செவ்வாய் தசா
செவ்வாய் திசையின் ஆண்டுகள் 7 வருடம் செவ்வாய்க்கிழமை அன்று கந்த சஷ்டி கவசம் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் கூறுவது மிக நன்று. முடிந்தவர்கள் செவ்வாய் அன்று ஒருபொழுது விரதம் இருக்கவும் பரிகாரங்களை செவ்வாய்கிழமை தோறும் கடைபிடிக்கவும்.
செவ்வாய் தசா -செவ்வாய் புத்தி(4மாதம்27நாட்கள்)
காலை 6மணி முதல் 7 மணிக்குள் சிறிது துவரம்பருப்பு கொடுங்கள்- யாருக்கேனும்
செவ்வாய் தசா -ராகு புத்தி(1வருடம்18நாட்கள்)
செவ்வாய்க்கிழமை மாலை 3மணி முதல் 4:30 மணிக்குள் அந்தணருக்கு உணவு சம்பந்த தானம் செய்யவும்.
செவ்வாய் தசா குரு புத்தி(11மாதம் 6 நாட்கள்)
பகல் 12:00 மணி முதல்1:00மணிக்குள் சிறிது சந்தனம் கொடுப்பது நல்லது.
செவ்வாய் தசா -சனி புத்தி(1வருடம்1 மாதம் 9 நாட்கள்)
காலை 11 மணி முதல் 12 மணிக்குள் வேலை செய்யும் இளைஞர்களுக்கு ஏதேனும் உடைகள் கொடுக்கவும்.
செவ்வாய் தசா -புதன் புத்தி (11 மாதம் 27 நாட்கள்)
காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கல்வி தடைபட்ட கல்வியில் தடுமாறும் மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்கவும்.
செவ்வாய் தசா -கேது புத்தி(4மாதம் 27 நாட்கள்)
செவ்வாய் கிழமையில் எந்த நேரத்திலும் உடல் நலம் குன்றியவர்களுக்கு உதவி செய்யவும்.
செவ்வாய் தசா -சுக்கிர புத்தி(1வருடம் 2 மாதம்)
காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ஒரு சுமங்கலிக்கு குங்குமம் கொடுக்கவும்
செவ்வாய் தசா – சூரிய புத்தி (4 மாதம் 6 நாட்கள்)
காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கத்தரிக்காயை வாங்கி கொடுக்கவும்
செவ்வாய் தசா -சந்திர புத்தி(7மாதம்)
காலை 10 மணி முதல் 11 மணிக்குள் அல்லது முடிந்தபோதெல்லாம் மோர் தானம் செய்யவும்.