லக்னம் முதல் 12 வீடுகளில் லக்னாதிபதி இருந்தால் ஏற்படும் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்னாதிபதி

லக்னாதிபதி

  • லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சியுற்றால், ஜாதகர் பெரும் பதவி பெறுவார். நீச்சமுற்றால் குழப்பவாதியாய் இருப்பார். உச்சமுற்றால் தன்னை அதிமேதாவியாய் நினைத்துக் கொள்வார். வர்கோத்தமமானால் மன உறுதியுடன் இருப்பார். இரண்டாம் அதிபதியுடன் பரிவர்த்தனையானால் இவர்சொல்வது பொய்த்துவிடும். 3 ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனையானால் சகோதர பலம் கைகூடும்.
  • லக்னாதிபதி 2 இல் இருந்தால், எளிய குடும்பம் அமையும், 2 இல் நீச்சமானால் பள்ளமான இடத்தில் வீடு கட்டுவார். உச்சமானால் திருமணத்தடை நிச்சயதார்த்தத்துடன் நின்று விடும். வர்கோத்தமமானால் சுகவாழ்வு உண்டு.
  • லக்னாதிபதி 3 இல் இருந்தால், சகோதரன் சம்பாத்தியத்தில் இருப்பார். வாழ்வு நடத்துவார். நீச்சமானால் தீய நடத்தை உண்டாகும். உச்சமானால் கூட்டுக்குடும்பம் அமையும். லக்னத்தில் இருந்தால், என்ன பலன் கிடைக்குமோ அந்தப் பலன் உண்டு
  • லக்னாதிபதி 4 இல் இருந்தால், தாயார் அன்பு கிட்டும். உச்சமானால் கொழுப்பு நோய் (கொலஸ்ட்ரால் வரும். நீச்சமானால் வாகன விபத்தும், கண் ரோகமும் உண்டாகும். 4ஆம் அதிபதி லக்னாதிபதி பரிவர்த்தனையானால் தாயார் மாநில அரசில் பணியாற்றுவார். லக்னத்தில் 4ஆம் அதிபதி தாயன்பு உண்டு.
  • லக்னாதிபதி 5 இல் இருந்தால், தாமத புத்திரம். உச்சமானால் பெரிய வீடு உண்டு. நீச்சமானால் வீண செலவு உண்டு, லக்னத்தில் 5 ஆம் அதிபதி இருந்தால் பெண் குழந்தை பாக்கியமுண்டு லக்னத்தில் 3ஆம் அதிபதி இருந்தால் மாமா, சிற்றப்பா அல்லது உடன் பிறந்தவருக்கு துர்மரணம் உண்டு.
லக்னாதிபதி
  • லக்னாதிபதி 6 இல் இருந்தால், தாமத வெற்றி உச்சமானால் கட்டுமானப் பணி செய்வார். நீச்சமானால் வேலையாட்கள் இடருண்டு. 6-1 க்குரியவர் பரிவர்த்தனையானால் பண புரோநோட்டில் இழப்பு உண்டு.
  • லக்னாதிபதி 7 இல் இருந்தால், அதிகார தோரணை உள்ள கணவர் / மனைவி அமைவர். உச்சமானால் இருதார யோகமும், நீச்சமானால் பயமுறுத்தித் திருமணம் செய்வித்தலும் அமையும். பரிவர்த்தனையானால் பெண் கொடுத்து பெண் வாங்குவர். 7 ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் வயது-தகுதி-அறிவுக்கு ஒவ்வாத துணை உண்டாகும்.
  • லக்னாதிபதி 8 இல் இருந்தால் 99 வயது ஆயுள் பலம் உண்டு. உச்சமானால் படுத்த படுக்கையில் இருப்பர் நீச்சமானால் சுறுசுறுப்புடன் வேலை செய்வர் பரிவர்த்தனையானால் வயிற்றுவலி – தலைவலி உண்டு. 8 ஆம் அதிபதி லகனத்தில் இருந்தால் துர்மரணமுண்டு
  • லக்னாதிபதி 9 இல் இருந்தால் தந்தையை ஒட்டிய வாழ்வு உண்டு, உச்சமானால் தாயாருக்குப் பிற ஆடவரால் இடருண்டு நீச்சமானால் வேலையாட்களால் தந்தைக்கு இடருண்டு பரிவர்த்தனையானால் சொத்து கிட்டாது. 9 ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் தந்தை பெருந்தலைவராவார்.
  • லக்னாதிபதி 10 இல் இருந்தால் மண்டலாதிபதி உச்சமானால் போக்குவரத்தும் துறை அதிகாரி. நீச்சமானால் சாதாரண தொழிலாளி, பரிவர்த்தனையானால் சாலை பணி ஒப்பந்தக்காரர். 10ம் அதிபதி லக்னத்தில் இருந்தால் 100 பேர்களுக்கு வேலை தருவார்.
  • லக்னாதிபதி 11 ல் இருந்தால் செல்வந்தர். நீச்சமனால் ஏழை ஆவார். உச்சமானால் வள்ளல். பரிவர்த்தனையானால் அறங்காவலர் (ட்ரஸ்ட்).11 ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் வங்கி ஏஜென்ட்.
  • லக்னாதிபதி பன்னிரண்டில் இருந்தால் தீர்த்த யாத்திரை போவார். தியானம் செய்வார். உச்சமானால் பள்ளத்தில் விழுந்து இறப்பார். பரிவர்த்தனையானால் சன்னியாசி ஆவார்.

2 thoughts on “லக்னம் முதல் 12 வீடுகளில் லக்னாதிபதி இருந்தால் ஏற்படும் பலன்கள்”

  1. பயமுறுத்தும் பலன்களைப் சொல்லுவது நல்லதா அய்யா

    12 ம் பாவகம் “பள்ளத்தில் விழுந்து இறப்பார்”

    Reply

Leave a Comment

error: Content is protected !!