கன்னி -முன்னேற்றம்
(உத்திரம் 2,3,4,அஸ்தம் ,சித்திரை 1,2)
புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இருந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் வந்து அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித் தர இருக்கிறார். நினைத்து கூட பார்க்க முடியாத வளர்ச்சியை வாரி வழங்க இருக்கிறார்.
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்ததால் மனதளவில் பல கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகள் பெரும் கவலையை தந்திருக்கும். பொருளாதார இழப்பால் வாடி வருந்தி செய்வதறியாது கோவில் கோவிலாக சுற்றி இருப்பீர்கள். அதற்கெல்லாம் பலன் பெறப்போகும் காலம்தான் இந்த சனிப்பெயர்ச்சி ஆகும்.
இது உங்களுக்கு ‘பொற்காலம்’. இனி உங்கள் வாழ்க்கை பாதை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். தாய் வழி உறவினர்களிடமிருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாக அமையும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.
திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு வெற்றியைத் தரும். கூட்டுத் தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
திருமணம் நிச்சயமாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத தன வரவு உண்டாகும். மதிப்பும் மரியாதையும் கூடும்.
இல்லத்தரசிகளை பொறுத்தவரை உற்சாகமான சனிப்பெயர்ச்சி இது. அதனால் மிகவும் சந்தோஷமாக செயல்படுவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களை பொறுத்தவரை இது முன்னேற்றம் தரும் சனிப்பெயர்ச்சி ஆகும். பணி செய்யும் இடத்தில் உங்களை நம்பி மேலதிகாரிகள் சில பொறுப்புகளை ஒப்படைப்பர். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடிவரும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி பகவான் தண்டனையிலிருந்து தப்பிக்க- சிறந்த பரிகாரம்
வியாபாரிகளுக்கு அதீத இலாபம் கிடைக்கும். தேங்கி கிடந்த சரக்குகள் விற்று தீரும். கூட்டுத் தொழில் வளர்ச்சியை தரும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு இது பொற்காலம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் கிடைக்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வெளிநாட்டு வேலை அமையும்.
சனி பகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 3, 8, 12 ஆம் இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால், திடீர் வேலை மாற்றம் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். இளைய சகோதரருடன் சொத்து பிரச்சனை ஏற்படலாம்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
பலன் தரும் பரிகாரம்
வீட்டருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்கு வியாழக்கிழமை தோறும் சனி ஓரையில் சென்று அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். மென்மேலும் வளர்ச்சி உண்டாகும்.