மாசி மாத ராசிபலன் -2024

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

மாசி மாத ராசிபலன்

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)’

கிரக நிலைகளின்படி, வருமானம் ஒரே சீராக இருப்பது மிகவும் கடினம்! திட்டமிட்டு செலவு செய்தால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இராது. இதற்குக் காரணம், மாதம் முழுவதும் குருபகவான் உங்களுக்குச் சாதகமாக இல்லை !! சுக்கிரனும் 12ம் தேதி வரைதான் சாதகமாக சஞ்சரிக்கின்றார்.

13ம் தேதியிலிருந்து, 24ம் தேதி வரை அனுகூலமற்ற நிலைக்கு மாறி, மீண்டும் 25ம் தேதி வரை சுப பலம் பெறுகிறார்.ஆதலால்தான், நிதிநிலைமையில் அடிக்கடிவீண் செலவுகளும், நிச்சயமற்ற நிலையும் மாறி, மாறி ஏற்பட்டு, கவலையை அளிக்கும். குருவினாலும், நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. விவாக முயற்சிகளில், குழப்பமே மேலிடும்.

நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரின் உதவி கிடைக்கச் செய்வார், கேது சனி பகவான்,லாப ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க தருணத்தில் உதவி கிட்டும். விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. தேவையில்லாமல், வெளியே அலைவதைத் தவிர்ப்பது அவசியம். கூடியவரையில், வெளியூர்ப் பயணங்களை இம்மாதம் தவிர்த்தல் நல்லது.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

வியாழக்கிழமைகளில் நெய்யும், சனிக்கிழமைகளில்,எள் எண்ணெயும் சேர்த்து வருவது, மிகவும் சக்திவாய்ந்த பரிகாரங்களாகும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-3, 6-9, 13-17, 22-24, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 19, 20, 21 முற்பகல் வரை.

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

மாசி 24-ம் தேதி வரை, சுக்கிரன் அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கின்றார். மாதம் முழுவதும் குரு பகவானால் நன்மை எதையும் எதிர்பார்க்க இயலாது! லாப ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டிருப்பது, மிகவும் சாதகமான கிரக நிலையாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஜென்ம ராசியில் உதவும் குருவினால், செலவுகள் அதிகமாக இருக்கும். மாதம் முழுவதும் சூரியன் சுப பலம் பெற்றிருப்பதால், ஆரோக்கியத்தை அவர் பாதுகாத்தருளுகிறார் !!

உத்தியோகம் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ, கணவர் -மனைவி பிரிந்திருக்க நேரிடும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது இருப்பதால், திருத்தல தரிசனம், மகான்களின் ஆசி கிட்டும். தசா,
புக்திகள் சாதகமாக இருப்பின், அயோத்தியா சென்று வரும் மகத்தான பாக்கியமும் கிட்டும்.

லாபஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளராகுவின் பலத்தினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. மாசிமாதம் 25-ம் தேதி, சுக்கிரன் ராசி மாறுவதால், எதிர்பாராத செலவு ஒன்றை நீங்கள் சமாளிக்க வேண்டி
வரும். திருமண முயற்சிகள் தாமதப்படும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 4-9, 13-16, 20, 24-26, 30

சந்திராஷ்டம தினங்கள்

மாசி:21 முற்பகல் முதல், 22, 23 மாலை வரை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குரு பகவான் லாப ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு சாத்திக்கூறு கிடையாது. இருப்பினும், பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவானும், சுக ஸ்தானத்தில்கேதுவும் இருப்பதால், செலவுகளும் அதிகமாகவே இருக்கும்.

இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி 2023 to 2026-மீனம் பலன்கள் மற்றும் பரிகாரம்

அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும், பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் – சனி இணைந்திருப்பதால், மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. மனதில் நிம்மதி குறையும். விவாக முயற்சிகளுக்கு, ஏற்ற மாதம் இது. மாசி 12-ம் தேதி வரை சுக்கிரன் சுப பலம் பெற்றிருக்கவில்லை! நெருங்கிய உறவினர்களிடையே சிறு, சிறு வாக்குவாதமும் அதனால், ஒற்றுமைக்குறைவும் நிலவும்.

வெளிநாட்டில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண் ஆகியோரின் பிரச்னை, கவலையை அளிக்கும். அதிக அலைச்சல், வெளியூர்ப் பயணங்கள் ஆகியவற்றினால், ஆரோக்கியம் பாதிக்கப்படும். சரும உபாதைகளினால், மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

வைதீஸ்வரர் கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1, 2, 6-10, 14-16, 20-22, 26, 27, 30.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 23 மாலை முதல், 24, 25 இரவு வரை.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

இம்மாதமும் குரு பகவானும், சுக்கிரனும் உங்களுக்கு அனுகூலமாக
சஞ்சரிக்கவில்லை! பாக்கிய ஸ்தானத்தில்ராகுவும், ஜீவன ஸ்தானத்தில் குருவும் இணைந்திருப்பது, மிகக் கடுமையான பணப்பற்றாக்குறையை
இம்மாதம் நீங்கள் சமாளிக்கவேண்டி வரும்.

அஷ்டமத்தில் (8-ம் இடம்) சூரியனும், சனி பகவானும் இணைந்திருப்பது ஆரோக்கியத்தில் இருக்கவேண்டியதன் கவனமாக அவசியத்தை வலியுறுத்துகிறது. களத்திர ஸ்தானமாகிய மகரத்தில் அக்னி கிரகமாகிய செவ்வாய் அமர்ந்திருப்பது மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. குடும்பப் பிரச்னைகளும் கவலையை அளிக்கும். கேது ஒருவரே!

உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால், முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத இடங்களிலிருந்து, உதவிகள் கிட்டும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கக்கூடும். குடும்ப நலன் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுவது நல்லது. திருமண முயற்சிகளில் தவறான வரனை நிச்சயித்துவிடக்கூடும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

பிரதோஷகாலத்தில் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளாக) தீபம் ஒன்றை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ ஏற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 3-5, 10-13, 17-19, 23, 24, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 25 இரவு முதல் 26, 27 இரவு வரை.

சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)

குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களும், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு உதவிகரமாக நிலைகொண்டுள்ளனர். பணவசதி போதிய அளவிற்கு இருக்கும். நினைத்தவை நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெறலாம், விவாக முயற்சிகளில் நல்ல வரன் அமையும்.

புத்திர பாக்கியம் கிடைத்தல், நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப
நிகழ்ச்சிகள் நிகழும். அவற்றின் காரணமாக, சுபச் செலவுகள் அதிகமாக இருப்பினும், வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். ராகு, அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால், ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டு, பின்பு குணமாகும். களத்திர ஸ்தானமாகிய கும்பத்தில், சனி பகவான் ஆட்சி புரிவதால், மனைவியின் உடல் நலனிலும் கவனமாக இருத்தல் வேண்டும்.

இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டும்போது, மிக மிக கவனமாக இருத்தல்
அவசியம். விபத்துகள் ஏற்படுவதற்கு, கிரக ரீதியில் சாத்தியக்கூறு உள்ளது.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

மாலை நேரத்தில், பிரதோஷ காலத்தில் ஐந்து அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வாருங்கள்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 3-5, 10-13, 17- 19, 24-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 1, 2 மாலை வரை. மீண்டும் 27 இரவு முதல், 28, 29 பின்னிரவு வரை.

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

ஜென்ம ராசியில், மோட்ச காரகரான கேது நிலைகொண்டிருப்பதால்,
மனதில் ஆன்மிகச் சிந்தனைகள், தெய்வபக்தி, பெரியோர்களின், ஆசியும் நட்பும் மேலிடும். சுக்கிரன் அனுகூலமாக இருப்பதால், வருமானம்
போதிய அளவிற்கு இருக்கும். இருப்பினும், அஷ்டமஸானத்தில் குருபகவான் நிற்பதால், வருமானத்தின் பெரும்பகுதி வைத்தியச் செலவுகளிலும், வீண் செலவுகளிலும் பணம் விரயமாகும். களத்திர ஸ்தானமாகிய மீனராசியில், ராகு நிலைகொண்டிருப்பதால், கணவர்-மனைவியரிடையே ஒற்றுமை பாதிக்கும்.

ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய கும்பத்தில் சூரியன் – சனி
இணைந்திருப்பதால், ஒரு சிலர் புதிய கடன்களை ஏற்கக்கூடும். கூடிய
வரையில், தவிர்ப்பது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில், குரு நிலை கொண்டிருப்பதால், வீண்செலவுகளில் பணம் விரயமாகும். சில தருணங்களில் தேவையில்லாமல் கடன் வாங்கும் மனப்பான்மை உருவாகும். களத்திர ஸ்தானத்தில் ராகு நிற்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மண் அகலில் பசு நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். அதிசயத்தக்க பலன் கிடைக்கும்

பலன் தரும் தினங்கள்

மாசி: 1, 5-10, 14-16, 20, 24-27.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 2 மாலை முதல், 3, 4 இரவு வரை. மீண்டும் 29 பின்னிரவு முதல் 30.

துலாம்

சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

வீரியம் நிறைந்த பல முக்கிய கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக நிலை
கொண்டுள்ளனர், இம்மாதம் முழுவதும்!சுக்கிரன், குரு, ராகு மற்றும் புதன் ஆகியவற்றைத்தான் குறிப்பிடுகிறோம். மாதம் முழுவதும் பணப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. சற்று திட்டமிட்டு செலவு செய்தால், பழைய கடன்களைக் கூட அடைத்து, உங்கள் பொருளாதாரத்தை சீர்படுத்திக்கொள்ளலாம்.

ஸப்தம ஸ்தானத்தில் (7) குரு அமர்ந்திருப்பதால், பெண் அல்லது பிள்ளைக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். மணமான மங்கையருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். நிச்சயதார்த்தம், திருமணம், மகப்பேறு போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால், குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும்,

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

செவ்வாய்மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயிலிலோ மாலையில் இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-3, 7-9, 13-16, 20-23, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 4 இரவு முதல், 5, 6 பின்னிரவு வரை.

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம்,கேட்டை வரை)

சுக்கிரன், செவ்வாய், கேது ஆகிய மூவரும் உங்களுக்குச் சாதகமாக உள்ளனர், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்களினால் எவ்வித நன்மைகளையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. வருமானத்தை விட செலவுகளே அதிகமாக இருக்கும். “6-ல் குரு, ஜீவநதியும் வற்றும் …! ” என விவரித்துள்ளன மிகப் புராதனமான ஜோதிட கிரந்தங்கள். திட்டமிட்டு செய்யாவிட்டால், புதிய கடன்களை ஏற்க நேரிடும்.

அன்புடன் பழகிய நண்பர்களும் விலகிச் செல்வர். குடும்பத்திலும், ஒற்றுமை குறையும். ராகுவின் அர்த்தாஷ்டக நிலையினால், ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும். எளிய மருத்துவச் சிகிச்சையினால் குணம் கிடைக்கும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சி தேவைப்படும்.

பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் நிலைகொண்டிருக்கும்
ராகுவினால், குழந்தைகளின் உடல்நலன், மற்றும் கல்வி பாதிக்கப்படக்கூடும். அர்த்தாஷ்டக ராசியில் சனி நிலைகொண்டிருப்பதால், உங்கள் உடல் நலனில் கவனம் அவசியம்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

இம்மாதம் முழுவதும், தினமும் மாலையில் உங்கள் வீட்டுப் பூஜையறையில் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வரவும். சனிக்கிழமைகளில் மட்டும், எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 4, 5, 10-13, 17-20, 24-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 6 பின்னிரவு முதல், 7, 8, 9 காலை வரை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

இம்மாதம் முழுவதும் வீரியம் நிறைந்த ஐந்து கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக வலம் வருகின்றன. குரு, சுக்கிரன், சூரியன், சனி, புதன் ஆகிய கிரகங்களைத் தான் குறிப்பிட்டுள்ளோம். தேவையான அளவிற்கு பண வசதி உள்ளது. வீண் செலவுகள் குறையும். புதனின் நிலை உங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் திருப்திகரமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். அர்த்தாஷ்டகத்தில் நிலைகொண்டுள்ள ராகுவினாலும், செவ்வாயின் நிலையினாலும், உஷ்ண சம்பந்தமான சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, சருமம் சம்பந்தமான பாதிப்புகள் எளிய மருத்துவ சிகிச்சையினால் நீங்கும். திருமண முயற்சிகள் வெற்றியடையும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

திரு நாகேஸ்வரம், நாகமங்களா(கர்நாடகா), காளஹஸ்தி ஆகிய திருத்தலங்களில் ஏதாவது ஒன்றிற்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வைத்து தரிசித்துவிட்டு வந்தால், போதும். இயலாதவர்கள், தங்கள் வீட்டுப் பூஜையறையில், சனிமற்றும் செவ்வாய்க் கிழமைகளில், மாலையில் மூன்று அகல் விளக்குகளில் தீபம் ஏற்றிவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1, 2, 6-8, 12-16, 20-23, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 9 காலை 10, 11 இரவு வரை.

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

சுக்கிரன், ராகு மற்றும் சனி பகவான் ஆகியோர் இம்மாதம் முழுவதும்
உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். ஏழரைச் சனியின் காலம் முடியும் தருணத்தில் உங்களுக்கு, அவரால் பல நன்மைகள் காத்துள்ளன. சுக்கிரனும் இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்றுச் சஞ்சரிப்பதால், பணப் பற்றாக்குறை இராது.

குரு சாதகமாக இல்லாததால், வரவிற்கேற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் ஒற்றமை நிலவும். எதிர்பாராத செலவினங்கள் கடைசி வாரத்தில் ஏற்படக்கூடும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிட்டும்.

விவாக சம்பந்தமான முயற்சிகளில் வரன் அமைவது தாமதப்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

தினமும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ மாலையில், பிரதோஷ காலத்தில், ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வரவும். அதியற்புத பலன்கள் கிட்டும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-4, 7-10, 15-17, 23-25, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 11 இரவு முதல், 12, 13, 14 காலை வரை.

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

ஜென்மச் சனியின் ஆரம்பப் பகுதியில் நீங்கள் இருக்கின்றீர்கள்! ஏழரைச்
சனி என்றாலே, அனைவருக்கும் அச்சம்தான் !! இருப்பினும், கும்பம், சனி பகவான் உகந்த ஆட்சிவீடாகும். ஆதலால், பிரச்னைகள் அளவோடு இருக்கும்.

ஜென்ம ராசியில் சனியுடன் சூரியனும் சேர்ந்திருப்பது, உஷ்ண சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். நரம்புகள், ரத்தம், இதயம் ஆகியவை சூரிய பகவானின் ஆதிக்கத்தில் உள்ளதால், அதிக உழைப்பையும், தேவையற்ற கவலைகளையும், உணர்ச்சி வசப்படுவதையும் குறைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

திருமண முயற்சிகளில் தவறான வரனை நிச்சயித்துவிடக்கூடும்.
குழந்தைகளின் எதிர்கால நலனைச் சற்று சிந்தித்து வரனை முடிவு செய்வது நல்லது. ஜென்மச் சனியினால் ஏற்படும் தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரங்களை ஜோதிட சாஸ்திரம் கூறியுள்ளது நமது நன்மைக்காகவே! அவற்றுள் சிலவற்றை எமது வாசக அன்பர்களுக்காக, கீழே தந்திருக்கின்றோம்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

சனி பகவானுக்கு, பரிகாரம் மிகவும் அவசியம். 12 சனிக்கிழமைகள், மண் அகலில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ பிரதோஷ காலமாகிய மாலையில், 5 எள் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால் போதும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-3, 7-10, 17-19, 24-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 14 காலை முதல், 15, 16 இரவு வரை.

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

உங்கள் ராசி நாதனாகிய குரு பகவான், வாக்கு, தனம், குடும்பம் ஆகிய
இடத்தில் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், வருமானத்திற்குக் குறைவிராது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். ஜென்ம ராசியில் ராகு அமர்ந்திருக்கும் நிலையில், ஏழரைச் சனிக் காலம் ஆரம்பித்துவிட்டதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வீண் கவலைகளையும் தேவையற்ற அலைச்சல்களையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

வெளியே செல்லும்போது, எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
ஏனெனில், சிறு விபத்து ஏற்படக்கூடும். களத்திர ஸ்தானத்தில் கேது நிலைகொண்டிருப்பதால், மனைவியின் உடல் நலனில் கவனம் வேண்டும்.
லாப ஸ்தானத்தில், செவ்வாய் இருப்பதால், பூமி சம்பந்தமான சொத்துக்களால் லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

சனிக்கிழமைகளில், உபவாசமிருப்பது, மிகச் சிறந்த பரிகாரமாகும்.
இயலாதவர்கள், 12 சனிக்கிழமைகள் திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ 5அல்லது 12 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால் போதும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-4, 10-12, 14, 15, 20-23, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 16 இரவு முதல், 17, 18 வரை.

Leave a Comment

error: Content is protected !!