சந்திரன் செவ்வாய்-குரு-புதன்-பரிகார வழிபாட்டு மந்திரங்கள்
கிரக நிலை சரியில்லை அதனால் நவகிரக ஹோமம் செய்யவேண்டும் அல்லது பிற ஹோமங்கள் செய்ய வேண்டும் என்று பரிகாரம் சொல்லப்படும் போது, அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கீழ்கண்ட முறையில் அந்த மந்திரங்களை கூறி வழிபடுவதன் மூலம் ஏற்பட்டுள்ள கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்..
ஹோமம் செய்ய இயலாது போனால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நவகிரக சன்னதியில் குறிப்பிட்ட கிரக மூர்த்தியை தரிசித்து உரிய முறையில் வழிபட்டு வரலாம்.
நவக்கிரக ஹோமத்தின் போது நிறைவில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்றபடி கிரக சாந்தி செய்யும்போது சில பாரயாணங்களை செய்ய வேண்டும் என்பர். அவற்றை வாரம் ஒரு முறையேனும் நீங்கள் பாராயணம் செய்து பலனடையலாம்.
சந்திரனால் பாதிப்பு என்றால் தூர்க சப்தலோகி (துர்க்கையை பற்றிய ஏழு ஸ்லோகங்கள் அடங்கியது) 10தடவை சொல்லலாம்.
ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ
சிவ உவாச:
தேவி த்வம் பக்தி ஸூலபே சர்வ கார்ம விதாயினி |
கலௌ ஹிகார்ய ஸித்யர்த்தம் உபாயம் ப்ருஹியர்ந்த ||
தேவ்யுவாச:
ச்ருணுதேவ ப்ரவக்ஷ்யாமி கலேட ஸர்வேஷ்டஸாதநம் |
மயாதவைவ ஸநேஹநாப்யம்பாஸ்துதி: ப்ராகாச்யதே ||
சங்கல்பம்:
ஓம் அஸ்ய ஸ்ரீ துர்க்கா ஸப்தஸ்லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய; நாராயண ருஷி: । அனுஷ்டுப்சந்த: | ஸ்ரீ மஹாகாளி, மஹாலக்ஷ்மீ, மஹா சரஸ்வத்யோ தேவதா: । ஸ்ரீ ஜகதம்பா ப்ரீத்யர்த்தே ஜபே (பாடே) விநியோக:
ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதி ஹி ஸா ।
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி ।
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி காத்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா ॥
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே
ஸர்வஸ்வரூபே ஸர்வேசேஸர்வசக்தி ஸமந்விதே ।
பயேப்யஸ்த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோ(அ)ஸ்து தே
ரோகா நசேஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான் ।
த்வாமாச்ரிதானம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி
ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி ।
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்
செவ்வாய் கிரகத்தால் பாதிப்பு என்றால் ருணவிமோசன மங்கள ஸ்தோத்திரத்தை 7தடவை பாராயாணம் செய்யலாம்.
புதன் கிரகம் சரியில்லாத இடத்தில் இருந்தால் பாகவதத்தில் வரும் கிருஷ்ணர் அவதார கதையை 17 தடவை பாராயணம் செய்யலாம்
குருவால் பாதிப்பு ஏற்பட்டால் வேத மந்திரங்கள் சொல்ல வேண்டும்