மச்சம்
நெற்றியில்மச்சம் அமைவது விசேஷமான நிலை. ஞானத்திற்கான அம்சம், விருப்பம்போல் வாழ்க்கை அமையும், மனைவியின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
வலது கண் புருவத்தில் மச்சம் அமைந்திருப்பின் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் கொடுக்கும்.
இடது கண்ணில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள், பிறருக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள்.
மூக்கில் மச்சம் இருக்கும் நபர்கள் முன்கோபிகளாக இருப்பார்கள், கனிவான பேச்சு இருக்காது, எப்போதும் ‘சிடுசிடு’வென பேசுவார்கள். மனைவி மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள்.
பெண்களுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் சேவா மனப்பான்மை பெற்றிருப்பார்கள். அணிமணிகள் விருப்பம் இருக்காது.
உதடுகளில் மச்சம் அமையப் பெற்று இருக்கும் நிலை பெரும் செல்வத்தை குறிக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும். கட்டடக்கலை சிற்பக்கலை, ஓவியக்கலை,நாடக கலை போன்ற ஏதாவது ஒன்றில் பெரும்புகழை இவர்கள் எய்த கூடும்.