விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:மகர ராசி
ஆயுள்காரகனாகிய சனியை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 5மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6மிடம் செல்கிறார். மேலும் அதிசாரமாக அக்டோபர் 18ந் தேதி முதல் 6மிடத்திலிருந்து 7மிடம் சஞ்சாரம் செய்கிறார். மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதி முதல் 7மிடத்திலிருந்து 6மிடம் வருகிறார்.
ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3, 9மிடத்திலிருந்து 2, 8மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இவ்வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 3மிடம் சஞ்சாரம் செய்கிறார்.

கடன் வாங்கி வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தைரியமாகக் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பலவித பிரச்னைகள் தீரும். வெளிநாட்டு வேலை விரும்புபவர்களுக்கு இவ்வருடம் கிடைக்கும். புதிய முயறிகளில் காலதாமதமரக வெற்றி கிடைக்கும். இவ்வருடம் கடன் கொடுப்பதையும் மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதையும் தவிர்க்கவும்.
தெய்வஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள். அஜீரணம் ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களைத் தவிர்த்தல் நலம். தந்தையின் ஆரோக்யத்தில் மிகுந்த அக்கறை தேவை. தொழில்துறையில் தாமதமாக வெற்றி கிடைக்கும். உங்களுக்கு குருபலம் இல்லாவிட்டாலும் வானுக்கு குருபலம் இருந்தால் திருமணம் முடிவாகும். குழந்தைகளுக்கு எதிர்ப்பார்த்த நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
பரிகாரம் : பிரதி வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றிவர சகல பிரச்னைகளும் தீரும்.
மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள்.