ஜோதிட ரகசியங்கள்
அமைச்சராகும் யோகம் |
பத்தாம் இடத்து அதிபதி ஆட்சி, உச்சமாகி கேந்திர கோணங்களில் லக்னாதிபதியுடன் சேர்ந்து குரு, சுக்கிரன், புதன் ஆகியோரின் சுபபார்வை பெற்ற ஜாதகர் மந்திரி (பதவி) என்னும் அமைச்சராவார். |
அரசபோக வாழ்வு |
குரு பகவான் 2-ம் இடத்தில் அதிபதியோடு சேர்ந்து பலப்பட்டு ஆட்சி (அல்லது) உச்சம் பெற்று ,சுப கிரக பார்வை பெற, ஜாதகர் நல்ல மனைவியுடன் சுகபோக சந்தோஷமாக அரசரைப் போல் வாழ்வார். |
மனைவியால் நன்மை உண்டாகும் யோகம் |
லாபாதிபதி 2ல் இருந்தாலும், (அல்லது) ஏழாம் இடத்திற்கு இரண்டாம் அதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டாலும், மனைவியால் செல்வத்தை பெற்று நன்மை அடைவார். |
மனைவி உத்தியோகம் பெரும் அமைப்பு |
ஒருவரின் ஜாதகத்தில் 8ம் இடத்து அதிபதியும் (அல்லது) 8ம் இடமும் ஆட்சி உச்சம் பெருமானால், அவர் மனைவியின் உதவியாள் வசதி வாய்ப்பாக வாழ்வார். |
ஆண் குழந்தை பாக்கியம் பெரும் அமைப்பு |
துலாம் என்னும் ஆண் ராசியில், அதுவே லக்னமாகவும் இருந்து, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றக் கிரகங்கள் இருந்தால், அந்த ஜாதகருக்கு ஆண் குழந்தைகளே பிறக்கும். |
பெண் குழந்தை பாக்கியம் பெரும் அமைப்பு |
பெண் ராசியான ரிஷபம் லக்னமாகி ஐந்தாம் இடத்து அதிபதி பெண் ராசிகளான கடகம், கன்னி, விருச்சகம், மகரம், மீனம் போன்ற இடங்களில் ராசியில் இருந்தாலும் (அல்லது) நவாம்சத்தில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு பெண் குழந்தை பாக்கியமே கிடைக்கும். |
அன்புடைய மக்கள் செல்வம் பெரும் அமைப்பு |
9,11-ம் அதிபதிகள் ராகுவுடன் சேர்ந்து ஐந்தாம் இடத்தில் இருந்தாலும், 4,5-ம் அதிபதிகள், கூடி கடகத்தில் இருந்தாலும், சந்திரன், சூரியன் கூடி லக்னத்தில் இருந்து, அதில் ஒரு கிரகம் ஆட்சி ,உச்சம் பெறுவதும் 2,7ம் அதிபதிகள் சேர்ந்து 4-ல் இருப்பதும், 7-ம் இடத்தில் லக்னாதிபதி இருப்பதும். |
சொந்த வீடு இல்லாத நிலை |
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றில் ஒன்று 4-ம் இடமாக அமைந்து, அதில் பாவ கிரகங்கள் இருந்து 8க்கு உடையவன் 5ம் இடத்திலோ (அல்லது) பார்த்தாலோ அந்த ஜாதகருக்கு சொந்த வீடு அமையும் யோகம் இருக்காது. |
தொட்டதெல்லாம் தோல்வியாகும் அமைப்பு |
11ம் அதிபதி 6, 8, 12 இல் இருந்தாலும், 1,8ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், 2ம் அதிபதி சந்திரனுக்கு 6ல் இருந்தாலும், 3, 11ம் அதிபதிகள் 12ல் இருந்தாலும், அதை சனி பார்த்தாலும் அனைத்திலும் ஜாதகர் தோல்வியே அடைவார். |
அரசியல் தலைவராகும் அமைப்பு |
சூரியனுடன் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் இருப்பதும், 1,4,5ம் அதிபதிகள் பலம் பெற்று 9-ல் இருப்பதும், சந்திரன் உச்சம் (அல்லது) வர்கோத்தமம் பெற்று 4 கிரகங்களால் பார்க்கப்படுவதும், சூரியனுடன் புதன், சுக்கிரன் யாராவது ஒருவர் சம்பந்தம் பெறுவதும், ராகுவிற்கு 12 சந்திரன் இருப்பதும், சந்திரனை குரு பார்ப்பது ஆகிய அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் காணப்பட்டால், அவர் நிச்சயம் மிகச்சிறந்த அரசியல் தலைவராக இருப்பார். |
நேர்மையாளர் |
2,7க்கு உடையவர்கள் 4ல் இருந்தாலும், 4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வை இருந்தால், அந்த ஜாதகர் நேர்மை தவறாத நீதிமானாக இருப்பார். |
மளிகை கடை நடத்தும் அமைப்பு |
7ம் அதிபதி செவ்வாயாக அமைந்து, 4லிருந்து அவரை 11, 12-ம் அதிபதிகள் பார்ப்பதாலும், 4+8 அதிபதிகள் கூடி 8ல் இருந்தாலும், 4+7 அதிபதிகள் கூடி 12ல் இருந்தாலும், 12-ம் அதிபதி 2-ல் இருந்தாலும் இந்த அமைப்பில் இருக்கும் ஜாதகர் நவதானிய பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பை பெறுவார். |
இளமையிலேயே துன்பம் ஏற்படும் அமைப்பு |
2,9ம் அதிபதிகள் கேந்திரம் பெற்று லக்னாதிபதியால் பார்க்கப்பட்டால், சுமார் 23 வயது வரை கஷ்டங்களை அனுபவித்து பின் சுகம் அடைவார். |
தாமதத்தால் புகழ் பெறும் அமைப்பு |
2-ம் அதிபதி சந்திரனுக்கு 12ல் , 7-ம் அதிபதி ,9-ம் அதிபதியும் குருவும் திரிகோணம் பெற்றாலும், குரு 11-ல் இருக்கவும் 11 ஆம் அதிபதி ராகு உடன் சேர்ந்து 4ல் இருந்தாலும் அந்த ஜாதகர் தர்மம் செய்தே புகழ் பெறுவார். |
கடன் பட்டு கலங்கும் அமைப்பு |
5-ம் அதிபதி லக்னத்தில் இருந்தாலும், நான்காம் இடத்தில் இருந்தாலும் தன் குடும்பத்திற்காகவே கடன் பெறுவார். 12-ம் அதிபதி 2 லிருந்தும் 2ம் அதிபதி 6லிருந்தும், 9-ம் அதிபதி பலமற்று இருந்தாலும்,6-ம் அதிபதி உச்சம் பெற, 9-ம் அதிபதி பனிரெண்டில் இருந்தாலும், குருவிற்கு 6ம் அதிபதியின் பார்வைபட்டால் அந்த ஜாதகர் கடன் தொல்லையால் என்றுமே சிரமப்படுவார். |
பதவி யோகம்- அரசு பதவி பெறும் அமைப்பு |
சனியும் செவ்வாயும் சேர்ந்து தீய கிரகங்களின் சம்மந்தத்துடன் துலாத்தில் இருந்தால், அந்த ஜாதகர் புகழ்பெற்ற உயர் அரசு அதிகாரியாக இருப்பார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து, குரு ஆட்சி பெற்று பார்வை பெற்றால் ஜாதகருக்கு அரசு அதிகாரியாகும் யோகம் வரும். |
தரித்திர யோகம் |
தரித்திர யோகம் சந்திரனுக்கு 8ல் பாவிகள் நிற்பதும், சந்திரனுக்கு 3, 12ல் பாவிகள் நிற்பதும் தரித்திர யோகம் ஆகும். |
இருதார யோகம் |
ஏழாம் இடத்து அதிபதியுடன் அசுப கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு இளையதார யோகம் உண்டாகும். |
வாத்திய கலைஞராகும் அமைப்பு |
11-ம் இடத்து அதிபதி குருவோடு சேர்ந்து இருந்தும், சுக்கிரன் 12ஆம் இடத்தில் இருந்த ஜாதகர் சங்கீத இசைக் கருவிகளை இயக்குவதில் வல்லவராய் திகழ்வார். |
கவிஞர் ஆகும் அமைப்பு |
11-ம் இடத்தில் புதன் இருந்தாலும், பதினோராம் இடத்தை புதன் ஆட்சி உச்சம் பெற்று பார்த்தாலும் அந்த ஜாதகர் கவிஞராய் நல்ல எழுத்தாற்றல் மிக்கவராய் திகழ்வார். |
சொத்தை அரசுக்கு பறிகொடுக்கும் அமைப்பு |
செவ்வாயும் சனியும் சேர்ந்து லக்னத்தில் இருந்து, ஆறாம் அதிபதி இரண்டிலிருந்தும், சந்திரனும், குருவும் சேர்ந்த மகரத்தில் இருக்கும் ஜாதகரின் சொத்துக்கள் அனைத்தும் கடனுக்காகவே அரசின் பறிமுதல் மூலம் போய்விடும் |
தெய்வ அருள் பெற்ற செல்வந்தர் |
சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து 2ம் இடத்தில் இருக்கும் அமைப்புடைய ஜாதகருக்கு தெய்வ அருளால் பெரும் செல்வங்கள் கிடைக்க பெற்று சிறப்பு பெறுவார். |