விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: தனுசு ராசி
தனகாரகனாகிய குருவை ஆட்சி வீடாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 6மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7மிடம் வருகிறார். மேலும் அக்டோபர் 18ந் தேதி முதல் அதிசாரமாக 7மிடத்திலிருந்து 8மிடம் வருகிறார். மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதி முதல் 8மிடத்திலிருந்து 7மிடம் வருகிறார்.
ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் 4, 10மிடங்களிலிருந்து 3, 9மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இவ்வருடம் முழுவதும் சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக 4மிடம் சஞ்சாரம் செய்கிறார்.

வெகுகாலம் திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்கு இவ்வருடம் திருமணம் நிச்சயம் நடக்கும். கடன் சுமைகள் குறையும். தொழில்துறையில் காலதாமதமானாலும் வளர்ச்சி நிச்சயம் இருக்கும். தாயின் ஆரோக்யத்தில் மிகுந்த அக்கறை தேவை. வீடு, மனை, புது வாகனம், தங்க-வெள்ளி ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வேலை கிடைக்காதவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.
தெய்வஸ்தல யாத்திரையில் நல்ல தரிசனம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நல்லுறவுகள் உண்டாகும். வேலைப்பளு அதிகமானாலும் அதற்குரிய வெகுமானம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்யத்திலும் மிகுந்த அக்கறை தேவை. மனைவி நல்ல யோசனைகளைத் தருவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெறுவார்கள்.
பரிகாரம் : பிரதி சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றி வரவும்.விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: விருச்சிக ராசி
மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.