விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:கும்ப ராசி
தொழில்காரகனாகிய சனியை ஆட்சி வீடாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே | இதுவரை உங்கள் ராசிக்கு 4மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் 5மிடம் வருகிறார். மேலும் அக்டோபர் 18ந் தேதி முதல் 5மிடத்திலிருந்து அதிசாரமாக 6மிடம் வருகிறார். மீண்டும் வக்ரகதியில் 6மிடத்திலிருந்து டிசம்பர் 5ந் தேதி முதல் 5மிடம் வருகிறார்.
ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2, 8மிடங்களிலிருந்து 1, 7மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சனி பகவான் இவ்வருடம் முழுவதும் 71/2சனியாக உங்கள் ராசிக்கு 2மிடம் சஞ்சாரம் செய்கிறார்.
திருமணமாகாதவர்களுக்கு இவ்வருடம் திருமணம் இனிதே நடக்கும். உங்கள் கீழ்பணிபுரியும் பணியாளர்களால் நன்மையுண்டு. வீடு, மனை, புதுவாகனம் வாங்கும் யோகம் உண்டு. மனதில் இருந்த பயங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் தீரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விரைவில் நல்லபடியாகக் குழந்தை பாக்கியம் அமையும்.
பூர்வபுண்ணிய சொத்துக்களில் இருந்த வில்லங்கம் தீரும். நல்ல காரியங்களுக்குத் தலைமைதாங்கி நல்லபெயரெடுப்பீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. கண்களில் இருந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எதிர்பாராத தீடீர் யோகமும் பணவரவும் உண்டு, உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு.
தொழில் விஸ்தரிப்பினால் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெறுவார்கள்.
பரிகாரம் :பிரதி சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணொய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றி வரவும்.
மொத்தத்தில் இவ்வருடம் 75 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள்.