பிப்ரவரி மாத ராசிபலன் 2024
பிப்ரவரி மாத ராசிபலன் 2024 மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)’
மாத கோள்களான சூரியன், புதன் 10, 11 ல் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் 9,10ல் சஞ்சரிப்பதாலும் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். தாராள தன வரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மை அடையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
பலன் தரும் பரிகாரம்
துர்க்கை வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டம தினங்கள்
4.2.2024 அதிகாலை 1.04 மணி முதல் 6.2.2024 காலை 7.35 மணி வரை
ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குரு,சனி சாதகமற்று சஞ்சரித்தாலும், ராகு 11-ல் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். பணம் கொடுக்கல்-வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திக்கும் நேரம் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மாத தொடக்கத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும், மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும்.
பலன் தரும் பரிகாரம்
குரு பகவான் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டம தினங்கள்
6.2.2024 காலை 7.35 மணி முதல் 8.2.2024 காலை 10.04 மணி வரை
மிதுனம்
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 8-ல் சூரியன், 7,8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சில இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. குரு 11-ல் இருப்பதால் பொருளாதார நிலை சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், கடந்த கால பொருட்தேக்கம் விலகும் நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறலாம்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி 2023 to 2026-மீனம் பலன்கள் மற்றும் பரிகாரம்
பலன் தரும் பரிகாரம்
சிவனையும் மகாவிஷ்ணுவையும் வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டம தினங்கள்
8.2.2024 காலை 10.04 மணி முதல் 10.02.2024 காலை 10.02 மணி வரை
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
உங்கள் ராசிக்கு 7 ,8-ல் சூரியன், 5-ம் தேதி முதல் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பல விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும், கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பல அதிகரிக்கும்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி 2023 to 2026-கும்பம் பலன்கள் மற்றும் பரிகாரம்
பலன் தரும் பரிகாரம்
பெருமாள் வழிபாடு சிவ வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டம தினங்கள்
10.2.2024 காலை 10.02 மணி முதல் 12.2.2024 காலை 9.35 மணி வரை
சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)
குரு 9-ல் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து பொருளாதாரம் மேம்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
பலன் தரும் பரிகாரம்
சித்திரகுப்தர் வழிபாடு அம்மன் வழிபாடு நன்மை தரும்
சந்திராஷ்டம தினங்கள்
12.2.2024 காலை 9.35 மணி முதல் 14.2.2025 காலை 10.43 மணி வரை
கன்னி
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு அற்புதமாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றி பெற முடியும். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கைகூடும். உத்தியோகத்தில் வேலை பளு குறைந்து நிம்மதி ஏற்படும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
பலன் தரும் பரிகாரம்
விநாயகரையும் , துர்க்கை அம்மனையும் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டம தினங்கள்
14.2.2024 காலை 10.43 மணி முதல் 16.2.2024 பகல் 2.43 மணி வரை
துலாம்
சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் பெறுவீர்கள். எவ்வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலம் கூடும். அசையா சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைவீர்கள். சூரியன், செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அளச்சல்கள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும்.
பலன் தரும் பரிகாரம்
சிவ வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டம தினங்கள்
16.2.2024 பகல் 2.43 மணி முதல் 18.2.2024 இரவு 9.54 மணி வரை
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம்,கேட்டை வரை)
மாதம் முற்பாதியில் 3-ல் சூரியன், 5-ம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அணுகூலமான பலன்கள் உண்டாகும். குரு 6-ல் இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாகவே இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோசகர்களுக்கு வேலை பளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
பலன் தரும் பரிகாரம்
ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது
சந்திராஷ்டம தினங்கள்
18.2.2024 இரவு 9.54 மணி முதல் 21.2.2024 காலை 7.44 மணி வரை
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செவ்வாய்1,2ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும். வெளியூர் பயணம் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.
பலன் தரும் பரிகாரம்
நரசிம்மரையும் முருகரையும் வழிபடுவது நல்லது
சந்திராஷ்டம தினங்கள்
21.2.2024 காலை 7.44 மணி முதல் 23.2.2024 இரவு 7.25 மணி வரை
மகரம்
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
ஜென்ம ராசிக்கு 1,2ல் சூரியன், புதன் 2-ல் சனி 5-ம் தேதி முதல் ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு, பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ராகு மூன்றில் இருப்பதால் பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது உத்தமம்.
பலன் தரும் பரிகாரம்
சிவ வழிபாடு செய்வது நன்று
சந்திராஷ்டம தினங்கள்
23.2.2024 இரவு 7.25 மணி முதல் 26.2.2024 காலை 8.11 மணி வரை
கும்பம்
(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
ஜென்ம ராசியில் சனி, 12-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் தோன்றும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது, முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலை பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம்.
பலன் தரும் பரிகாரம்
சனி கிழமை சனி ஓரையில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு
சந்திராஷ்டம தினங்கள்
26.2.2024 காலை 8.11 மணி முதல் 28.2.2024 இரவு 9.00 மணி வரை
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
உங்கள் ராசிக்கு 10 ,11-ல் செவ்வாய், சுக்கிரன் மாத முற்பாதியில் 11-ல் சூரியன்,2-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெற்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தாலும் அவற்றை திறமையாக சமாளித்து நல்ல பெயர் எடுப்பார்கள்.
பலன் தரும் பரிகாரம்
அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்
1.2.2024 பகல் 2.32 மணி முதல் 4.2.2024 அதிகாலை 1.04 மணி வரை மற்றும் 28.2.2024 இரவு 9.00 மணி முதல் 2.3.2024 காலை 8.17 மணி வரை