தசா புத்தி பரிகாரங்கள்-செவ்வாய் திசை-ராகு திசை

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

தசா புத்தி பரிகாரங்கள்

 
செவ்வாய் திசை
 
செவ்வாய் திசையின் ஆண்டுகள் 7 வருடம் செவ்வாய்க்கிழமை அன்று கந்த சஷ்டி கவசம் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் கூறுவது மிக நன்று. முடிந்தவர்கள் செவ்வாய் அன்று ஒருபொழுது விரதம் இருக்கவும் பரிகாரங்களை செவ்வாய்கிழமை தோறும் கடைபிடிக்கவும்
 
செவ்வாய் திசை-செவ்வாய் புத்தி(4மாதம்27நாட்கள்)
காலை 6மணி முதல் 7 மணிக்குள் சிறிது துவரம்பருப்பு கொடுங்கள்- யாருக்கேனும்
 
செவ்வாய் திசை-ராகு புத்தி(1வருடம்18நாட்கள்)
செவ்வாய்க்கிழமை மாலை 3மணி முதல் 4:30 மணிக்குள் அந்தணருக்கு உணவு சம்பந்த தானம் செய்யவும்.
 
செவ்வாய் திசை குரு புத்தி(11மாதம் 6 நாட்கள்)
பகல் 12:00 மணி முதல்1:00மணிக்குள் சிறிது சந்தனம் கொடுப்பது நல்லது 
 
செவ்வாய் திசை-சனி புத்தி(1வருடம்1 மாதம் 9 நாட்கள்)
 காலை 11 மணி முதல் 12 மணிக்குள் வேலை செய்யும் இளைஞர்களுக்கு ஏதேனும் உடைகள் கொடுக்கவும்
 
 செவ்வாய் திசை-புதன் புத்தி (11 மாதம் 27 நாட்கள்)
 காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கல்வி தடைபட்ட கல்வியில் தடுமாறும் மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்கவும்
 
 
 செவ்வாய் திசை-கேது புத்தி(4மாதம் 27 நாட்கள்)
 செவ்வாய் கிழமையில் எந்த நேரத்திலும் உடல் நலம் குன்றியவர்களுக்கு உதவி செய்யவும் 
 
செவ்வாய் திசை-சுக்கிர புத்தி(1வருடம் 2 மாதம்)
 காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ஒரு சுமங்கலிக்கு குங்குமம் கொடுக்கவும்
 
செவ்வாய் திசை- சூரிய புத்தி (4 மாதம் 6 நாட்கள்)
 காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கத்தரிக்காயை வாங்கி கொடுக்கவும்
 
 செவ்வாய் திசை-சந்திர புத்தி(7மாதம்)
 காலை 10 மணி முதல் 11 மணிக்குள் அல்லது முடிந்தபோதெல்லாம் மோர் தானம் செய்யவும் 
 
 
ராகு தசை 
 
ராகு தசை ஆண்டுகள் 18 வருடம் ராகு என்பது பாம்பு சம்பந்தம் உடையது. எனவே ராகு தசை ஆரம்பித்த உடன் ஜாதகர்கள் கிளி பிடித்து போய்விடுகிறார்கள் ராகு தசை நடக்கும் போது பெரும்பான்மையான ஜாதகர்களுக்கு பொது வெளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது போல் வாழ்க்கையின் போக்கு மாறி விடுகிறது ராகு பகவான் தான் அமர்ந்த இடம், வாங்கிய சாரம் ஆகியவற்றின் வழியே ஜாதகர்களை வச்சு செஞ்சு விடுகிறார்.
 
 ராகு தசை நடக்கும் போது இந்த நாள் தான் பரிகாரம் செய்யுங்கள் என்று கூற முடியாது உங்களுக்கு என்றைக்கு எந்த நேரத்தில் முடிகிறதோ முடிந்த மட்டும் பரிகாரம் செய்யுங்கள்
 
 ராகு திசை-ராகு புத்தி (2 வருடம் 8 மாதம் 12 நாட்கள்)
  பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய அன்பர்களுக்கு கருப்பு உளுந்து வாங்கி கொடுங்கள் 
  
ராகு திசை-குரு புத்தி (2 வருடம் 4 மாதம் 26 நாட்கள்)
 பகல் 1:30 மணிமுதல் 3:00 மணிக்குள் மஞ்சள் ,சமையலுக்கான மஞ்சள் பொடி, பூசும் மஞ்சள் பொடி, பூஜை மஞ்சள் பொடி, என முடிந்ததை வாங்கிக் கொடுக்கவும்
 
 ராகு தசை-சனி புத்தி (2 வருடம் 10 மாதம் 6 நாட்கள்)
 காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நெல்லிக்காய் அல்லது கடுகு அல்லது வாங்கி தானம் கொடுக்கவும் 
 
ராகு திசை-புதன் புத்தி ( 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள்)
 பகல் 12 மணி முதல் 1 30 மணிக்கு குருவி, கோழி போன்ற பறவை இனங்களுக்கு கேழ்வரகு அரிசி நோய் போன்றவற்றை தூவி விடுங்கள்
 ராகு கேது நின்ற பலன்கள் 
 
 ராகுதிசை-கேதுபுத்தி (1 வருடம் 18 நாட்கள்)
  முடிந்த போதெல்லாம் சாலையோர நாய்களுக்கு உணவு கொடுக்கவும் 
  
ராகு தசை-சுக்கிர புத்தி(3வருடம்) 
காலை 10:30 மணி முதல் 12:00 மணிக்குள் எலுமிச்சம்பழ சாதம் அல்லது எலுமிச்சை பானகம், சர்பத் கொடுக்கவும். சிறிய பெண் குழந்தைகளுக்கு நன்கு இனிப்பான தின்பண்டங்கள் கொடுக்கவும்
 
 ராகு திசை-சூரிய புத்தி (10மாதம் 24 நாட்கள்)
 மாலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் பிற இன மத நபர்களுக்கு மின்சாரப் பல்பு அல்லது ஒரு டஜன் தீப்பெட்டி வாங்கி கொடுக்கவும் 
 
ராகு திசை-சந்திர புத்தி (1வருடம்6மாதம்)
 காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் அல்லது முடிந்த நேரத்தில் பால் பாக்கெட் வாங்கி கொடுக்கவும் 
 
ராகு திசை-செவ்வாய் புத்தி(1 வருடம் 18 நாட்கள்)
 மாலை 3 மணி முதல் 4:30மணிக்குள் ஏதாவது இரும்பு பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரம் வாங்கிக் கொடுக்கவும். அதில் உளுத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு சிறிது போட்டு கொடுக்கவும்.
 

Leave a Comment

error: Content is protected !!