100 முறை காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் ஒரே திருத்தலம் -ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி

இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பதுடன் காசியில் இறந்தால் அடுத்த பிறவி என்பது இல்லாமல் முக்தி கிடைத்து இறைவனுடன் ஐக்கியமாகி விடுவார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.

தமிழகம் மற்றும் தென்னகத்திலிருந்து ‘காசி’ மிக நீண்ட தொலைதூரத்தில் இருப்பதால், மிகுந்த பொருட்செலவு, கால விரயம் ஆவதால் காசிக்கு எல்லோராலும் செல்ல முடிவதில்லை. இந்நிலையில் காசிக்கு சென்ற புண்ணியத்தை அதிலும் 100 முறை காசிக்கு சென்ற பலனை தமிழகத்தில் உள்ள ஒரு ஸ்தலத்திற்கு சென்றால் பெறலாம் என்று பல்வேறு முனிவர்களை கூறியுள்ளனர் அதை எடுத்து அது எந்த ஸ்தலம் எங்கே இருக்கிறது என்ன சிறப்பு என்று தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி

உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடமாக ‘காசி’ ஸ்தலம் கருதப்படுகிறது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த ‘காசி’ திருத்தலத்திற்கு 100 முறை சென்று வந்த பலனை தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள “ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி” திருக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

தல வரலாறு

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அதன் இறுதி காலத்தில் பறிக்கும் போது தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாக எமதர்மராஜா மிகவும் வருந்தினார். அதனால் ‘திருவாரூர் தியாகராஜரிடம்’ சென்று தனது குறையை தெரிவித்தார். அதற்கு இறைவனும், ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரியாக கூறினார்.

அதன்படி எமதர்மன் “ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி” திருக்கோயிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் காட்சியளித்து எமதர்மனுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். எமதர்மனும் இறைவா அனைத்து உயிர்களையும் பறிக்கும் பதவியால் எல்லோரும் என்னை கண்டு பயந்து திட்டுகின்றனர். உயிர்களைப் பறிப்பதால் “பிரம்மஹத்தி தோஷம்” பிடித்து என்னை வாட்டுகிறது எனவே அதிலிருந்து நீங்கும் வரம் வேண்டும் என்றார்.

ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி

எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன் எமதர்ம! இனிமேல் யாரும் எமன் உயிரை பறித்து விட்டான் என கூற மாட்டார்கள். நோய் வந்ததால், வயதாகி விட்டதால், விபத்து ஏற்பட்டு இறந்தான் என்றே கூறுவார்கள். அதனால் உனக்கு எந்த பழியும் பாவமும் ஏற்படாது, மேலும் நீ தவம் செய்த இந்த இடத்திற்கு புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும்.

எமனுக்கு முதல் மரியாதை

இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தளத்தின் ஷேத்திர பாலகனாக நீ விளங்குவாய். இத்தளத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பு என்னை தரிசிப்பார்கள் என்று கூறினார். அதன்படி இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது.

யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது. காசியில் இறப்பதால் எமன் பயமில்லாத போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் இறந்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை எதுவுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் இறைவனை வணங்கி கொண்டு இருக்கிறார். எனவே எமதர்மன் பைரவர் இருவருக்குமே அதிகாரம் இல்லாத இத்தலம் காசியை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது என்று முனிவர்கள் கூறுகின்றனர். ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்பு குறித்து பிரமாண்ட புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி

கங்கையும் ஸ்ரீவாஞ்சியமும்

மக்கள் அனைவரும் கங்கையில் குளித்து தங்களது பாவத்தை தீர்ப்பதால் கங்காதேவியிடம் பாவம் சேர்ந்து விட்டது. அதனால் தன்னிடம் சேர்ந்த பாவத்தை போக்க வேண்டும் என்று “கங்காதேவி” சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள் அதற்கு சிவபெருமான் பதில் கூறுகையில் உயிர்களைப் பறிக்கும் எமதர்மனுக்கு பாவம் விமோசனம் அளித்த ஸ்ரீவாஞ்சியதிற்கு சென்று வணங்கினால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்று கூறினார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதியுள்ள 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் வந்திருப்பதாக ஐதீகம். அதனால் “குப்த கங்கை தீர்த்தம்” என்று அழைக்கப்பட்ட இங்கு உள்ள தீர்த்தம் தற்போது ‘முனி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

எனவே காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

பரிகாரம்

மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்பம் ராசி மற்றும் லக்னக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்கு இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபடலாம்.

பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் விரும்புபவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் குளித்து வாஞ்சிநாதரை வழிபடுவது சிறந்தது.

கோவில் இருப்பிடம்

Leave a Comment

error: Content is protected !!