Homeஜோதிட தொடர்திருமணத்துக்கு தடையாக இருக்கும் முற்பிறவி சாபங்கள்: காரணங்கள் மற்றும் தீர்வுகள்

திருமணத்துக்கு தடையாக இருக்கும் முற்பிறவி சாபங்கள்: காரணங்கள் மற்றும் தீர்வுகள்

முற்பிறவி சாபங்கள்

இன்றைய நாளில் ஏராளமான ஆண்களும் பெண்களும் 50 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் முதிர் கன்னிகளாக ,முதிர்காளையர்களாக  தங்களது திருமண தடைக்கு காரணம் என்னவென்று தெரியாமல் கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒருவரின் திருமண தடைக்கு காரணம் அவர் முற்பிறவியில் தன் மனதால், வாக்கால்,உடலால்  பிறருக்கு செய்த பாவச் செயல்களேயாகும். இந்த பாவ-சாப  பதிவு 27 வகையானது.ஒவ்வொரு திருமண தடையும் ஒவ்வொரு காரணம் உண்டு.

திருமணம் தடையாகி வரும் ஆண்களும், பெண்களும் நாம் முற்பிறவியில் யாருக்கு என்ன விதமான பாவங்களை செய்தோம். அதனால் நமக்கு ஏற்பட்ட சாபம் என்ன என்பதை அறிந்து அதற்குரிய சரியான சாப நிவர்த்தி செய்தால் ‘திருமணத்தடை’ நீங்கி நல்ல முறையில் திருமணம் ஈடேறும் என்பது சித்தர்கள் வாக்கு.

 முற்பிறவி சாபங்கள்
  • ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாவது ராசியில் ‘சனி’ இருந்தால், திருமணத் தடை, தாமதம் ஆகும். இது ஒருவகை பாவச் செயலை குறிப்பிடுகிறது.
  • ஏழாவது ராசியில் ‘ராகு’ இருந்தால் திருமணத்தடை ஆகும். இது வேறொரு வகையான பாவத்தைக் குறிக்கும்.
  • ஏழாவது ராசியில் ‘கேது’ இருந்தால் திருமணம் தடைபடும். இது இன்னொரு வகையான சாபத்தை குறிக்கும்.
  • ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 3, 6, 9, 12 ல் இருந்தால் திருமணத்தடை, தாமதமாகும்.
  • 7-குரிய  கிரகம் லக்னத்திற்கு 2,5,8,11ல் இருந்தால் திருமணம் தடைபட்டு நிற்கும்.
  • 7-குரிய  கிரகத்துடன் ஒரே ராசியில் ராகு சேர்ந்து இருந்தால் திருமணத் தடையை உண்டாக்கும்.
  • 7-குரிய  கிரகத்துடன் ஒரே ராசியில் கேது சேர்ந்திருந்தால் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும்.
முற்பிறவி சாபங்கள்
  • ஒரு ஆண் அல்லது பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4, 6, 8, 10 ராசிகளில் 7-குரிய  கிரகம் இருந்தால் திருமணமே நடக்காமலும் போகலாம்.இது நான்கு விதமான உறவுகளால் ஏற்பட்ட பூர்வ ஜென்ம சாபம்.
  • ‘குரு’ நின்ற ராசிக்கு 4, 6, 8, 10 ராசிகளில் சுக்கிரன் இருந்தாலும் திருமணம் தடையாகும்.
  • ‘சுக்கிரன்’ நின்ற ராசிக்கு 1,2,5,9 ராசிகளில் கேது இருந்தாலும் திருமணம் தடையாகும்.
  • ஜாதகத்தில் ‘சுக்கிரன்’ ராசிக்கு 2, 5, 7, 9, 12 ஆகிய ராசிகளில் சனி இருந்தால் தாமத திருமணம். சாபம் நிவர்த்தி ஆனால் 30 வயதிற்கு மேல் திருமணம் நடைபெறும்.
  • பெண் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் செவ்வாய்க்கு 1, 2, 5, 7, 9, 12 ஆகிய ராசிகளில் சனி இருந்தால் திருமணம் தடைபடும். சாபநிவர்த்தி 30 வயதிற்கு மேல் திருமணம் நடக்கும்.
  • ஜென்ம லக்னத்திற்கு ஏழாவது ராசிக்குரிய கிரகம் (அல்லது) குரு நின்ற ராசிக்கு 7வது ராசிக்குரிய கிரகம் சனியாக  இருந்தால் திருமணம் தடையாகும்.
  • ஆண் பெண் இருவர் ஜாதகங்களிலும் குரு நின்ற ராசிக்கு 1,2, ,5,7, 9,12 ஆகிய ராசிகளில் சனி இருந்தால் திருமணம் தாமதமாக நடைபெறும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு ,செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் அடுத்தடுத்து மூன்று ராசிகளில் வரிசையாக இருந்தால் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். இவரின் தம்பிக்கு திருமணம் நடந்தபின் தான் இவருக்கு திருமணம் நடக்கும்.

  • அதே போல ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகியவை அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக இருந்தால் அந்தப் பெண்ணின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். எளிதில் நடக்காது. தங்கைக்கு அல்லது தம்பிக்கு திருமணம் நடந்த பின்னரே ஜாதககிக்கு  நடக்கும்.
முற்பிறவி சாபங்கள்
  • ஜாதகத்தில் குரு ,கேது ,சுக்கிரன் ஆகியவை அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக இருந்தால் திருமணம் தடை ஆகிக் கொண்டே வரும். திருமணம் நடந்தாலும் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு பிரிவு என ஏற்பட்டுவிடும் ,தாம்பத்திய சுகம் குறையும். திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

பெண் ஜாதகத்தில் சுக்கிரன், கேது ,செவ்வாய் ஆகியவை அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக இருந்தால். ஜாதகிக்கு திருமணம் கைகூடாமல் தடையாகும். அவ்வாறு நடந்தாலும், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு பிரிவு விவாகரத்து என ஏற்படும், தாம்பத்திய சுகம் இருக்காது வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1,2, 5, 9 ஆகிய ராசிகளில் கேது இருந்தால் அவள் முதல் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு அல்லது விவாகரத்து பெற்று வேறு ஒரு ஆணை இரண்டாம் தாரமாக மணம் புரிய நேரலாம்

இது போன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளன இங்கு சில காரணங்களை மட்டுமே எழுதியுள்ளேன் திருமணத்தடைகள் சிக்கித்தவிக்கும் ஆண்-பெண் அதற்குள் அதற்கு காரணமாக உள்ள பூர்வ ஜென்ம பாவங்களை அறிந்து அவற்றுக்குரிய நிவர்த்தி செய்து இல்லற வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சாபங்களுக்கு பூஜை பரிகாரம் போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களால் நிவர்த்தி கிடைக்காது, நடைமுறை செயல்களால் தான் வாழ்வில் உயர்வு மகிழ்ச்சியையும் உண்டாக்கிக் கொள்ள முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!