ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மிதுனம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

எதையும் நுன்னறிவோடு சிந்தித்து செயல்படுத்தும் மிதுன ராசி அன்பர்களே!!! வருகின்ற புத்தாண்டு உங்களுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் தந்து உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் புத்தாண்டாக அமையும்.

குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் இடம் பிடிக்கும். கசப்பு வார்த்தைகளும், பசப்பல் பேச்சு பேசும் உறவுகளிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். தினமும் குலதெய்வத்தை கும்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். சுபகாரியங்கள் எதிலும் அவசரமும் தடாலடி தீர்மானங்களும் வேண்டாம். வயது மூத்தவர்கள் குளியலறை, கழிவறையில் கவனமாக கால்பதியுங்கள். புதிய நபர்களிடம் குடும்ப ரகசியம் பகிர்வதை தவிருங்கள்.

பெண்களுக்கு பெருமைகள் சேரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும். அதேசமயம் வீண் புகழ்ச்சிக்கு மயங்கினால் ஏமாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. வாரிசுகள் குறைகளை நட்போடு சுட்டிக் காட்டுங்கள். வீடு, வாகனம் புதுப்பிக்க சந்தர்ப்பம் அமையும். மகப்பேறு,ம் மணப்பேரும் நிச்சயம் கைகூடும். மத்தியஸ்தங்களில் ஈடுபடுவதை தவிருங்கள். பணி புரியும் பெண்கள் நிதானத்தை கடைபிடியுங்கள்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாக ஏற்பட தொடங்கும். புதிய மாற்றம் எதையும் செய்யும் முன்பு உரிய ஆலோசனை அவசியம். வங்கிக் கடன்கள் தாமதமானாலும் நிச்சயம் கிடைக்கும். பழைய கடன்களையும் வரி முதலானவற்றையும் தவறாமல் செலுத்தி விடுவது நல்லது. அயல்நாட்டு  வர்த்தகத்தில் சட்டமீறல் கூடாது. கூட்டுத்தொழில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கும், திறமைக்கும் ஏற்ற உயர்வுகள் நிலைக்கும். அதேசமயம் புதிய பொறுப்புகளும் பணி சார்ந்த அலைச்சலும் அதிகரிக்கலாம். பொறுமையுடன் ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. தற்போதைய பொறுப்பு உணர்வு தான் எதிர்கால ஏற்றம் ஆகும் .உங்கள் செயல்களில் மூன்றாம் நபரை தலையிட அனுமதிக்காமல் இருந்தால் சங்கடங்கள் எதையும் சமாளிக்க முடியும். உடனிருக்கும் யாரோட தனிப்பட்ட குறையையும் நீங்கள் பெரிதுபடுத்தி பேச வேண்டாம். வேலை தேடியவர்களுக்கு புதிய பணி வாய்ப்பு மனம்போல அமையும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

 1.05.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 12ல் சென்று மறைவதால் திடீர் பயணங்கள் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். வீண் செலவுகளை குறைத்திடுங்கள்.

ராகு பகவான் இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு10-ம் வீட்டில் அமர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். எதிர்த்தவர்களும் நண்பர்கள் ஆவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சிலர் புது வேலைக்கு மாறுவீர்கள்.

கேது பகவான் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 4-ல் அமர்வதால் பயணத்தின் போது கவனம் தேவை. வாகன விபத்துக்கள் உருவாகலாம். சில காரியங்களில் அலைச்சலும் தாமதமும் ஏற்படும். அதன் பொருட்டு வீண் டென்ஷனும் ஏற்படலாம். பொறுமையும் நிதானமும் அவசியம்.

சனிபகவான் இந்த வருடம் முழுவதும் ராசிக்கு 9-ம் வீட்டில் தொடர்வதால் அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் மூலம் காரியம் சாதிப்பீர்கள். இதுவரையில் தடைபட்டிருந்த விஷயங்களில் தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.வழக்கில் திருப்பம் ஏற்படும். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்த சண்டை- சச்சரவுகள் நீங்கும். சமுதாயத்தில் அவப்பெயர் நீங்கி மரியாதை கூடும். 

பலன் தரும் பரிகாரம்

ஒருமுறை மந்த்ராலயம் சென்று ராகவேந்திரரை தரிசித்துவிட்டு வாருங்கள்.நன்மை கிட்டும்.

மொத்த பலன் : பணவரவிற்கு பஞ்சம் இருக்காது.

Leave a Comment

error: Content is protected !!