லக்னம் அல்லது ராசிக்கு 12-ல் சந்திரன் ஆட்சி உச்சம் பெற்றால் அவர்களது வாழ்க்கை அந்நிய தேசத்தில் கழியும் என்று கூறியிருக்கிறீர்கள் ராசிக்கு 12-ல் சந்திரன் எப்படி இருக்கும்? சந்திரன் இருக்கும் இடம்தான் ராசி
எழுத்து பிழை சரி செய்ய பட்டுவிட்டது நன்றி