சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – துலாம் ராசி
(சித்திரை 3,4, சுவாதி 1,2,3,4 ,விசாகம் 1,2, 3ம் பாதம்)
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
துலா ராசியும் சனியும்
துலா ராசிக்கு சனி 4, 5-ன் அதிபதி. என வே,துலா ராசியாருக்கு, இவர் யோகாதிபதி ஆவார். இவர் இவ்வளவு நாளும், துலா ராசியின் 5-ஆமிடத்தில் அமர்ந்திருந்தார். இப்போது, 6-ஆமிடம் எனும் ருண, ரோக, எதிரி ஸ்தானத்திற்கு வந்து அமர்கிறார்.
சிம்ம ராசி
இதன் அதிபதி: சுக்ரன்
உருவம்: தராசு
வகை: சர ராசி
தத்துவம்: காற்று
நிறம்: கரு நீல நிறம்
கடவுள்: சரஸ்வதி
குறிப்பு : இங்கு சனி உச்சம் ,சூரியன் நீசம்.
சனி அமர்ந்த இடப் பலன்
தற்போது சனி, துலா ராசியின் 6-ஆமிடத் தில் அமர்ந்து, பலன் தரப்போகிறார். 6-ஆமிடம் என்பது, ஒரு கடன், வியாதி, எதிரி ஸ்தானம். எனினும் ஒரு பாவ கிரகம், ஒரு துர்ஸ்தானத்தில் மறைவது ஏற்புடையதே. நன்மையே கிடைக்கும். சனி பகவான், மீன ராசியில் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி எனும் நட்சத்திரங்களின் வழியே பலன் தருவார்.
2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை
இந்த ஒருமாத காலத்தில், சனி, துலா ராசியின் 6-ஆமிடத்தில் பூரட்டாதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார். எனவே இந்த மாதம் துலா ராசியினருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அது தகவல் தொடர்பு, கல்வி, கலை உலக எடிட்டிங் போன்ற வேலையாக அமையும். மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்புண்டு. சிறைசாலையில் பதவி கிடைக்கலாம். பத்திரிகை துறை பணி பெறலாம். மொழி மாற்றும் துறை வேலை கிடைக்கும். உங்களில் சிலர் ஆட்டோ ஓட்டுனர். பஸ் டிரைவர்கள் ஆகிவிடுவீர்கள். சுகாதார துறை வேலை பார்ப்பீர்கள். நோயாளிகளுக்கு சேவை செய்வீர்கள். நீங்கள் இந்த மாதம், மாதச் சம்பளத்திற்கு மட்டுமே வேலை செய்யமுடியும். எந்த வேலையில் சேர்ந்தாலும், அங்கு சுமூகமான சூழ்நிலை அமையும்.
2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை
இந்த நேரத்தில் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார். வீடு கட்ட கடன் கிடைக்கும் நியல் எஸ்டேட் துறையில் வேலை கிடைக்கும். சிலர் மருத்துவம் காவல்துறை சம்பந்த கல்வியில் சேரமுடியும். குழந்தை பிறப்பு சம்பந்தமாக மருத்துவரை அணுகுவீர்கள். கல்விக் கடன் கிடைக்கும். வீட்டை ஒத்துக்கு முடிப்பீர்கள் சினிமா துறையில் செய்தி தொடர்பாளராக பணி கிடைக்கும். கலைத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டராகி விடுவீர்கள் மந்திரிக்கு உதவியாளராகலாம்.
சிலரின் வாரிசுகள் வேலை கிடைத்து, வேறிடம் செல்வர். வீடு மாற்றம் உண்டு. சிலர் வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீடு செல்வீர்கள் சிலர் வீட்டுக்கு, தூங்கு முஞ்சியான வாடகைதாரர் கிடைப்பார்கள் உங்கள் தோட்டம். பண்ணையை குத்தகைக்கு கொடுத்து விடுவீர்கள். பங்கு பத்திரம் சார்ந்து கடன் வாங்குவீர்கள். குழந்தைகள் விளையாடும்போது, லேசாக அடிபட்டுக் கொள்வர்.
2026 மே 17 முதல் 2027 ஜூன் வரை
சனி இப்போது ரேவதி நட்சத்திரத்திற்கு மாறி பலன்களை வேறுவிதமாக கொடுப்பார். இப்போது பயணங்கள் அதிகரிக்கும். அது உயர்கல்வி, வேலை சம்பந்தமாக அமையும். வீடு மாற்றம் உண்டு. கல்வியில் பிரிவை மாற்றுவீர்கள். வீட்டை விற்று, கடனை அடைப்பீர்கள். வாரிசுகள் வெளியூர், வெளிநாடு செல்வர். அரசு அதிகாரிகள் வேலை இடமாற்றம் பெறுவர். நீதிதுறையினர் இடமாற்றம் பெறுவர். ஆன்மிக பயணம் வரும். மடாதிபதிகளின் சந்திப்பு கிடைக்கும்.
உங்கள் எழுத்துக்களை வெளியிட நல்ல முயற்சி எடுத்து, வெற்றி பெறுவீர்கள், கலை உலகிளர், நிறைய வேலையும் நல்லதிர்ஷ்டமும் காண்பர் அசையும் சொத்துகள் வாங்குவீர்கள். மாணவர்கள் அரியர்ஸை முடித்துவிடுவர் ரியல் எஸ்டேட் துறையினர், தங்கள் தொழிலை வெளிநாட்டில் வசிக்கும் நம் நாட்டினர்மூலம் விரிவுபடுத்துவர். வாரிசுகள் தங்கள் பெற்றோருக்கு, வெளிநாட்டிலி ருந்து, இங்கு வீடு வாங்கித் தருவர்.
துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
குடும்ப உறவுகளுக்கு இடையே நடுநிலைமை தவறி நடக்க வேண்டிய மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும். ஆனாலும் இந்த சவாலை நீங்கள் நல்லபடியாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.யாருக்கும் பாதிப்பு வராத அளவில் உங்களால் முடிவு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கும் உருவாகும். அது உங்களுக்கு உதவுவது மட்டுமல்ல பலருக்கும் அது பயன்படும் அளவுக்கு உங்கள் பெயர் நல்லவிதமாக வெளியே தெரியும்.
வேலை பார்க்கும் இடத்தில் வியாபாரத்தில் இதே போல தர்ம சங்கடமான நிலைமைகளை சனிபகவான் தோற்றுவிப்பார்.ஆனால் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுவிடும் என்று நிச்சயமாக நம்பலாம்.
சிலருக்கு சுமுகமான தீர்வு எட்டப்படுவதில் காலதாமதம் உண்டாகும். ஆனால் அது பகையை வளர்க்காத அளவுக்கு இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம்.
நீண்ட நாள் தொந்தரவு செய்து கொண்டிருந்த உடல் நிலை இப்போது நல்ல அளவில் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பு உண்டு.ஆனாலும் மருத்துவ செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். ஆகவே அதன் மீது தனி கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதேபோல் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் இவர்களுக்கு மிகவும் அனுகூலமான காலகட்டம் என்று சனி பெயர்ச்சி காலத்தில் சனி பூரட்டாதி நான்காம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் போது நல்ல காலமாக இருக்கும் என்று நிச்சயம் சொல்லலாம்.
துலாம் ராசி சித்திரை நட்சத்திர அன்பர்கள் திருமணம் தடை நீங்கி நல்லபடியாக திருமண பாக்கியம் அமையப் பெறுவார்கள். புத்திர பாக்கிய தாமதம் என்ற சோதனையான காலகட்டம் நீங்கி நல்லபடியாக புத்திர பாக்கியம் அமைந்து வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
வெளிநாட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பலருக்கு தானாக தேடி வந்து அந்த வாய்ப்பு அமையும். இது சனி கொடுக்கும் கருணை. தொழில் தொடங்க வேண்டும் என்று பண உதவி எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு பண உதவி அவசியம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி துலாம் ராசி சித்திரை நட்சத்திர அன்பர்களுக்கு . லாபமாக இருக்கும்.
நிலுவையில் இருக்கும் கடன் வசூல் ஆகும் கொடுத்த கடன் தொந்தரவு இல்லாமல் வசூல் ஆகும். கடன் பெறுவதற்கு முயற்சி செய்பவர்களுக்கும் சுலபமாக கடன் கிடைக்கும் அந்த கடனை அடைப்பதற்கும் உரிய வழி உண்டாக்கும்
பெரிய அளவில் அதிர்ஷ்டங்கள் சில சித்திரை நட்சத்திர அன்பர்களுக்கு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
துலாம் ஸ்வாதி ஸ்வாதி நட்சத்திர அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
எங்கிருந்து எப்படி வாய்ப்பு வருகிறது என்று யோசிப்பதற்கு முன்பே பல வாய்ப்புகள் கதவை தட்டி லாபத்தை நோக்கி அழைத்துச் செல்லும். வேலைகள் சரியே முடிப்பதற்கும் உள்ள அனைத்து உதவிகளும் தானாக தேடி வந்து கிடைக்கும் அல்லது தேடிப்போன உதவிகள் தாமதம் இல்லாமலும் தட்டாமலும் கிடைத்துவிடும்.
பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் மிக முக்கியமான முன்னேற்ற காலகட்டம் என்று ஸ்வாதி நட்சத்திர அன்பர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்.
மாணவர்களுக்கு வெற்றியான காலகட்டம். தொட்டது அனைத்தும் வெற்றி என்றே முடியும் என்று சொல்லலாம்.ஓரளவு முயற்சி செய்தாலும் பெருமளவு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி காலகட்டம் அமைகிறது.காதலில் வெற்றி ,திருமணத்தில் வெற்றி, திருமண தடை நீக்கம் என்று திருமணம் தொடர்பான அனைத்து நல்ல பலன்களும் இந்த காலகட்டத்தில் ஸ்வாதி நட்சத்திர அன்பர்களுக்கு நடக்க இருக்கிறது.
பிரிந்து இருந்த உறவுகள் சேர்வதற்கு வாய்ப்பு உள்ள காலம். நட்பு அழைப்புகளும். பிரிந்திருந்தவர்கள் சேர்ந்து விடலாம் என்று அழைப்பு விடுத்தால் அதனை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளலாம். இது தொழில் செய்வதன் ஏற்பட்ட உறவுகளுக்கும் பொருந்தும் சொந்த பந்தங்களுக்கும் இந்த விஷயம் பொருந்தும்
பல நன்மைகள் நடந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக சிக்கல்களை உருவாக்கும் காலமாகவும் இருப்பதால், வரவு செலவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து கொள்வது நல்லது.
புதிய சொத்துக்கள் வாங்கும் போது இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சொத்து சேரும் வாய்ப்பு இருந்தாலும் அதே சமயத்தில் வழக்கு போன்ற வில்லங்கங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சனி பெயர்ச்சி காலம் காட்டுகிறது.ஆகவே ஸ்வாதி நட்சத்திர அன்பர்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.பங்கு சந்தை போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் ஸ்வாதி நட்சத்திர அன்பர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மிகுந்த நன்மை தரும் காலம் என்று இருந்தாலும் உற்சாக மிகுதியில் தவறு செய்து விடுவதற்கு சனி தூண்டுவார்.
வாகனம் செலுத்தும் போது மிகுந்த கவனமாக இருப்பது அவசியம். அதிக விபத்துகளை ஸ்வாதி நட்சத்திர அன்பர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள். இந்த காலகட்டத்தில் சரியான முன்னேற்றத்தை அடைவதில் தடை இருக்கும். இது போன்ற சிகிச்சை முறைகளால் விரயம் ஆவதற்கு வழி உண்டு ஆகவே கவனமாக இருக்கவும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும் ஆனாலும் அவை பெருமளவு லாபமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. குறுகிய காலகட்டத்திற்கு வெளிநாட்டு பயணம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். நீண்ட கால திட்டத்திற்கு உண்டான வழிநாட்டு பயணம் என்றால் தவிர்த்து விடலாம்.
துலாம் ராசி விசாக நட்சத்திர அன்பர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி துலாம் ராசி விசாகம் நட்சத்திர அன்பர்களுக்கு தொடக்க நிலையில் ராஜயோக பலன்களை வழங்கும் என்றாலும் சனிப்பெயர்ச்சியின் இறுதி கட்டத்தில் அதாவது சனி ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது தீவிரமான தீய பலன்களையும் வழங்கலாம்.மருத்துவ சிகிச்சைகள் நல்ல பலன் அளித்து உடல் நிலை என் நல்ல முன்னேற்றம் உருவாகும். நஷ்டங்கள் குறைந்து லாபம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து நல்ல நிலைக்கு நிதிநிலைமை முன்னேறும் என்று சொல்லலாம்.
ஆனால் சனி ரேவதி நட்சத்திர சஞ்சாரம் செய்யும் போது துலாம் ராசி சேர்ந்த விசாகம் நட்சத்திரம் நண்பர்களுக்கு கடன் தொல்லைகள் கொஞ்சம் அதிகம் தொந்தரவு செய்யும். மாணவர்கள் அதிகம் சோம்பல் கொள்ளும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி காலம் துலாம் ராசி விசாக நட்சத்திர மாணவர்களுக்கு இருக்கும். சோம்பலை எதிர்கொள்வது அதிக சவாலாக அமைந்து விடும் .ஆகவே கவனமாக இருக்க வேண்டும் சோம்பலின் காரணமாக போட்டி தேர்வில் வெற்றியை நழுவ விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன சோம்பல் இல்லாமல் முயற்சி செய்து வெற்றி கொள்ளுங்கள்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் வியாபாரத்தில் முன்னேற்றம் என்று குறைவான அளவில் எதிர்பார்க்கலாம்.ஆனால் குறைவான அளவில் இருந்தாலும் படிப்படியான முன்னேற்றத்திற்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நண்பர்களுக்கு பயனாக அமையும். வாய்ப்புகளை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டால் பெரிய அளவில் முன்னேற்றத்தை அடையலாம் ஆனாலும் ரேவதி நட்சத்திர சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது துலாம் ராசி விசாக அன்பர்கள் புதிய முயற்சியில் ஈடுபடாமல் ஏற்கனவே செய்து கொண்டிருந்த பணிகளை நல்லபடியாக செய்து முடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நண்பர்கள் உணவு பழக்க வழக்கத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பது மிக மிக முக்கியம் .வயிறு சார்ந்த உபாதைகள் ஜீரண மண்டலம் சார்ந்த உபாதைகள் அதிகம் வருவதற்கு இந்த சனி பெயர்ச்சி காலம் வாய்ப்பு அளிக்கிறது. ஆகவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவில் விரிசல்கள் இருந்தால் இந்த காலகட்டத்தில் சரியாகிவிடும் .அதாவது கணவனோ அல்லது மனைவியோ விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்திருந்தால் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு உறவில் இருந்த விரிசல்கள் சரியாகி உறவு மேம்படும் காலமாக அமைந்திருக்கும்.

திருமண தடை நீங்கி திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் தாமதமாக இருந்தால் அதுவும் சரியாகி புத்திர பாக்கியம் அமைந்துவிடும்.துலாம் ராசி விசாகம் நட்சத்திர அன்பர்கள் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணவரவு உண்டாகும். ஆனால் அதன் பின்னர் அதனால் ஆபத்தும் உண்டாகும் என்பதால் அது போன்ற திடீர் லாபங்களை ஏற்க வேண்டாம். திடீர் லாபம் தரும் எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம் பங்கு சந்தை உட்பட அதிக லாபம் தரும் முதலீடுகள் என்று வசீகரமான அழைப்புகள் வந்தால் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நண்பர்கள் அதனை தவிர்த்து விடலாம். இது போன்ற திடீர. லாபங்கள் சனி பெயர்ச்சி காலத்தில் நல்லது அல்ல அவை பின்னால் பெரிய சிக்கலை உருவாக்கி விடும்.
விளையாட்டு, கலைகள், கேளிக்கை போன்றவை தொழிலாக கொண்ட துலாம் ராசி விசாகம் நட்சத்திர அன்பர்கள் இந்த சனி பெயர்ச்சி காலம் அவர்களுக்கு மிகவும் லாபகரமான காலம் என்பதை உணர்ந்து வாய்ப்புகளை தேடி போகலாம். தானாக தேடி வரும் வாய்ப்புகள் மட்டும் இல்லாமல் தேடிப்போய் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளால் அதிக லாபமும் புகழும் அங்கீகாரமும் கௌரவமும் பணமும் கிடைக்கும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.இந்த சனி பெயர்ச்சி காலத்தில் துலாம் ராசி விசாக நட்சத்திர அன்பர்கள் மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். சில எதிர்பாராத சிக்கல்களை கடந்து செல்வதற்கு மன்னிக்கும் குணம் இந்த காலகட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும் .
சனி பார்வை பலன்
சனிக்கு 3, 7.10 என விசேஷ பார்வையுண்டு

சனியன் 3-ஆம் பார்வை பலன்
சனி தனது 3-ஆம் பார்வையால், துலா ராசியின் எட்டாம் வீட்டை எட்டிப் பார்க்கிறார். இதனால் துலா ராசியினர் விபத்தில் சிக்கிக் கொண்டாலும், சிறு சிராய்ப்போடு தப்பிவிடுவர். இதுவரை இருந்த அவமானம் அழிந்துவிடும். உங்களை ஏமாற்றியவர்களிடமிருந்து நீங்கள் தப்பித்து விலகிவிடுவீர்கள். நஷ்டம் நின்றுவிடும். சில அரசியல்வாதி, அதிகாரிகளிடமிருந்து இருந்துவந்த மிரட்டல் நீங்கிவிடும் உங்கள் தொழிலில் உண்டான கஷ்டம் விலகும். உங்கள் குடும்பத்தில் சிலர் செய்த சூழ்ச்சி மறைந்துவிடும். உங்கள் வாழ்க்கை துணைக்கு, ஏற்பட்ட இருந்த ஒரு தீய செயல் தடுக்கப்படும்.
இளம்பெண்களும், ஏற்றுமதியாளர்களும் கவனமாக இருக்கவேண்டும்.
சனி, உங்களின் 8-ஆம் வீட்டை பார்ப்பதால், நிறைய தீமைகளை அழித்துவிடுவார்.
சனியின் 7-ஆம் பார்வை பலன்
சனி தனது 7-ஆம் பார்வையால், துலா ராசியினர் விரய ஸ்தானத்தை விரிட்டு நோக்குகிறார் சனி பார்த்த இடம் பாழ் என்பது ஜோதிட விதி எனவே துலா ராசியாரின் அலைச்சல் கட்டுப்படும். செலவு சுருங்கும். தூக்கம் வரவே வராது. நீங்கள் அரசியல்வாதியாக இருந்தால், ஒரே இடத்தில் அமர்ந்து சேவை செய்யுமாறு வற்புறுத்தப்படுவீர்கள்.
சமையல் கலைஞர்கள் நிறைய இடம் அலையாமல், ஒரே இடத்தில், அல்லது பெரிய ஓட்டலில் சேவையாற்றுவீர்கள். அலைந்து திரிந்து தொழில் செய்தவர்கள், ஒரே இடத்தில் இருந்து தொழில் தொடர்வீர்கள். குடி தண்ணீர் சப்ளை செய்ய அலைந்தவர்கள் வேலைக்கு ஆள்வைத்து நீங்கள் அலையாமல் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை, அடிக்கடி தாய் வீட்டிற்கு செல்வதை,சனி கட்டுப்படுத்துவார். உங்கள் பெற்றோரின் அலைச்சல் மட்டுப்படும். செலவை குறைப்பதால், நீங்கள் மகா கஞ்சன் எனும் பெயர் வாங்கிவிடுவீர்கள்.
சனியின் 10-ஆம் பார்வை பலன்
சனி தனது 10-ஆம் பார்வையால், துலா ராசியின் 3-ஆமிடத்தை முறைத்துப் பார்க்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி ஆனவுடன், உங்களுக்கும், உங்கள் இளைய சகோதரனுக்கும் இடையே சண்டை வந்துவிடும். அது ஈகோ யுத்தமாக இருக்கும். உங்கள் ஒப்பந்தம் கௌரவ பிரச்சினையில் மாட்டிக்கொண்டு முழிக்கும். வீடு விற்கும் நிலையில், தகராறு வந்துவிடும். மறதி தொல்லை வந்து பாடாய்படுத்தும், உங்கள் சைக்கிளை எவனோ ஓட்டிக்கொண்டு போய்விடுவான்.
உங்கள் பத்திரிகை துறையில் பழுது கண்டுபிடிக்கப்படும். உங்கள் பணியாளர்கள், உங்களை பாடாய்படுத்துவர். வேலைக்கு ஆள் வேண்டாம் எனும் முடிவுக்கு வந்துவிடுவீர்கள். உங்கள் தைரிய, வீரியம் புஸ்ஸென்று காணாமல் போய்விடும். விஷயங்கள் உங்களை கசக்கி பிழிவதால், உங்கள் மன உறுதி சற்று தளர்ந்துவிடும். சனி 3-ஆமிடத்தைப் பார்த்து, உங்களை தைரியமில்லாமல் பயந்தாங்குள்ளி மாதிரி ஆக்கிவிடுவார். சனி, இரண்டு முறை வக்ரம் பெறுகிறார். அப்போது தன் பலன்களை மாற்றிக்கொடுப்பார்.
சனி தரும் மொத்த பலன்
சனி இருக்கும் இடத்தை பொறுத்து நல்ல பலன்களை தருகிறார். பார்க்கும் பார்வை மூலமும் விபத்துகளை நீக்கி செலவுகளைக் குறைக்கிறார். 3-ஆமிட பார்வை மட்டும் சற்று எதிர்மறை செயல்களை தருகிறது. மற்ற படி பரவாயில்லை. ஓரளவு நல்லபலன்களே கிடைக்கிறது.
சனியின் வக்ர பலன்கள்
2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரநிலை. இப்போது செய்து வரும் குத்தகை தொழிலில் குதர்க்கம் காண்பர். ஒப்பந்தங்களை ஒதுக்கலாமா என்று யோசிப்பார். எனினும் சனி வக்கிர நிவர்த்தி ஆனவுடன் அனைத்தும் சீராகிவிடும்.
2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரம். உங்கள் அனைத்து இடமாற்றம், வேலை மாற்ற மும் ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நின்று விடும். எந்த செய்தியும் அதுபற்றி கிடைக் காமல் அல்லாட நேரிடும். வக்ர நிவர்த்தி ஆனவுடன் சரியாகும். வக்ர காலத்தில் திருவாரூர்- திருக்குவளை கோளிலிநாதரை வணங்கவும்.
பரிகாரங்கள்
கும்பகோணம் திருநாறையூர் சென்று வழிபடலாம். அருகிலுள்ள சனீஸ்வரர் சந்நிதிக்கு, வெல்லம் போன்ற இனிப்புகள் வாங்கி கொடுக்கவும். ஊனமுற்றவர்களின் மருந்துச் செலவுக்கு உதவவும். சீர்காழி -சிதம்பரம் இடையே உள்ள ஸ்ரீஹனுமந்தபுரம் ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கலாம். ஆஞ்சனேயரை, கல்கண்டு, ஜிலேபி, பழங்கள் கொண்டு வணங்கவும்.