திருக்கராகம்
‘இந்த உடல் -மனம் பொருள் எல்லாம் பெருமாளுக்குச் சொந்தம். ஏன் இந்த உலகமே பெருமாளுக்குத்தான் சொந்தம் அவன் உலகளந்தவனாயிற்றே. அந்த உலகளந்த பெருமான் அதோடு மாத்திரம் விடவில்லை. இன்னும் ஏராளமான அதிசயங்களை தம் பக்தர்களுக்காகச் செய்திருக்கிறார். அதுவும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ளிருந்தே என்றால் நாம் ஆச்சரியப்படாமல் என்ன செய்ய முடியும்?
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் இரண்டாவது தென் பிரகாரத்தில் தனக்கென்று ஒரு சன்னதியை அமைத்துக் கொண்டு அருள் பாலித்து வருகிறார் திருக்காரகப் பெருமாள்.
மூலவரின் திருநாமம்: கருணாகரப் பெருமாள் |
தாயார்: பத்மாமணி நாச்சியார் |
தீர்த்தம்: அக்ராய தீர்த்தம் |
அக்ராயர் என்ற அரசனுக்கு ஏற்பட்ட கொடுநோய் குணமாகாமல் தவித்த பொழுது இந்த தலத்தில் உள்ள புஷ்கரணியில் நீராடி கருணாகர பெருமாளை பிரார்த்தனை செய்தால் கொடிய நோய் விலகிவிடும் என்று சொன்னதின் பேரில் இந்த ஸ்தலத்துக்கு வந்தார் அக்ராயர். பிறகு தனக்கென்று ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் நீராடி பெருமாளை பிரார்த்தனை செய்தார். பெருமாளும் அக்ராயருக்கு தரிசனம் கொடுத்து அவரது தீராத வியாதியை நீக்கியதாக ஒரு செவி வழி செய்தி.
முனிவர்களுள் தனக்கென்று ஒரு தனியிடம் வகித்து வந்த கார்ஹ முனிவரது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கருணாகர பெருமாள் பிரத்யஷம் ஆன ஸ்தலம் என்ற பெருமையும் உண்டு.
“தொண்டை மண்டல திவ்ய தேசங்களில் முன்னிலை வகிக்கிறது. திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம்”.
பரிகாரம்
ஒருவன் புண்ணியம் செய்தவனா, இல்லை பாவம் செய்தவனா என்பதை அவனுக்கு வந்திருக்கும் நோயை வைத்து சொல்லிவிடலாம் என்று சொல்வதுண்டு. தீராத நோய் என்று வந்தால் மருத்துவரிடம் செல்வதை விட திருமாலிடம் சரணடைவது தான் மிகுந்த புத்திசாலித்தனம். அக்ராயர் அப்படி செய்துதான் நோயிலிருந்து குணமானார். தீராத நோய் கொண்டவர்கள், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோயாளிகள், எதிர்பார்த்து ஏமாந்து போனவர்கள், அதிர்ச்சியினால் பேச முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள், நரம்புத் தளர்ச்சி, தோல் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து கருணாகர பெருமாளை முறைப்படி வணங்கி பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய தீராத வியாதிகள் மட்டுமல்ல மனக்குறைகளும் விலகி வாழ்வாங்கு வாழ்வார்கள்.
கோவில் இருப்பிடம் :