தசரத ஸ்லோகம்
திருநறையூர் ‘அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில், அருள்பாலிக்கும் ‘அருள்மிகு மந்தாதேவி’ ‘அருள்மிகு ஜேஷ்டாதேவி’ உடனுறைந்து ‘அருள்மிகு மாந்தி’ ‘அருள்மிகு குளிகபுத்திர’ சமேதராய் எழுந்தருளியுள்ள அருள்மிகு சனிபகவானை வணங்கி தசரதர் இயற்றிய சுலோகம்
கோணோ அந்ந்தகோரௌத்ர – யமோ அப்த பப்ரு.
க்ருஷ்ண: சநி: பிங்கள மந்தஸெளரி:
நித்யம் ஸம்ருதோயோ ஹரதே ச பீடாம் தஸ்மை நம: ஸ்ரீரவி நந்தனாய
ஸூரா ஸுரா: கிம்புருஷோர – கேந்த்ரா கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச
பீடயந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீரவி நந்தனாய
நராநரேந்த்ரா: பசவோ ம்ருகேந்த்ரா வன்யாச்ச யே கீடபதங்க ப்ருங்கா:
பீடயந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீரவி நந்தனாய
தேசாச்ச துர்க்காணி வனானி யத்ர ஸேனாநிவேசா: புரபத்தனானி
பீடயந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீரவி நந்தனாய
திலையா யவைர் மாஷ குடான்ன தானை: லோஹேன நீலாம்பர தானதோவா
பரீணாதி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீரவி நந்தனாய
சனி தோஷம் நீக்கும் சுலோகம் -தமிழில்
பன்னிரு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட,
எண்ணிய எண்ணம் எல்லாம்.
ஈடேறிய வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல ஈசனே உனைத்துதித்தேன்!
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே!
கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே
சனியெனும் கிழமை கொண்டாய்!
சங்கடம் விலக வைப்பாய்!
அணிதிகழ் அனுஷம், பூசம்.
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீனாகும்!
எழில்நீலா மனைவி யாவாள்!
பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்போதென்று சொல்வார்
குளிகனை மகனாய் பெற்றார் !
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்! துணையாகி அருளைத்தாராய்!
அன்னதானத்தில் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே !சனியே! உன்னை மனதார போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெலாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்!
மந்தனாம் காரி. நீலா
மணியான மகர வாசா !
தந்ததோர் கவசம்கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா !
வந்திடும் துயரம் நீக்கு!
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று!