சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – ரிஷபம்
(கிருத்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி 1,2,3,4ம் பாதம்,மிருகசீரிடம் 1,2ம் பாதம்)
மகாலக்ஷ்மியின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!! இதுவரையில் ரிஷப ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், அவர் அமர்ந்த இடத்தில் வழங்கிய நற்பலன்களை விட அவர் பார்த்த இடங்களுக்கு வழங்கிய பாதகமான பலன்களை அதிகம்.
ரிஷப ராசி
இதன் அதிபதி: சுக்ரன்
உருவம்:மாடு
வகை: ஸ்திர ராசி.
குணம்: அமைதி
தத்துவம்: நிலம்
திசை:தெற்கு
நிறம்: வெள்ளை
கடவுள்:மீனாட்சி
குறிப்பு : சுக்ரன் ஆட்சியும்,சந்திரன் உச்சமும் அடைவார்.
சனி பகவான் நட்சத்திர சஞ்சார பலன்கள்
சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பலமான குழப்ப எண்ணம் தோன்றும் . வேலை பார்க்கும் இடத்தில் அல்லது வியாபாரத்தில் மிக மிக முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நெருக்கடி இருக்கும். மனதில் சஞ்சலம் அலை மோதும் . பலரிடம் யோசனை கேட்க தேவை இருக்கும். பணத் தட்டுப்பாடு இருக்கும். நிதானமே நல்ல துணை. பல் தொடர்பான அல்லது வாய் தொடர்பான உபாதைகள் அடிக்கடி வரும். ஆனால் பாதகமில்லாத வகையில் அவை சரியாகும்
பழைய உறவுகள் புதுப்பிக்கப்படும். முன்பு தவறாகப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வருந்துவார்கள். மன்னிக்கும் வாய்ப்பு கிடைக்கும் காலம். நட்புகளில் இருந்த / உறவுகளில் இருந்த கருத்து மாற்றங்கள் வேறுபாடுகள் குறையும். சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது கிடைக்கும் பல நல்ல விஷயங்கள் பெரிய பலமாக இருக்கும் .
உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலகட்டம் மனதில் தைரியமும் உற்சாகமும் இருக்கும். ஆனால் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய அளவுக்கு உத்வேகம் இருக்காது காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருக்கும். ஆனால் அவற்றை நடவடிக்கையாக செய்வதற்கு பல தயக்கங்கள் இருக்கும் காலகட்டமாக உத்திரட்டாதி சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு மனக்குழப்பம் இருக்கும்
வீடு, மனை , வாகனம் அமையும் காலமாக அமையும். சுப செலவுகள் அமையும் இந்த அமைப்பும் பல மன தயக்கங்களுக்குப் பிறகு கைகூடும். திருமணம் தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகர்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் பல குழப்பங்களுக்கிடையில் தான் முடிவு எடுக்க வேண்டி இருக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.

சனி ரேவதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் பயணம் அவசியமாக ஏற்படும் ஆனால் விபத்து நடக்க வாய்ப்பு உண்டு . பிறரின் பொறாமை , பகை ஏற்படும் . ஆகவே வார்த்தைகளில் உரையாடலில் கவனம் மான உரையாடல் கூட சண்டையாக மாறிவிடும் காலகட்டம் இது ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025

இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம், மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
கும்பசனி உங்கள் முன்னேற்றத்திற்கு தடைகளையும், உடல் உபாதைகளையும், செல்வாக்கு ,கௌரவம் போன்றவற்றிற்கு பங்கத்தையும், வீட்டிலும், வெளியிலும் பிரச்சனைகளையும், பண பற்றாக்குறையும், வருமானத்தில் சிரமத்தையும் வழங்கி உங்களை ஆட்டிப்படைத்து இருப்பார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் வருமானத்தில் சங்கடம், குடும்பத்தில் பிரச்சனை, உடலில் சங்கடம், மனதில் துயரம், கண்டம் என்று அவதிப்பட்ட உங்களுக்கு 29.03.2025 முதல் ராசிக்கு 11 ஆம் வீடான லாப ஸ்தானமான மீன ராசியில் பிரவேசம் செய்யவிருக்கிறார் சனி பகவான்.
சனிபகவான் 12 வீடுகளில் சஞ்சரித்து வரும்போது அவர் சஞ்சரிக்கும் வீடுகளுக்கு ஏற்ப ஒரு ஒரு ராசிக்கும் ஒரு பலன்களை வழங்குவார் என்றாலும் எல்லா ராசியினருக்கும் 3,6,11 வீடுகளில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த வீட்டிற்குரிய பலன்களை யோகப் பலன்களாக வழங்கி வாழ்வின் மேல் மட்டத்திற்கு அந்த ராசியினரை கொண்டு செல்வார் சனி பகவான்.
ரிஷப ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் உரியவர் சனி பகவான். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பத்தாமிடமான தொழிற்ஸ்தானத்தில் சஞ்சரித்து அவர் அமர்ந்த இடத்திற்கு வழங்கிய நற்பலன்களை விட பார்த்த இடங்களுக்கு வழங்கிய பாதகமான பலன்களை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் 29.03.2025 மாலை 09.44 மணி முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகும் சனி பகவான் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கப் போகிறார்.
தனவரவு இந்த காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். எண்ணியவை யாவும் எளிதில் முடியும். பதவி, பாராட்டு, பரிசு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். எல்லாவகையிலும் ஒருவிதமான மகிழ்ச்சியான சூழ்நிலையை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இது மிகவும் வாய்ப்பான காலம்.
சிலருக்கு அன்னிய பெண்கள் மூலம் லாபம் ஏற்படலாம். மூத்தவர்கள் வகையில் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். நம்பிக்கையோடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கலாம். எண்ணியவை யாவும் ஈடேறும். இழந்த பொருள் மீண்டும் வரும்.இளம் பெண்கள் தொடர்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம், ஒப்பந்த தொழிலாளர் உயர்வு போன்ற நல்ல பலன்கள் ஏற்படும்.
சனிபகவானின் மூன்றாம் பார்வை பலன்கள்
சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் உங்களது ராசியை பார்க்கிறார். ஆகையால் உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற வீண் விவாதங்களில் பங்கெடுக்க வேண்டாம். மேலும் யாரிடமும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சனியின் ஏழாம் பார்வை பலன்கள்
தனது ஏழாம் பார்வையால் உங்கள் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தை பார்க்கும் சனி பகவானால் புத்திரர்-புத்திரிகளால் வேதனைகளை சந்திக்க வேண்டிய நிலையும், குடும்பத்தில் குழப்பமும், பூர்வீக சொத்துகளில் பிரச்சனையும், சண்டை, சச்சரவுகளும் உண்டாகலாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழப்பத்தில் சிக்கித் தவிப்பீர்கள். வேதனை தரும் நிகழ்ச்சிகளால் அதிர்ச்சிக்கு ஆளாகலாம்.
சனியின் பத்தாம் பார்வை பலன்கள்
தனது பத்தாம் பார்வையால் உங்கள் ஆயுள் ஸ்தானத்தை பார்க்கும் சனிபகவானால் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பல்வேறு இடர்பாடுகளும் ஏற்படும். இவையெல்லாம் ராசிக்கு 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஸ்தான பலனும், பார்வை பலன்களால் உண்டாகும் பலன்களும் ஆகும். என்றாலும் 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவானால் உங்கள் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.
ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3,4 ம் பாதம் இவற்றில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பலமான குழப்ப எண்ணம் தோன்றும் . வேலை பார்க்கும் இடத்தில் அல்லது வியாபாரத்தில் மிக மிக முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நெருக்கடி இருக்கும். மனதில் சஞ்சலம் அலை மோதும் . பலரிடம் யோசனை கேட்க தேவை இருக்கும். பணத் தட்டுப்பாடு இருக்கும். நிதானமே நல்ல துணை. பல் தொடர்பான அல்லது வாய் தொடர்பான உபாதைகள் அடிக்கடி வரும். ஆனால் பாதகமில்லாத வகையில் அவை சரியாகும்
பழைய உறவுகள் புதுப்பிக்கப்படும். முன்பு தவறாகப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வருந்துவார்கள். மன்னிக்கும் வாய்ப்பு கிடைக்கும் காலம். நட்புகளில் இருந்த / உறவுகளில் இருந்த கருத்து மாற்றங்கள் வேறுபாடுகள் குறையும். சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது கிடைக்கும் பல நல்ல விஷயங்கள் பெரிய பலமாக இருக்கும் .
உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலகட்டம் மனதில் தைரியமும் உற்சாகமும் இருக்கும். ஆனால் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய அளவுக்கு உத்வேகம் இருக்காது காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருக்கும். ஆனால் அவற்றை நடவடிக்கையாக செய்வதற்கு பல தயக்கங்கள் இருக்கும் காலகட்டமாக உத்திரட்டாதி சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு மனக்குழப்பம் இருக்கும்
வீடு, மனை , வாகனம் அமையும் காலமாக அமையும். சுப செலவுகள் அமையும் இந்த அமைப்பும் பல மன தயக்கங்களுக்குப் பிறகு கைகூடும். திருமணம் தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகர்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் பல குழப்பங்களுக்கிடையில் தான் முடிவு எடுக்க வேண்டி இருக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்
சனி ரேவதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் பயணம் அவசியமாக ஏற்படும் ஆனால் விபத்து நடக்க வாய்ப்பு உண்டு . பிறரின் பொறாமை , பகை ஏற்படும் . ஆகவே வார்த்தைகளில் உரையாடலில் கவனம் மான உரையாடல் கூட சண்டையாக மாறிவிடும் காலகட்டம் இது ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
ரிஷப ராசியில் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்
சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல செய்தி வரும். அது பெரும்பாலும் சுப காரியம் தொடங்கும் விஷயமாக இருக்கும். சிலருக்கு அயல் நாட்டு வேலை வாய்ப்பு அல்லது அயல் நாட்டு வியாபாரத் தொடர்பு கிடைத்து செல்வம் கிடைக்கும். அது திடீர் அதிர்ஷ்டம் போல அமையும் . புதிய முயற்சிகளில் நல்ல துணை & ஆலோசனை கிடைக்கும். ஆகவே அதற்கு ஏற்ப திட்டமிடலாம் , இந்த மாதிரி முயற்சிகளை வேகமாக முடிக்க வேண்டும் . கால தாமதம் செய்யக் கூடாது
சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் இந்த நட்சத்திர பெண் ஜாதகர்கள் நஷ்டத்தினை சந்திப்பார்கள் நெருக்கமான உறவுகளுக்கு உடல் நலத்தில் வரும் தொந்தரவினால் இவர்கள் சங்கடம் அடைவார்கள். இதன் காரணமாக அதிக பொருள் செலவும் விரயமும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிள்ளைகள் உடன் உறவு பாதிக்கும் . பிள்ளைகள் காதல் அவர்கள் திருமணம் தொடர்பான முடிவு எடுக்கும் காலகட்டம் ஆனால் இவற்றில் அதிகம் சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும் கண் பார்வை தொடர்பான சிகிச்சை எடுக்கும்படி ஆகும்.
சனி ரேவதி சாரத்தில் இருக்கும் போது சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை இருந்த பல சிக்கல்கள் விலகும ஆனால் அவை சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் நிவாரணம் . காரணம் சனி மேஷத்தில் வரும் போது துன்பம் அதிகமாகும்
பொதுவில் இந்த சனி பெயர்ச்சி ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாதாகமானது இல்லை.
ரிஷப ராசியில் மிருகஷீரிஷம் 1,2ம் பாதங்கள் இவற்றில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பூரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது அதிகம் சிரமம் . ஏற்கனவே தொடங்கி நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கும் பல நல்ல விஷயங்களில் முட்டுக்கட்டையை சனி உண்டாக்குவார் சிலருக்கு தாங்கள் ஆசையாக தொடங்கிய பல வேலைகளை கைவிடும் படி சங்கடமான சூழ்நிலைகளை சனி பூரட்டாதிசாரத்தில் இருக்கும்போது உருவாக்குவார். மன உறுதியுடன் எதிர்கொண்டால் மட்டுமே இந்த சங்கடத்தை எதிர்கொள்ள இயலும். பண விரயம் பணம் தட்டுப்பாடு போன்றவற்றை இந்த காலகட்டத்தில் சனி இடம் இருந்து எதிர்பார்க்கலாம்.
பொருள் விரயம் மட்டும்தான் இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் சீரான நிலைமை இருக்கும் உடல் உபாதைகள் தவிரபெருமளவு ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும் என்று சொல்லலாம்
சனி பகவான் உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும்போது ரிஷப ராசி மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்கள் நல்ல காலத்தை அனுபவிப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம். பல நல்ல முன்னேற்றங்கள் கண்கூடாக காணக் கிடைக்கும். இது தவிர வீட்டில் சுப காரியங்கள் கைகூடி வரும் பிள்ளைகளின் கல்வியில் அதிக உயர்வு எதிர்பார்க்கலாம் புத்திர பாக்கியம் அமையாமல் அதற்குண்டான முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதற்குரிய நல்ல செய்தி அவசியம் கிடைக்கப் பெறுவார்கள் சனி இந்த கருணையை அவர்களுக்கு அவசியம் செய்கிறார்
உத்திரட்டாதி சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது ரிஷப ராசி மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்கள் செல்வாக்குள்ள உதவி பெறுவார்கள் பெரிய மனிதர்கள் தொடர்பு வியாபாரத்தில் முன்னேற்றம் இறை அவசியம் எதிர்பார்க்கலாம் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் உதவியை தக்க வைத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் காலத்தில் பெரிய அளவு ஊன்றுகோலாக இந்த உதவிகள் அமையும் காரணம் சனியின் பார்வையால் தூண்டப்படும் நட்சத்திர தார பலன் இந்த அமைப்பை உருவாக்கித் தருகிறது எனவே இதை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரிஷப ராசிக்கு சனி வக்ர பலன்கள்
2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர நிலை .இதில் உங்கள் தொழில் வேகம் சற்று மட்டுப்படும். என்னடா இது, நல்லா போயிட்டிருந்த தொழில் ஒரே இடத்தில் நிற்கிறதே எனத் தோன்றும். ஆனால் வக்ரநிவர்த்தி ஆனவுடன் தொழில் வேகம் எடுக்கும்.
2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ர நிலை அடைவார். அந்த நாட்களில், உங்கள் தொழில், வேலை வேகம் மெதுவாகும். எத்துனை முயற்சி செய்தாலும் விறுவிறுப்பு வராது. வக்ரநிவர்த்தி ஆனவுடன் பழைய சுறுசுறுப்பு வந்துவிடும்.
வக்ர சனி காலத்தில், திருக்குவளை கோளிலிநாதரை வணங்கவும்
பரிகாரம்
ஒரு முறை சனி கிழமை சனி ஓரையில் திருக்கொள்ளிக்காடு சென்று சனி பகவானை வழிபாட்டு வரவும்.முடிந்த வரை உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யவும்.