பத்தாம் இடத்து அதிபதி ஆட்சி, உச்சமாகி கேந்திர கோணங்களில் லக்னாதிபதியுடன் சேர்ந்து குரு, சுக்கிரன், புதன் ஆகியோரின் சுபபார்வை பெற்ற ஜாதகர் மந்திரி (பதவி) என்னும் அமைச்சராவார்.
அரசபோக வாழ்வு
குரு பகவான் 2-ம் இடத்தில் அதிபதியோடு சேர்ந்து பலப்பட்டு ஆட்சி (அல்லது) உச்சம் பெற்று ,சுப கிரக பார்வை பெற, ஜாதகர் நல்ல மனைவியுடன் சுகபோக சந்தோஷமாக அரசரைப் போல் வாழ்வார்.
மனைவியால் நன்மை உண்டாகும் யோகம்
லாபாதிபதி 2ல் இருந்தாலும், (அல்லது) ஏழாம் இடத்திற்கு இரண்டாம் அதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டாலும், மனைவியால் செல்வத்தை பெற்று நன்மை அடைவார்.
மனைவி உத்தியோகம் பெரும் அமைப்பு
ஒருவரின் ஜாதகத்தில் 8ம் இடத்து அதிபதியும் (அல்லது) 8ம் இடமும் ஆட்சி உச்சம் பெருமானால், அவர் மனைவியின் உதவியாள் வசதி வாய்ப்பாக வாழ்வார்.
ஆண் குழந்தை பாக்கியம் பெரும் அமைப்பு
துலாம் என்னும் ஆண் ராசியில், அதுவே லக்னமாகவும் இருந்து, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றக் கிரகங்கள் இருந்தால், அந்த ஜாதகருக்கு ஆண் குழந்தைகளே பிறக்கும்.
பெண் குழந்தை பாக்கியம் பெரும் அமைப்பு
பெண் ராசியான ரிஷபம் லக்னமாகி ஐந்தாம் இடத்து அதிபதி பெண் ராசிகளான கடகம், கன்னி, விருச்சகம், மகரம், மீனம் போன்ற இடங்களில் ராசியில் இருந்தாலும் (அல்லது) நவாம்சத்தில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு பெண் குழந்தை பாக்கியமே கிடைக்கும்.
அன்புடைய மக்கள் செல்வம் பெரும் அமைப்பு
9,11-ம் அதிபதிகள் ராகுவுடன் சேர்ந்து ஐந்தாம் இடத்தில் இருந்தாலும், 4,5-ம் அதிபதிகள், கூடி கடகத்தில் இருந்தாலும், சந்திரன், சூரியன் கூடி லக்னத்தில் இருந்து, அதில் ஒரு கிரகம் ஆட்சி ,உச்சம் பெறுவதும் 2,7ம் அதிபதிகள் சேர்ந்து 4-ல் இருப்பதும், 7-ம் இடத்தில் லக்னாதிபதி இருப்பதும்.
சொந்த வீடு இல்லாத நிலை
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றில் ஒன்று 4-ம் இடமாக அமைந்து, அதில் பாவ கிரகங்கள் இருந்து 8க்கு உடையவன் 5ம் இடத்திலோ (அல்லது) பார்த்தாலோ அந்த ஜாதகருக்கு சொந்த வீடு அமையும் யோகம் இருக்காது.
தொட்டதெல்லாம் தோல்வியாகும் அமைப்பு
11ம் அதிபதி 6, 8, 12 இல் இருந்தாலும், 1,8ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், 2ம் அதிபதி சந்திரனுக்கு 6ல் இருந்தாலும், 3, 11ம் அதிபதிகள் 12ல் இருந்தாலும், அதை சனி பார்த்தாலும் அனைத்திலும் ஜாதகர் தோல்வியே அடைவார்.
அரசியல் தலைவராகும் அமைப்பு
சூரியனுடன் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் இருப்பதும், 1,4,5ம் அதிபதிகள் பலம் பெற்று 9-ல் இருப்பதும், சந்திரன் உச்சம் (அல்லது) வர்கோத்தமம் பெற்று 4 கிரகங்களால் பார்க்கப்படுவதும், சூரியனுடன் புதன், சுக்கிரன் யாராவது ஒருவர் சம்பந்தம் பெறுவதும், ராகுவிற்கு 12 சந்திரன் இருப்பதும், சந்திரனை குரு பார்ப்பது ஆகிய அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் காணப்பட்டால், அவர் நிச்சயம் மிகச்சிறந்த அரசியல் தலைவராக இருப்பார்.
நேர்மையாளர்
2,7க்கு உடையவர்கள் 4ல் இருந்தாலும், 4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வை இருந்தால், அந்த ஜாதகர் நேர்மை தவறாத நீதிமானாக இருப்பார்.
மளிகை கடை நடத்தும் அமைப்பு
7ம் அதிபதி செவ்வாயாக அமைந்து, 4லிருந்து அவரை 11, 12-ம் அதிபதிகள் பார்ப்பதாலும், 4+8 அதிபதிகள் கூடி 8ல் இருந்தாலும், 4+7 அதிபதிகள் கூடி 12ல் இருந்தாலும், 12-ம் அதிபதி 2-ல் இருந்தாலும் இந்த அமைப்பில் இருக்கும் ஜாதகர் நவதானிய பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பை பெறுவார்.
இளமையிலேயே துன்பம் ஏற்படும் அமைப்பு
2,9ம் அதிபதிகள் கேந்திரம் பெற்று லக்னாதிபதியால் பார்க்கப்பட்டால், சுமார் 23 வயது வரை கஷ்டங்களை அனுபவித்து பின் சுகம் அடைவார்.
தாமதத்தால் புகழ் பெறும் அமைப்பு
2-ம் அதிபதி சந்திரனுக்கு 12ல் , 7-ம் அதிபதி ,9-ம் அதிபதியும் குருவும் திரிகோணம் பெற்றாலும், குரு 11-ல் இருக்கவும் 11 ஆம் அதிபதி ராகு உடன் சேர்ந்து 4ல் இருந்தாலும் அந்த ஜாதகர் தர்மம் செய்தே புகழ் பெறுவார்.
கடன் பட்டு கலங்கும் அமைப்பு
5-ம் அதிபதி லக்னத்தில் இருந்தாலும், நான்காம் இடத்தில் இருந்தாலும் தன் குடும்பத்திற்காகவே கடன் பெறுவார். 12-ம் அதிபதி 2 லிருந்தும் 2ம் அதிபதி 6லிருந்தும், 9-ம் அதிபதி பலமற்று இருந்தாலும்,6-ம் அதிபதி உச்சம் பெற, 9-ம் அதிபதி பனிரெண்டில் இருந்தாலும், குருவிற்கு 6ம் அதிபதியின் பார்வைபட்டால் அந்த ஜாதகர் கடன் தொல்லையால் என்றுமே சிரமப்படுவார்.
பதவி யோகம்- அரசு பதவி பெறும் அமைப்பு
சனியும் செவ்வாயும் சேர்ந்து தீய கிரகங்களின் சம்மந்தத்துடன் துலாத்தில் இருந்தால், அந்த ஜாதகர் புகழ்பெற்ற உயர் அரசு அதிகாரியாக இருப்பார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து, குரு ஆட்சி பெற்று பார்வை பெற்றால் ஜாதகருக்கு அரசு அதிகாரியாகும் யோகம் வரும்.
ஏழாம் இடத்து அதிபதியுடன் அசுப கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு இளையதார யோகம் உண்டாகும்.
வாத்திய கலைஞராகும் அமைப்பு
11-ம் இடத்து அதிபதி குருவோடு சேர்ந்து இருந்தும், சுக்கிரன் 12ஆம் இடத்தில் இருந்த ஜாதகர் சங்கீத இசைக் கருவிகளை இயக்குவதில் வல்லவராய் திகழ்வார்.
கவிஞர் ஆகும் அமைப்பு
11-ம் இடத்தில் புதன் இருந்தாலும், பதினோராம் இடத்தை புதன் ஆட்சி உச்சம் பெற்று பார்த்தாலும் அந்த ஜாதகர் கவிஞராய் நல்ல எழுத்தாற்றல் மிக்கவராய் திகழ்வார்.
சொத்தை அரசுக்கு பறிகொடுக்கும் அமைப்பு
செவ்வாயும் சனியும் சேர்ந்து லக்னத்தில் இருந்து, ஆறாம் அதிபதி இரண்டிலிருந்தும், சந்திரனும், குருவும் சேர்ந்த மகரத்தில் இருக்கும் ஜாதகரின் சொத்துக்கள் அனைத்தும் கடனுக்காகவே அரசின் பறிமுதல் மூலம் போய்விடும்
தெய்வ அருள் பெற்ற செல்வந்தர்
சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து 2ம் இடத்தில் இருக்கும் அமைப்புடைய ஜாதகருக்கு தெய்வ அருளால் பெரும் செல்வங்கள் கிடைக்க பெற்று சிறப்பு பெறுவார்.