கை ரேகை
கைரேகை சாஸ்திரம் குழந்தை பாக்கியம் குறித்த ரேகை-மேடு அமைப்புகளே விளக்குகிறது. அதன்படி தம்பதி இருவருக்கும் புத்திர காரகன் என்று அழைக்கப்படும் குருவுக்கு உரிய மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.
இதய ரேகையை நேர் கோடு போல செங்குத்தாக அமையாமல், படத்தில் காட்டியுள்ளபடி புதன் மேட்டுக்கு கிழே கிளைகளுடன் அமைந்து, புதன், சூரியன், சனி மேடுகளை கடந்து குரு மேட்டில் மையப்பகுதியில் கிளையுடன் அமர்ந்திருக்க வேண்டும்.
திருமண ரேகை நல்ல நீளமாகவும் தெளிவாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் திகழ அதன் மீது தெளிவான செங்குத்துக் கோடுகள் (குழந்தைரேகை) காணப்பட வேண்டும்.
சுக்கிர மேடு குறுக்குக் கோடுகள் இல்லாமல் நன்கு உருண்டு திரண்டு பரந்து விரிந்து காணப்படவேண்டும். இது போன்ற அமைப்பு ஒருவருக்கு அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் உண்டு என அறியலாம்.