Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2025சனி பெயர்ச்சி பலன்கள் 2025: விருச்சிக ராசி(பூர்வபுண்ணிய சனி)

சனி பெயர்ச்சி பலன்கள் 2025: விருச்சிக ராசி(பூர்வபுண்ணிய சனி)

சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – விருச்சிக ராசி

(விசாகம் 4ம் பாதம்,அனுஷம் 1,2,3,4,கேட்டை 1,2,3,4ம் பாதம் )

சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025

இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

விருச்சிக ராசி

இதன் அதிபதி: செவ்வாய்

உருவம்:தேள்

வகை: ஸ்திர ராசி

தத்துவம்: நீர்

நிறம்: மஞ்சள் நிறம்

கடவுள்: ஐயப்பன்

குறிப்பு : இங்கு சந்திரன் நீசம்.

விருச்சிக ராசியும் சனியும்

விருச்சிக ராசிக்கு சனி 3, 4-ன் அதிபதி. இவர் இவ்வளவு நாளும் 4-ஆம் வீட்டில் அமர்ந்திருந்தார். இப்போதைய பெயர்ச்சி யில் துலா ராசியினர் 5-ஆமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுதல் ஆகிறார்.

சனி இருந்த இடத்தின் பலன்

சனி பகவான் 5-ஆமிடத்தில் அமர்கிறார். 5-ஆமிடம் என்பது ஒரு அறிவு பூர்வ ஸ்தானம். அதில் ஒரு மந்த கிரகம் சனி வந்து அமர்ந்துள்ளார். எனவே உங்களால் முன்மாதிரி சுறுசுறுப்பாக சிந்திக்க இயலாது. மின்னல் வேக யோசனைகள் மறைந்து தூறல் போல சிந்தனைகள் மெதுவாகும். ஒரு பரபரப்பின்றி இருக்கும்.

2025 மார்ச் 29 முதல் 28 ஏப்ரல் வரை

இந்த மாதம், விருச்சிக ராசிக்கு 5-ஆமிடத்தில் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார். பூர்விக நிலத்தில் இருந்து வருமானம் கிடைக்கும் உங்களின் சிலரின் வாரிசுகள், வீடு அல்லது வாகனம் வாங்குவர். கலைத்தொழிலில் செட்டிங் போடுவது போன்ற இனங்களில் ஈடுபாடு ஏற்படும். ரியல் எஸ்டேட் சார்ந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொழுதுபோக்கு நிலையங்களில் வாகனம் இயக்கும் பணி அல்லது அது சார்ந்த ஒப்பந்தம் கிடைக்கும்.

உங்கள் வாக்கு மூலம் வருமானம் வரும். பங்கு வர்த்தகம் பற்றி கைபேசியில் பிறருக்கு சொல்லி கொடுப்பீர்கள். கைபேசி மூலம் புகழும், வெற்றியும் கிடைக்கும். பழங்கால முறைப்படி செக்கில் ஆட்டி எண்ணெய் வியாபாரம் ஆரம்பித்துவிடுவீர்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள், நல்ல நம்பிக்கை உண்டாகி, மிக தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்வீர்கள். கோவில்களில் பழமையான வேத சாஸ்திரம் சம்பந்தமாக மிக எளிதாக புரியும்படி, சொற்பொழிவு செய்வீர்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை

இப்போதில் விருச்சிக ராசியின் 5-ஆமிடத்தில் உத்திரட்டாதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார். பூர்வீக வீட்டைக் கட்ட நல்ல பணியாளர்கள் கிடைப்பர். உங்களில் சிலர் பழமையான அழிந்து போய்கொண்டிருக்கும் நூல்களை புதுப்பிக்கும் வேலையை மேற்கொள்வீர்கள். கலை உலகம் சம்பந்தமான அதிலும் ஆரம்ப கால சினிமா சம்பந்த டாக்குமெண்டரி எடுப்பீர்கள். கலைஞர்களில் சிலர் பிரபலமான கலைஞர்,விளையாட்டு வீரர், மந்திரிகள் போன்றோரின் பயோகிராபில் நடிப்பீர்கள்.

பழமையான கலைகள், விளையாட்டுகள், பாட்டுகள், நடனம். பொழுதுபோக்கு விஷயம் இவற்றை மீட்டெடுப்பீர்கள். மிக பழமையான கம்மல். ஆபரணங்களை மறுபடியும் பழக்கத்துக்கு கொண்டுவருவீர்கள். பழைய சமையல்-பாத்திரம். சமையல் கலை இவற்றை இந்த ராசியார் புதுப்பிப்பர். முக்கியமாக, பழைய விவசாய மரபுகள் மறுபடியும் புழக்கத்துக்கு வர. வெகு பாடுபடுவார்கள் மொத்தத்தில் இந்த சனி சார காலத்தில், பழமைகளை மறுபடியும் திருப்பிக்கொணர்வர்.

2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை

இந்த நேரத்தில் சனி ரேவதி நட்சத்திரம் எடுக்கிறார். இந்த கால கட்டத்தில் சனி தரும் பலன்கள் ரொம்ப மாறுபடும். முக்கியமாக, விருச்சிக ராசியின் மந்திரி பதவி வகிப்பவர்கள் வெகு இன்னலுக்கு ஆளாவார்கள். அரசியலில் ஈடுபாடு உடையவர்கள் எந்த கட்சி மாறுவது என பெரும் குழப்பம் அடைவர். உங்கள் உடன்பிறந்த சகோதரர் உடல் நலத்தில் கொஞ்சம் சிரத்தையுடன் இருக்கவேண்டும்.

உங்கள் மருமகன் ஒரு ஒழுக்க கேடான விஷயத்தில் மாட்டி அவமானப்படுவார். உங்கள் பங்குவர்த்தகம் சிலருக்கு மிகப்பெரிய அளவில் லாபமும், வேறு சிலருக்கு மிகப்பெரிய அடியும் தரும். உங்களின் சிலர் இரகசிய காதலும், இணையின் விஷயமும் தெரிந்து விடுவதால் நீங்கள் கொஞ்ச நாள், வீட்டிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் இருக்க நேரிடும். உங்கள் வாகனம் பழுதாகலாம்.பாதம் அல்லது வயிறு ஜீரணம் இவற்றில் கவனம் தேவை.நிலத்தில் இருந்து வந்த லாபம் கொஞ்சம் தடைப்படும். பணியாளர்களிடம் கவனமாக இருக்கவும்.

சனியின் பார்வை பலன்

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

சனிக்கு 3, 7,10 என சிறப்பு பார்வை உண்டு

சனியின் 3-ஆம் பார்வை பலன்

சனி தனது 3-ஆம் பார்வையால். விருச்சிக ராசியின் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். எப்போதுமே சனி 7-ஆமிடத்தைப் பார்த்தால், அந்த ஜாதகருக்கு திருமணம் ரொம்ப தாமதம் ஆகும் எனும் ஜோதிட விதி உள்ளது. இதன் பொருட்டு விருச்சிக ராசியாருக்கு இந்த சனிப்பெயர்ச்சி திருமண தாமத்தைக் கொடுக்கும். அதனால் சனிப்பெயர்ச்சிக்கு முன்பே திருமணம் நடத்திவிடுவது நல்லது.

உங்கள் வியாபாரம். தொழிலும் கொஞ்சம் மெதுவாக நடக்கும். இப்போது கிடைக்கும் வியாபார பார்ட்னர் ரொம்ப சோம்பேறியாக அமைவார். வழக்குகள் இழுத்தடிக்கும் உங்கள் பெற்றோர் கொஞ்சம் மெதுவாக வேலைகளைச் செய்வர் கல்யாணத்துக்கு கடன் வாங்க நினைத்தால், கேட்ட நேரத்தில் கிடைக்காது. அரசு அபராதம் உண்டு.கோவிலுக்கு போனால் அர்ச்சகர் நிறைவாக பிரசாதம் தரமாட்டார். வேலை செய்யும் கம்பெனியை மாற்றுவீர்கள். சனி பார்வை 7-ஆமிடத்தில் படுவதால். தம்பதிகளுக்குள் ஓர் ஈர்ப்பு இல்லாமல் ஆக்கிவிடுவார்.

சனியின் 7-ஆம் பார்வைப் பலன்

சனி தனது ஏழாம் பார்வையால், விருச்சிக ராசியின் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார் இந்த சனிப்பெயர்ச்சி ஆனவுடன் அனைத்து விருச்சிக அரசியல்வாதிகளையும் க்ளின் போல்ட் பண்ணிவிடுவார். அவர்களை ஒரு சிறு வட்டத்துக்குள் ஒடுக்கிவிடுவார். அரசு அதிகாரிகள் தங்களுக்கு பிடிக்காத இடத்தில் வேலை செய்யும்படி ஆகும். உங்கள் மூத்த சகோதான் அல்லது உங்கள் தந்தை சற்று எதிர்ப்புணர்வு கொள்வர். உயர்கல்வி சற்று மந்தமாகும்.

பதவி உயர்வு வந்து கொண்டே இருக்கிறேன் என்று ஆட்டம் காட்டும். கிடைத்த பாடாக இருக்காது. உங்கள் பகுதியில், குலத்தலைவர்களாக இருப்பவர்கள் மீது குற்றம் குறை சுமத்துவார்கள் உங்கள் சமையல் வாயில் வைக்க விளங்காது. தயவுசெய்து எதையும் எண்ணி மனக்கோட்டை கட்ட வேண்டாம். எதுவும் நடக்காது என்பது உண்மை.மேலும் எந்த முயற்சியும் பின்னோக்கி போய்விடும் முன்னேற்றம் தடைப்படும். சனியின் பார்வைபடுவதால் வாழ்வு நிலை சுறு சுறுப்பில்லாமல் தேங்கும் நிலை ஏற்படும்.

சனியின் 10-ஆம் பார்வை பலன்

சனி தனது 10-ஆம் பார்வையால். விருச்சிக ராசியின் 2-ஆமிடத்தை பார்க்கிறார்.சனி என்டர் ஆனவுடன், நீங்கள் பேசினாலே வாயில் சப்பென்று அறைந்துவிடுவார். அதுவும் வீட்டில் பேசினால் ஒன்று உங்கள் மனைவி வீட்டை விட்டு போய்விடுவாள். அல்லது நீங்கள் போக வேண்டியிருக்கும். காசு பணத்தை கண்ணில் காட்டமாட்டார்.ஒரு மனிதனுக்கு செலவுக்கு பணம் குறைவாக இருந்தால் ஒரு இடத்தில் சோம்பி உட்கார்ந்துவிடுவான்.

உங்களில் வயதானவர்களுக்கு பேச்சு குளறுபடியாகிவிடும். அல்லது கண்கள் பாதிக்கும். உங்களில் சிலர் வீட்டை நடத்தவேண்டுமே. அதற்காக நிறைய பொய், பிராடுத்தனம், குறுக்குவழி சம்பாத்தியம், பிறரை சப்போர்ட் பண்ணி பேசுவது என இவ்வாறான வழிகளில் பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிக்க வெகு பிரயாசை எடுப்பீர்கள். இந்தமாதிரி முயற்சிகளால், தொழிலை ஒரு மாதிரி ஓட வைத்துவிடுவீர்கள். சனி, 2-ஆமிடத்தைப் பார்த்து, கஞ்சப்பயல் எனும் பட்டத்தை வாங்கித் தருவார்.

விசாகம் 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

வாய்ப்புகள், சவால் என்ற மாறு வேடம் போட்டுக்கொண்டு அடிக்கடி வந்து வசீகரிக்கும் காலம் என்று சொல்லலாம். எது நிஜமான வாய்ப்பு எது வெறும் சவால் மட்டுமே என்று தெரியாமல் மிகவும் குழப்பம் அடைவீர்கள். ஜனன கால ஜாதகத்தில் சனி பலம் அதிகம் இருக்கும் அமைப்பு கொண்ட விருச்சிக ராசி விசாக நட்சத்திர அன்பர்களுக்கு இந்த குழப்பம் இருக்காது. அவர்கள் தெளிவாக முடிவெடுத்து முன்னேறுவார்கள். ஜனன கால ஜாதகத்தில் சனி பலம் குறைவாக அமைந்த விருச்சிக ராசி விசாகம் நட்சத்திர நண்பர்கள் சற்று தடுமாற்றம் அடைவார்கள்.

உடல் நலத்தை பொருத்தவரை எலும்பு சார்ந்த பிரச்சனைகள் அதிகம் வரக்கூடும். பற்கள் அதிகம் பாதிக்கப்படலாம். இது தவிர ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும் ஆகவே உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கும் நல்ல காலம் என்று சொல்ல வேண்டும். புதிதாக கற்பதற்கு என்று சனி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவார். நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு பொற்காலம் என்று சொல்ல வேண்டும்.

பொருளாதாரம் நிதி நிலைமை பொறுத்தவரை நிறைய சஞ்சலங்கள் இருக்கும். ஆனால் தடுமாற்றம் எதுவும் இருக்காது. பெரிய பாதிப்புகள் ஆபத்துகள் எதுவும் இருக்காது என்று உறுதியாக சொல்ல முடியும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் நிலை தான் நீடிக்கும்.சேமிப்பு ஓரளவு செய்ய முடியும் என்றாலும் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை சனி பெயர்ச்சி இறுதி கட்டத்தில் எதிர்பார்க்கலாம்.

வேலை வியாபாரம் என்று பொருள் ஈட்டும் விஷயத்தில் சகஜமான நிலையை நீடிக்கும் என்று சொல்லலாம். சவால்கள் நிறைந்ததாக சில சூழல்கள் உருவானாலும் அவற்றை சமாளித்து வெற்றி கொள்ளும் அமைப்பாக இந்த சனி பெயர்ச்சி காலம் விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம் அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.

சனி பகவான் பூரட்டாதி நான்காம் பாதத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் விருச்சிக ராசி விசாகம் நட்சத்திர அன்பர்கள் பழைய உறவுகளை புதுப்பித்து பலமடைவார்கள்.

தாய் வழி சொந்தங்கள், தந்தை வழி சொந்தங்கள் இருதரப்பிலும் இருந்து வந்த கசப்பான உணர்வுகள், நினைவுகள் மறைந்து போய் சகஜமான நிலைக்கு உறவு தொடர்பான விஷயங்கள் மீண்டு வரும்.

ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் வலிமையாக அமைந்த விசாகம் நட்சத்திரம் நான்காம் பாத அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் உறவு நிலைகளில் புதிய முன்னேற்றத்தை கொண்டு வருவதாக இருக்கும்

சிறிய அளவிலாவது புதிய சொத்துகள் சேர்க்கை அவசியம் நடைபெறும் என்று சொல்ல முடியும். வெளிநாட்டிலிருந்த. நல்ல செய்தி ஒன்று தேடி வரும். வெகு வெகு நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும்,. திருமணம் கைகூடி வரும். விருச்சிக ராசி விசாகம் நட்சத்திர பெண் ஜாதகர்களுக்கு காதலில் வெற்றி என்ற அமைப்பு காணப்படுகிறது. விசாகம் நட்சத்திரம் நான்காம் பாத பெண் ஜாதகர்கள் தங்கள் காதலை மறைத்து வைத்திருக்கக்கூடும் அது நல்ல விதமாக வெளிப்பட்டு திருமணத்தின் மூலம் மங்களகரமாக நிறைவேறும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திர அன்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

இந்த சனிப்பெயர்ச்சியின் தொடக்க காலம் அதாவது சனி பூரட்டாதி நான்காம் பாதம் சஞ்சரிக்கும் காலத்தில், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் மிகுந்த சந்தோஷம் அடைவார்கள். காரணம் அவர்கள் இவ்வளவு நாள் காத்திருந்த பல விஷயங்கள் அனுபவமாக நடப்பதை பார்ப்பார்கள். சில விஷயங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்தவை அவையெல்லாம் அற்புதம் போல நிகழ்வதை காண்பார்கள்..

நடக்கவே நடக்காது என்று நினைத்திருந்த பல நல்ல விஷயங்கள் தள்ளிப் போயிருந்த பல சங்கதிகள் ஒவ்வொன்றாக தானாக நடப்பது போல் முன்னேற்றம் அமைந்திருக்கும்.

காரணம் எது என்று தெரியாமல் விலகிப் போயிருந்த சொந்தங்கள் நட்புகள் உறவுகள் வாடிக்கையாளர்கள் நண்பர்கள் எல்லோரும் தேடி வந்து பழைய நினைவுகளை மறந்து விட்டு புதிய உற்சாகத்துடன் பழகத் தொடங்குவார்கள்.

உடல் ஆரோக்கியம் சிறு வயது பிள்ளை போல் உற்சாகமாக இருக்கும் என்று சொல்லலாம் .சின்ன சின்ன உபாதைகளாக இருந்த உடல் நல குறைபாடுகள் எல்லாம் விலகி விடும்.

பெரிய அளவில் தொந்தரவு செய்து கொண்டிருந்த உடல் நலம் குறைபாடுகளுக்கு சரியான வைத்தியம் கிடைப்பதற்கு இந்த சனி பெயர்ச்சி காலம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சுமாராக படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் கூட முயற்சி எடுத்து நன்றாக படிக்க தொடங்குவார்கள். நன்றாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் மிக நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி வெற்றி கோப்பைகளை பெறுவார்கள். படிப்பு என்று மட்டுமில்லை மாணவர்களுக்கு விளையாட்டு ,கேளிக்கை, கலை போன்ற எல்லா விஷயங்களிலும் முன்னேற்றமான காலம் என்று சொல்லலாம். உயர் கல்விக்காக வெளிநாட்டு வாய்ப்புக்கு காத்திருக்கும் அனுஷம் நட்சத்திர அன்பர்கள் இந்த காலத்தில் அந்த வாய்ப்பை பெறுவார்கள்..

கடன் பிரச்சனை இருப்பவர்கள் சற்று கவனமாகவே இருக்க வேண்டும் ஏனைய விஷயங்கள் சுமூகமாக இருப்பது போல் நிதி நிலைமை குறிப்பாக கடன் பிரச்சினைகள் சுமூகமாக இருக்காது. இதில் கொஞ்சம் கெடுபிடி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு ஆகவே புதிய கடன்களை தவிர்த்து விடுங்கள் ஏற்கனவே வாங்கி இருக்கும் கடனை சரிவர செலுத்துவதற்கு தவறாதீர்கள்.

நீதிமன்றம் போலீஸ் வழக்கு போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவும். ஏனைய விஷயங்கள் மிகவும் நன்மையாக அமைந்திருக்கும் அனுஷம் நட்சத்திர அன்பர்களுக்கு இந்த ஒரு விஷயம் மிகவும் சிக்கலாக காணப்படுகிறது இது போன்ற வழக்கு தொல்லைகள் ஏற்கனவே உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்

பணியிட மாற்றம் பதவி உயர்வு மூலம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கிடைக்கும் இந்த வாய்ப்பை குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தை சொல்லி நழுவ விட்டு விடாதீர்கள்.குடும்ப உறவுகள் மிக சீராக இருக்கும்.

திருமண தடை காரணமாக திருமணத்திற்கு காத்திருந்தவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் காலம். நல்ல வாழ்க்கை துணை அமைந்து மணவாழ்க்கை சீராக அமையும். புத்திர பாக்கியத்திற்கு காத்திருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

இதுவரை இருந்த குழப்பமான மனநிலை விலகி புதிய பாதை தெரிவது போல் காணப்படும்.பெரிய அளவில் முன்னேற்றத்திற்கான அறிகுறியாக இந்த பாதை அமையும்.

உறவுகளில் இருந்த சிக்கல்கள் விலகி உறவுகள் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். நண்பர்கள். உறவுகள் . நட்புகள் , அலுவலக பணியாளர்களுக்கு இடையே இருந்த கசப்பான அனுபவங்கள் மறைந்து போய் சந்தோஷமான நிகழ்வுகள் நடந்து வாழ்க்கை புதிய திருப்பத்துடன் நல்ல வழியில் முன்னேறும்

இடமாற்றம் பணி மாற்றம் உத்தியோகத்தில் உயர்வு சம்பள உயர்வு பதவி உயர்வு என்று அடுத்தடுத்து ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. தகுதியான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும் காலமாக சனி பூரட்டாதி நான்காம் பாதத்தில் சஞ்சரிக்கும் போது எதிர்பார்க்கலாம்.

ஏற்பட்ட கடன்கள் அடைந்து விடும், சுப விரயமாக புதிய கடன்கள் உருவாகும். வீடு வாங்குதல் மனை வாங்குதல், புதிய வீட்டுக்கு குடி போவது போன்ற பாசிட்டிவான நல்ல விஷயங்கள் நிகழும்.

திருமண தடை நீங்கி திருமணம் நடக்கும் புத்திர பாக்கியத்தடை இருந்தவர்கள் அந்த தடை நீங்கி புத்திர பாக்கியம் அமையப் பெறுவார்கள் கேட்டை நட்சத்திர அன்பர்கள் சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அது குறுகிய கால அமைப்பாக மட்டுமே இருக்கும்.

உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் அமையும் நீண்ட காலமாக தொந்தரவு செய்து கொண்டிருந்த உடன் உபாதைகள் சரியாகி சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து முன்னேற்றம் அடையும்.

வருமானம் பெருகி நிதிநிலை உயர்ந்து சேமிப்புகள் முதலீடுகள் என்று நல்லபடியாக பொருளாதார முன்னேற்றம் அமையும்.

பக்தி, ஆன்மீகம், தெய்வ நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் வரப் பிரசாதமாக அமைந்து நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட வாய்ப்புகள் உருவாகும்.

தந்தை வழி சொத்து விஷயத்தில் சிக்கல்கள் உள்ள கேட்டை நட்சத்திரம் அன்பர்களுக்கு அந்த சிக்கல் தீர்ந்துவிடும். தாய் வழியில் உறவுகளில் சிக்கல்கள் விலகி உறவுகள் மீண்டும் நல்ல பலமான உறவாக மாறிவிடும் அதேபோல் தாய் வழியில் வரவேண்டிய பணவரவுகள் அமைந்து பலமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

மாணவர்கள் கல்வியில் உயர்வு காண்பார்கள். உயர் கல்வி அயல்நாடு சென்று படிக்க வேண்டும் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கைகூடிவரும் இதற்குத் தேவையான நிதி உதவியும் நண்பர்கள் மூலம், குடும்ப நண்பர்கள் மூலம் உறவுகள் மூலம் கட்டாயம் கிடைக்கும். இதற்காக வங்கி கடன் வாங்குவது தேவையில்லாத நிலையாக மாறிவிடும் அதிசயத்தை காணலாம்.

இதுவரை இல்லாத புதிய மனிதராக நீங்கள் மாறி இருப்பீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி அப்படி ஒரு அதிசயத்தை உங்களுக்கு நிகழ்த்திக் காட்டும்.

சனி தரும் மொத்த பலன்

சனி இருக்குமிடத்தைக் கொண்டு, நல்லபலன்கள் கொடுக்கிறார் ஆனால் தன் பார்வை மூலம் அனைத்தையும் கெடுக்கிறார். எனவே விருச்சிக ராசிக்கு பாதி நன்மை பாதி தீமை என பலாபலன் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கு சனி வக்ர பலன்கள்

2025 ஜூலை 12 முதல் டிசம்பர் 27 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் ஆகிறார். இப்போது, பழைமையான விஷயங்களை செய்து கொண்டிருப்பதில் சிறிது தொய்வு ஏற்படும். தகவல்கள் கிடைப் பதில் கொஞ்சம் சிரமும், தடையும் உண்டா கும் சுனி வக்ரம் நீங்கியவுடன் சரியாகி விடும்.

2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை, ரேவதி நட்சத்திரத்தில் சனி வக்ரம் ஆவார். இந்த காலகட்டத்தில் உங்களைப் பற்றிய எதிர்மறை சங்கதிகள் செய்திகள் அமைதியாகும். இதனை பயன்படுத்தி, பிரச்சினைகளைத் தீர்க்க முயலுங்கள்.

சனி வக்ர காலத்தில் திருவாரூர் எட்டுக் – குடி, திருக்குவளை ஸ்தல கோளிலிநாதரை வணங்கவேண்டும்.

பரிகாரங்கள்

ஆரணி – ஏரிக்குப்பம் சனீஸ்வரரை வணங்கலாம். திருப்பத்தூர் யோக பைரவருக்கு பூஜை, வழிபாடு செய்யலாம். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு விளக்கேற்றி வணங்கவும் விளையாட்களை விளையாடும் பையன்கள், அடிபடாமல் இருக்க உதவும் உபகரணங்களை வாங்கிக் கொடுங்கள். முடிந்தபோது, அன்னதானம் செய்தால், பண தட்டுப்பாடு நீங்கும் அனந்தமங்கலம் அஷ்ட புஜ ஆஞ்சளேயரை வணங்கவும். செந்தூரம் சார்த்தலாம்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!