சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – மேஷம்
(அஸ்வினி 1,2,3,4ம் பாதம்,பரணி 1,2,3,4ம் பாதம்,கிருத்திகை 1ம் பாதம்)
எந்த ராசிக்கும் 12, 1, 2-ஆமிடங்களில் கோட்சார சனி சஞ்சரிக்கும்போது, அது ஏழரைச்சனி என்றழைக்கப்படும். இப்போது மேஷ ராசியின் 12-ஆமிடத்தில் சனி வந்திருப்பதால், உங்களுக்கு விரயச்சனி ஆரம்பிக்கிறது. இதன்மூலம் மேஷ ராசியினர் ஏழரைச்சனியின் பிடிக்குள் வந்துள்ளீர்கள். இங்கிருந்து 12-ஆம் வீட்டில் சனி பூரட்டாதி,உத்திரட்டாதி ,ரேவதி எனும் நட்சத்திரங்களில் பயணித்துப் பலன் தருவார். சனி உங்களின் 12-ஆமிடத்தில் அமர்ந்து, 2, 6, 9-ஆமிடங்களைப் பார்வையிடுவார்.
மேஷ ராசி
இதன் அதிபதி: செவ்வாய் .
உருவம்:ஆடு
வகை: சர ராசி.
குணம்: கோபம்
தத்துவம்: நெருப்பு
திசை:கிழக்கு
நிறம்: சிவப்பு
கடவுள்:முருகன்
குறிப்பு :சூரியன் உச்சமும் சனி நீசமும் அடைவார்.

சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம், மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

விரய சனி
இந்த சனிப்பெயர்ச்சியில் எந்த செயலும் எடுத்தோம் முடித்தோம் என இருக்காது. ஒரு விஷயத்தை ஒருமுறை அலைச்சலில் முடிக்க முடியுமானால், இந்த காலகட்டத்தில் பத்துமுறை அலைந்தால்தான் முடிக்கமுடியும்.
உங்களுக்கும் ஒரு செயலைச் செய்தால் முழு திருப்தி கிடைக்காது.எந்த செயலையும் தெளிவாகச் செய்ய இயாது எல்லாவற்றையும் குளறுபடி ஆக்குவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் வந்தவுடன் பிறர் அலறுவர் நிறைய வேண்டாத பணச் செலவை இழுத்துவிட்டு விடுவீர்கள்.உங்களின் மாறும் மனோ வேசத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வீட்டினர் கடுப்படைவார்கன். வீட்டில் இதனால் சண்டை ஏற்படும். ஏழரைச்சனியும், அப்பாடா, நம்ம வேலை ஒழுங்கா நடக்கிறது’ என மிக மகிழ்வார்.
சனி 3-ம் பார்வைப் பலன்
சனி தனது மூன்றாம் பார்வையால் மேஷ ராசியின் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். இதுவரையில் சற்று மென்மையாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது கர்ண கடுரமாகப் பேசுவர், இவர்களின் சொற்கள் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். பேச்சுமூலம் சம்பாத்தியம் கொண்டிருந்தவர்கள், எதிர்மறையாகப் பேசுவதால் பணவரவு குறையும்.
வீட்டில் சிலபல பிரிவினை உண்டு. உங்கள் இளைய சகோதரி மற்றும் உங்கள் தந்தை உங்களைவிட்டு வேறிடம் செல்லக்கூடும். உங்களிடமிருந்து கடன் வாங்கியவர்கள். ‘கடன் வாங்கவில்லை’ என உங்கள்மீதே சத்தியம் செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பர் கைபேசித் தகவல்கள், உங்கள் வங்கிப் பணத்தைத் துடைத்தெறியும்.
ஆட்டோ ஓட்டுனர்; அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லும் குட்டியானை, மாட்டுவண்டி மூன்று சக்கர சைக்கிள் வண்டி. பாரவண்டி என இதுபோன்று சிறுரகவாகனங் களைக் கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். உயிருக்கு பாதிப்பில்லை எனினும், சிறு விபத்து, சிராய்ப்பு உண்டு உங்கள் பணம் திருட்டுப் போகும் வாய்ப்புண்டு கார்டின் பின் தம்பரை யாருக்கும் கூறவேண்டாம் பாங்கில் அக்கவுண்ட் பணம் இருக்காது கவனம் தேவை.
சனி 7-ஆம் பார்வைப் பலன்
மேஷ ராசிக்கு 12-ல் அமர்ந்த சனி தனது ஏழாம் பார்வையால் 6-ஆமிடத்தைப் பார்க்கிறார்.ஆமிடம் என்பது குண. ரோக எதிரி ஸ்தானம் சனி பார்க்கும் இடம் பலன்களை அழிப்பார் என்ற விதிப்படி. உங்களின் கடன்கள் தீர்ந்துவிடும். அரசு உத்தரவால் சில கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அரசியல்வாதிகளின் சில ஜப்தி செய்யப்பட்ட சொத்து திரும்பக் கிடைக்கும். அரசாங்க வேலையில் டிஸ்மிஸ் ஆகியிருந்தால், சிலபல செலவுகள் மூலம் பதவி திரும்பக் கிடைக்கும்.
வயிற்றுவலி, காதுவலி சரியாகும் வட்டித்தொல்லை நீங்கும். வாடகைப் பிரச்சினை சரியாகும் சமையல் கலைஞர்களுக்கு ஏற்பட்ட இடையூறு சரிசெய்யப்படும். மூத்த சகோதரனுக்கும். உங்களுக்கும் ஏற்பட்டிருந்த பகை தீர்க்கப்படும்.உங்களில் ஒருசில பெண்களுக்கு, வேலை செய்யமிடத்தில் ஏற்பட்டிருந்த ஒரு அவமானம் முற்றிலும் நீங்கிவிடும் சிலரின் மாங்கல்ய பிரச்சினை சரியாகும்.ஆனால் அரசு வேலை கிடைக்குமென்று மட்டும் கண்டிப்பாக எதிர்பார்க்காதீர்கள். அரசு வேலை No தான்.
சனி 10-ஆம் பார்வைப் பலன்
சனி மேஷ ராசியின் 12-ஆமிடத்தில் அமர்ந்து தனது பத்தாம் பார்வையால் உங்களின் 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். 9 ஆமிடம் என்பது தந்தையைக் குறிப்பது எனவே தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. தொழில் முறையில் அதிர்ஷ்ட நிகழ்வுகள் சற்றே சுருங்கினாற்போல் இருக்கும். உங்களின் கடவுள் நம்பிக்கை சற்றே குறையும். இதற்கு உங்கள் குடும்பத்தினர் காரணமாவர்.
உங்கள் திருமணம் முடிய. உங்கள் தந்தை இடையூறாக இருப்பார். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். சிலர் ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கொள்வர். பதவி உயர்வு போக்குக்காட்டும்.
கல்வி விஷயம் சற்று முன்பின்னாக அமையும் உயர்கல்வி விஷயம் நன்மை தராது. வாழ்வின் உயரிய குறிக்கோளை அடைய தடையும் சிரமும் ஏற்படும். ஆலய வழிபாடுகளில், தவிர்க்கமுடியாத இடையூறு ஏற்படுவதால், மனக்கஷ்டம் அதிகரிக்கும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் சார பெயர்ச்சி பலன் :
சனி பூரட்டாதி 4 ம் பாத சாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலம், அவரது தாரை , வாத தாரை . சனி பூரட்டாதி 4 ம் பாத சாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலம். விபத்து , காயம், உண்டாக வாய்ப்பு உண்டு . மேலும் வழக்கு நிலுவையில் இருந்தால் சாதகமான சூழல் உருவாக்காமல் தாமதமாகும் . கல்வி மேம்பாட்டில் சுணக்கம் இருக்கும்.
வேலை பார்க்கும் இடத்தில் சச்சரவுகள் தொடங்கும். நண்பர்கள் பகைவர் ஆவர். சனியின் சஞ்சாரம் & பார்வை இதைக் கொண்டு கணிக்கையில் , உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உயரதிகாரிகளிடம் , கருத்து வேறுபாடு அதிகம் உண்டாகும், சனியின் பார்வை ராசிக்கு இரண்டு , ஆறு , ராசிகள் மீது தீர்க்கமாக இருப்பதால் அதில் இருக்கும் தாரைகளில் விபாத தாரை , பிரத்தியாரி தாரை சனியால் மிகவும் பலமாகும். இதனால் மேலதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயர் உண்டாவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உருவாகும். இதன் பாதிப்பினால் வேலையில் முன்னேற்றம் குறைவாக இருக்கும் பதவி உயர்வு போன்றவை எதிர்பார்க்க இயலாது பதவி உயர்வுகள் தடங்கல் ஆகும் ஆனால் ஆறுதலாக சில உதவிகள் அவசியம் உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து கிடைக்கும்
சனி உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சரிக்கும் போது அவசியம் பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும். கை தவறி போன பண உதவிகள் அல்லது வேறு வகையான உதவிகள் நிச்சயம் கை கூடி வரும். திருமண வாய்ப்புகள் தவறவிட்டிருந்தால் அவை சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது கை கூடி வரும். ஆறுதலான விஷயம் மேலும் பலமாகி சனி ரேவதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகள் மிகவும் பலமாக அமைந்து சிலருக்கு பெரிய ஆதாயத்தை கொண்டு வந்து சேர்க்கும் .
இந்த காலத்தில் அதாவது சனி மீனத்தில் இருக்கும் போது உருவாக்கும் அனைத்து தடைகளும் வருங்காலத்தில் பெரிய பலமான அஸ்திவாரத்திற்கு ஆரம்பம் என்று நிச்சயம் சொல்லலாம். காரணம் ராசிக்கு இரண்டு ஆறு ராசிகள் மீது சனி ஏற்படுத்தும் தாக்கம் பெரிய அளவு முன்னேற்றமான மாற்றத்தை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும்.
குடும்ப உறவுகள் சகஜ நிலைக்கும் சண்டைக்கு இடையில் அதிக முறை ஊஞ்சலாடும் அமைப்பாக இந்த சனி பெயர்ச்சி காலம் இருக்கும் திடீர் நட்புகள் உருவாகும் அவை ஆதாயம் தருவதாக இருந்தாலும் நீண்ட காலம் பயன் தருபவையாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சனிபகவான் அருளை பெற்றுத்தரும் சனைச்சர ஸ்தோத்திரம்!
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் சார பெயர்ச்சி பலன்
இந்த சனி பெயர்ச்சி காலத்தில் சனி பூரட்டாதி, உத்திரட்டாதி ரேவதி நட்சத்திர சாரங்களில் பயணிக்கும் போது அவரது சாதக தாரை, வாததாரை மித்ர தாரை என வரிசையாக அமைகிறது .
சனி பெயர்ச்சியின் தொடக்க காலம் இனிப்பாக தொடங்கினாலும் போகப்போக மிகுந்த கஷ்டங்களை கொடுக்கும் அமைப்பாக தான் காணப்படுகிறது.
முதல் மூன்று மாதங்களில் கிடைக்கும் நல்ல விஷயங்களை மிகவும் ஆராய்ச்சி செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆராயாமல் ஏற்றுக் கொண்டால் பின்னர் அவை பெரிய சிக்கலில் கொண்டு வந்து சேர்க்கும் அமைப்பாக காணப்படுகிறது
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்பவை செல்வம் இழத்தல் ,சொத்து இழப்பு போன்றவை தான் .வேலை அல்லது வியாபாரத்தில் பெரிய சிக்கல் இருக்கப் போவதில்லை அதே சமயத்தில் பெரிய அளவில் முன்னேற்றங்கள் எதுவும் இருக்கப் போவதில்லை புதிய முயற்சிகள் எதுவும் யோசிக்காமல் செய்யக்கூடாது .ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் விஷயத்திலும் அலட்சியம் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்.தெரிந்த விஷயம் என்றாலும் அதில் கண்ணுக்குத் தெரியாத புதிய எதிர்ப்புகள் உருவாகும் இந்த எதிர்ப்புகள் நிச்சயம் சமாளிக்க முடியாத அளவு பலமாக இருக்கும்
சனி பகவான் உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது எதிர்ப்புகள் மிக மிக பலமாக அமையும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும்போது நம்பிக்கை மோசடியால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே கவனம். புதிய கல்வித் தகுதிகள் அவசியம் சனி கொண்டு வந்து சேர்ப்பார் ஆரோக்கியம் சுமாரான அளவில் பாதிக்கப்பட்டு மீண்டும் சரியாகும்
சனி ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் இறுதி கட்டத்தில் திருமண தடைகள் நீங்கி திருமணத்தை சனியே நடத்திக் கொடுப்பார்.
கார்த்திகை ( முதல் பாதம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் சார பெயர்ச்சி பலன்
கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் அக்கறையுடன் கவனமுடன் இருக்க வேண்டிய காலம் என்று இந்த சனி பெயர்ச்சி காலத்தைச் சொல்லலாம்.
கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் எச்சரிக்கையான காலகட்டம் என்று நிச்சயமாக சொல்ல முடியும் காரணம் சனி சஞ்சாரம் செய்யும் நட்சத்திர பாத சாரங்களில் கார்த்திகைக்கு சாதகமான நட்சத்திர பாதசாரம் எதுவும் இல்லாத நிலையில் சனி தனது தீய பலன்களை அதிகம் கொடுக்கும் அமைப்பாக கார்த்திகை நட்சத்திர முதல் பாத அன்பர்களுக்கு அமைகிறது
வேலை பார்க்கும் இடத்தில் எதிர்ப்பு மிக மிக அதிகமாக இருக்கும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் அதிக நஷ்டத்தை சந்திக்க நேரிடும் மேலும் புதிய வியாபார வாய்ப்புகள் உருவாகாமல் போட்டி அதிகமாகி வேறு ஒருவருக்கு வியாபார வாய்ப்புகள் தட்டிப் போகும் நிலை உருவாகும்
லைசன்ஸ், அங்கீகாரம் பர்மிஷன் போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அரசாங்கத்தின் எதிர்ப்பு அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் எதிர்ப்பு இதை மிக அதிகமாக காணப்படும்
அது மட்டுமல்ல குடும்ப உறவுகளில் மிகவும் எச்சரிக்கையுடன் பேச்சு வார்த்தை இருக்க வேண்டும் வெளியில் இருக்கும் உறவுகளிடம் இருந்து அதிக தொந்தரவுகளை எதிர்பார்க்கலாம். வீட்டில் இருப்பவர்கள் உறவு நிலைகளில் அதிக மன சஞ்சலம் உருவாக்கும் காலமாக இந்த சனி பெயர்ச்சி காலம் கார்த்திகை முதல் பாத அன்பர்களுக்கு காணப்படுகிறது
இதன் காரணமாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும் சனி தமோ குணத்தை வளர்ப்பவர், ஆகவே குறைவாக பேசி எதிர்ப்புகளை குறைத்துக் கொள்வதுதான் சரியான வழியாக இருக்கும்.
சனியின் வக்ர பலன்கள்
2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைவார்.
2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைவார்.
மேஷ ராசியினருக்கு ஏழரைச்சனியில் விரயச்சனியாக நடப்பதால், மேற்கண்ட வக்ரச்சனி காலத்தில் உங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கவிடுவார். அலைச்சல், செலவு மட்டுப்படும். கொஞ்சம் நிம்மதி யாகக்கூட இருக்கமுடியும்.
வக்ரச் சனி காலத்தில், திருக்குவளை ஸ்தல கோளிலிநாதரை வழிபடவும்.
பலன் தரும் பரிகாரம்
குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபடுவது நல்லது. அருகிலுள்ள சனீஸ்வரர் சந்நிதி அர்ச்சகருக்கு சமையல் சம்பந்தமான உதவி, பாத்திரம் போன்றவற்றை கேட்டறிந்து உதவவும்.
சுந்தர காண்டம் 65-ஆவது சர்க்கம், சூடாமணியை அனுமன் கொடுத்தல் பாராயணம் நல்லது. வெற்றிலை, தென்னை மற்றும் காராம் பசு பராமரிப்பு நல்லது.