அஷ்டவர்க்கம்
- லக்னம் முதல் நாலாம் பாவம் வரையுள்ள பரல்களை கூட்டவும். இது இளம் வயதை குறிக்கும்.
- ஐந்தாம் பாவம் முதல் எட்டாம் பாவம் வரை உள்ள பரல்களை கூட்டவும். இது நடு வயதை குறிக்கும்.
- ஒன்பதாம் பாவம் முதல் பன்னிரெண்டாம் பாவம் வரையில் உள்ள பரல்களை கூட்டவும். இது முது வயதை குறிக்கும்.
எந்த வயதுக்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அந்த வயதுகளில் ஜாதகன் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பான்.
- வக்னத்திற்கு 1,4,7-10 ஆம் இடங்களை ஒன்றாக கூட்டவும் இது இளம் வயதைக் குறிக்கும்.
- லக்னத்திற்கு 2-5-8-11 ஆம் இடங்கள் நடு வயதை குறிக்கும்
- லக்னத்திற்கு 3-6-9-12 இடங்கள் முது வயதைக் குறிக்கும் எந்த வயதுக்குரிய பகுதியில் பரல்கள் கூட்டுத்தொகை அதிகமாக இருக்கின்றதே? அக்கால கட்டத்தில் ஜாதகன் மகிழ்ச்சியாக இருப்பான்.
லக்னத்தை பிறந்த வருடமாக பாவித்து கொண்டு அதிலிருந்து வரிசை கிரமமாக வருடங்களை ராசிகளில் எண்ணிக் கொண்டு போகவும் எந்த ராசியில் பரல்கள் அதிகம் உள்ளதோ அங்கு வருகிறன்ற வருடங்கள் அதிக நன்மை உள்ளதாக இருக்கும்.
லக்னத்தை பிறந்த மாதமாக கணக்கில் கொண்டு, வரிசையாக மாதங்களை எழுதுங்கள். எந்த ராசியில் பரல்கள் அதிகமாக உள்ளதோ அந்த ராசியில் வருகின்ற மாதங்களில் நற்பலன்கள் அதிகமாக நடக்கும். இதைபோலவே தமிழ் மாதத்தையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.
எந்த ராசியில் அதிக பரல்கள் உள்ளதோ, அந்த ராசியில் சனி, குரு போன்ற கிரகங்களால் வாழ்கையில் முக்கிய நிகழ்வுகள் அல்லது முக்கிய திருப்பங்கள் ஏற்படும்.
தாசபுத்தி நடத்தும் கிரகம் எந்த ராசியில் நிற்கின்றதோ, அந்த ராசியில் 28 பரல்கள் இருந்தால், அந்த கிரகம் சராசரியாக சுப-அசுப பலன்களை கொடுக்கும். 28 பரல்களுக்கு மேல் இருந்தால் சுப பலன்களையே தரும். 28 பரல்களுக்கு கீழ் இருந்தால் அசுப பலன்களையே தரும்.
தாச-புத்தி நடத்தும் கிரகம் இராசி கட்டடத்தில் பெற்ற பரல்களை விட நவாம்ச கட்டத்தின் ராசியில் உள்ள கட்டடத்தில் உள்ள பரல்களை விட குறைவானதாக இருந்தால் அந்த கிரகம் தனது தசா புத்தியில் நல்லது செய்யும்.அதிகமாக இருந்தால் தீமை செய்யும்.
7-9-12 பாவங்களில் உள்ள பரல்கள்தான் இருப்பதிலேயே குறைவான் பரல்களை கொண்டிருக்குமானால் ஜாதகர் வெளி நாடு செல்வார்.
சர்வாஷ்டகவர்கத்தில் எந்த திசையில் அதிக பரல்கள் உள்ளதோ அந்து திசை அதிர்ஷ்ட திசை ஆகும். அந்த திசையை நோக்கி பயணம் செய்வதும் வீடு, நிலம் வாங்குவதும் நலம் பயக்கும்.
கிழக்கு (மேஷம் + சிம்மம் + தனுசு)
தெற்கு (ரிஷபம் + கன்னி + மகரம்)
மேற்கு (மிதுனம் + துலாம் + கும்பம்)
வடக்கு (கடகம் + விருச்சிகம் + மீனம்)
இங்கு கொடுக்கப்பட்டுள்ள திசை ராசிககளை கூட்டி எந்த திசையில் பரல்கள் அதிகமாக வருகின்றதோ அந்த திசையையே அதிர்ஷ்ட திசையாக கொள்ள வேண்டும்.
மேலும் மற்றுமொரு வழியாகவும் அதிர்ஷ்ட திசையைக் காணலாம்.
1-12-11 (பாவங்கள் கிழக்கு திசையை குறிக்கும்)
10-9-8 (பாவங்கள் தெற்கு திசையை குறிக்கும்)
7-6-5 (பாவங்கள் மேற்கு திசையை குறிக்கும்)
4-3-2 (பாவங்கள் வடக்கு திசையை குறிக்கும்)
சர்வாஷ்டக வர்கத்தில் சுக்ரன் நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குரு நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு சனி நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
மீன ராசி முதல் மிதுன ராசி வரை இளம் வயதை குறிக்கும் கடக ராசி முதல் துலாம் ராசி வரை நடுவயதை குறிக்கும் விருச்சகம் முதல் கும்பம் வரை முதுவயதை குறிக்கும் எந்த வயதிற்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அப்பொழுது ஜாதகம் மகிழ்ச்சியாக இருப்பான்.