டிசம்பர் மாத ராசி பலன் -2024
மேஷம்
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும், குரு வக்ரகதியில் இருப்பதும் தேவையற்ற நெருக்கடிகள் வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு என்றாலும், சனி 11-ல் இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால்தான் நற்பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
பலன் தரும் வழிபாடு
சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
ரிஷபம்
ஜென்ம ராசியில் குரு, 7,8ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. செவ்வாய் 3ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பண வரவுகளில் ஏற்ற-இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும், அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள்.
பலன் தரும் வழிபாடு
சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
மிதுனம்
குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும்,மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எந்தவித நெருக்கடியும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் வேலை ஆட்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில், எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பலன் தரும் வழிபாடு
முருகரையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.
கடகம்
உங்கள் ராசிக்கு 3ல் கேது, 7ல் சுக்கிரன் மாத பிற்பாதில் 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கூட்டாளிகளை கலந்தாலோசித்து முடிவு எடுப்பதன் மூலம் நற்பலன்களை அடைய முடியும். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பலன் தரும் வழிபாடு
அஷ்டலட்சுமி வழிபாடு சிறப்பு.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 4, 5-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத் தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. கொடுக்கல் & வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருக்கவும். குரு வக்ரகதியில் இருப்பதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் காரியங்களில் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
பலன் தரும் வழிபாடு
சிவ வழிபாடு உத்தமம்.
கன்னி
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 11-ல் செவ்வாய். மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவீர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்த நெருக்கடிகள் குறைந்து அடையவேண்டிய இலக்கை அடையமுடியும் பல பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகளைப் பெற முடியும்.
பலன் தரும் வழிபாடு
துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.
துலாம்
ராசியாதிபதி சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள் தொழில், வியாபாரம் செய்பவர்கள் லாபகாமான பலனை அடைவீர்கள் வெளியூர் தொடர்புகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைவாக இருக்கும்.
பலன் தரும் வழிபாடு
விநாயகர் வழிபாடு செய்வது. மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
விருச்சிகம்
ஜென்ம ராசி மற்றும் 2-ல் சூரியன். 4-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதிகுறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம்தேவை பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். மாத பிற்பாதியில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பலன் தரும் வழிபாடு
முருகரையும் அம்மனையும் வழிபாடு செய்வது உத்தமம்.
தனுசு
உங்கள் ராசிக்கு 3-ல் சனி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும் புதியவாய்ப்புகள் தேடிவரும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள்.
பலன் தரும் வழிபாடு
துர்க்கை வழிபாடு முருகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மகரம்
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 3-ல் ராகு இருப்பதால் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பலன் தரும் வழிபாடு
ஆஞ்சநேயர், பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து புதியவாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறை யும். 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவிஷயத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் எதையும் எதிர்கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிட்டும்.
பலன் தரும் வழிபாடு
ஆஞ்சநேயரையும், அம்மனையும் வழிபாடு செய்வது சிறப்பு.
மீனம்
உங்கள் ராசிக்கு 9. 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தைபெற எதிர்நீச்சல் போடவேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.
பலன் தரும் வழிபாடு
முருகரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது.