ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024 – கன்னி
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே !!! இதுவரையில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்த ராகு பகவான் ஏழாம் இடத்திற்கும், இரண்டாம் இடத்தில் இருந்த கேது பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கும் வரக்கூடிய அமைப்பு. இந்த பெயர்ச்சியில் ஏற்படுகிறது. இது உங்கள் முயற்சிக்கும் செயலுக்கும் ஏற்ப முன்னேற்றம் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
7ல் ராகு
ஏழில் ராகு வரும்போது வாழ்க்கைத் துணை வழிகளிலும் நட்பு கூட்டு partnership போன்றவற்றில், எளிதில் சொல்ல வேண்டுமானால் இந்த சமுதாயத்தில் பெரியளவு ஏதாவது ஒரு வழியைக் கையாண்டாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை உங்களுக்கும் வாழ்க்கைத்துணைகளுக்கும் உங்கள் பார்ட்னர்களுக்கும் ஏற்படும்.
ஆனால் நீங்கள் ஒன்றிணைந்து இதைச் செய்தால் இந்த சமூகத்தில் இது சரியிருக்காது. நல்ல பலன் தராது. இவைகளிடத்திலெல்லாம் இனி ஒன்றரை வருடத்திற்கு மிகக் கவனமாக நீங்கள் இருக்க வேண்டும்.வெற்றி ஆவல் மிக அதிகமாகத் தூண்டப்படும். இதை உங்கள் அறிவை வைத்து knowledge சமாளிக்க வேண்டும். உங்கள் சுய ஜாதக அமைப்பு நிலவரத்திற்கேற்ப இது நடப்பிற்கு வரும்.
ஜென்ம கேது
கேது ராசிக்குள் வந்து மனதில் ஆன்மீக ஞானம் கொடுக்க இருக்கிறார். இந்த ஆன்மீக ஞானமே யாருக்கும் தேவை. இதுவே மெய்யான சொத்து. இனி இது சரளமாக உங்களுக்குக் கிடைக்கும். இதனால் எதையுமே நீங்கள் சுருக்கிக் குறுக்கி கொள்வீர்கள். ராகு ஒரு புறம் ஆசையைத்தூண்டி இழுத்தால் கேது அதற்கு எதிர்ப்புறத்தில் இருந்து ராகுவின் அத் தூண்டுதலை வெட்டுவார். இதற்காக உங்கள் கட்டங்களில் இவைகள் பெற்ற தொடர்பு வலுக்களின் மூலமும் உங்கள் சுய தசாபுத்தி வழிகளிலும் இது அரங்கேற்றம் ஆக உள்ளது. அதாவது உங்களுக்கு ஜாதகத்தில் ராகு வலுவா? கேது வலுவா என்பதுவே இந்த இப் பெயர்ச்சியின் 1 மற்றும் 7 ல் அதிகமாக நடக்கும்.
உங்களுக்கும் உங்கள் தாயார் மற்றும் கணவன் மனைவி நண்பர்கள் வழி உடல் நலன்களில் அக்கறை வேண்டும். விரயச் செலவுகள் இனி மட்டுப்படும். மனதின் ஆசை குறையும்.பொறுமை வரும். இதற்கான பெருமையும் கிடைக்கும்.
புதன் சனி குருவின் சாரங்களில் ராகுவும், செவ்வாய், சந்திரன், சூரியன் சாரங்களில் கேதுவும் தன் பலன்களை இதில் கொடுப்பார்கள். இந்த சார நாதர்களின் ஆதிபத்திய ஸ்தானங்கள் என்கிற லக்னத்திலிருந்து வரும் கணக்கின்படி எந்த வீடுகளுக்கு இச் சாரநாதர்கள் அதிபதிகளாக உள்ளார்களோ, அதிலெல்லாம் இந்த ராகு கேதுக்கள் தன் சுய ரூபத்தை தன் தொடர்புகளின் படி, கலந்து பலன் கொடுக்கப் போகிறார்கள்.
செய்ய வேண்டிய பரிகாரம்
ஒரு முறை கீழ பெரும்பள்ளம் சென்று,திருநாகேஸ்வரம் தலங்களுக்கு சுவாமி ,அம்பாளையும் வணங்கிவிட்டு வாருங்கள்.நல்லது நடக்கும்.