நவகிரக தோஷம்
ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் சரியாக அமைந்திருந்தாலும் கூட,ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் கஷ்டங்களை சந்திக்கவே நேரிடுகிறது .கிரக நிலைகள் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கே இப்படியென்றால் ,கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பை பெற்றுஇருபவர்கள் பல நேரங்களில் பல விதமான கஷடங்களை அனுபவிக்கவே நேரிடும் .நவகிரக தோஷங்கள் ஏற்படவும் முற்பிறவியில் நாம் செய்த கர்மவினைகளே இதற்க்கு காரணம்.
நவகிரக தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்
சூரிய தோஷம்(Sooriya Dosham) உள்ளவர்கள் :
ஞாயிறுக்கிழமை அன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து ,அர்ச்சனை செய்து வழிபட்டால் சூரிய பகவானால் ஏற்பட்ட தோஷம் விலகும்.
சந்திர தோஷம்(Chandira Dosham) உள்ளவர்கள் :
திங்கள்கிழமை அன்று அம்மனுக்கு பூஜை ,அபிஷேகம் செய்து வழிபட்டால் சந்திரனால் ஏற்பட்ட தோஷம் விலகும்
செவ்வாய் தோஷம்(Sevvai Dosham) உள்ளவர்கள் :
செவ்வாய்கிழைமைகளில் அருகில் உள்ள முருகபெருமானுக்கு அபிஷேகமும் ,அர்ச்சனையும் செய்து வழிபட்டால் ,செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷம் விலகும்
புதன் தோஷம்(Pudhan Dosham) உள்ளவர்கள் :
புதன்கிழமைகளில் விஷ்ணு பகவான் அல்லது பெருமாள் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வந்தால் போதும்
குரு தோஷம்(Guru Dosham) உள்ளவர்கள் :
குருபகவானால் ஏற்பட்ட தோஷம் விலகிட அருகிலுள்ள சிவாலயம் சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தி அல்லது நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும் .
சுக்கிர தோஷம்(Sukkira dosham( உள்ளவர்கள் :
சுக்கிரபகவானால் ஏற்பட்ட தோஷம் விலகிட லட்சுமி தேவியையும் ,பெருமாளையும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி அர்ச்சனை செய்து வர ,சுக்கிரனால் ஏற்பட்ட தோஷம் விலகும்
சனி தோஷம்(Sani Dosham) உள்ளவர்கள் :
சனிபகவானால் தோஷம் உள்ளவர்கள் அருகிலுள்ள சனீஸ்வரர் ஆலயம் சென்று சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வரவேண்டும் .
ராகு-கேது தோஷம்(Raghu-Kethu-Dosham) உள்ளவர்கள் :
ராகு -கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வணங்கிவர வேண்டும் அல்லது விநாயக பெருமானை திங்கள்கிழமை வணங்கவேண்டும் .
நவகிரக பரிகார கோவில் வழிபாடு:
சூரியன்(Sooriyan) :
முதலில் நவகிரகங்களுக்கு அருள் புரிந்த திருமங்கலக்குடி ஸ்ரீ பிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு ,சூரியனார் கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள சூரிய சக்கரத்தை பிரதிஷடை செய்ய வேண்டும் ,சூரியனை வழிபடுவதாலும்,இங்குள்ள நவகிரகங்களை வழிபடுவதாலும் அணைத்து தோஷங்கங்ளும் நீங்க பெறுவார்
சந்திரன்(Chandiran) :
தாய்க்கு பீடை நோய் ,மனநிலை பாதிப்பு ,சந்திரன் ஜாதகத்தில் நீசம் ,மறைவு,பாவ கிரக சேர்க்கை உள்ளவர்கள் திங்களூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகும் .
செவ்வாய்(Sevvai) :
ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு ,திருமண தடை ,தொழில் சிக்கல் ,வீடு மனை வாங்க ,அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும் செவ்வாய் திசை நடைபெறும் காலங்களிலும் வைத்தீஸ்வரன் கோவிலில் தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்ய எத்தகைய செவ்வாய் தோஷமும் நீங்கும்
புதன்(Pudhan) :
குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் இன்மை ,தடங்கல் ஏற்படும்போது திருவெங்காடு புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதர்ணேஸ்வரரை தரிசித்த பின் அங்கு எழுந்தருளியுள்ள புதனை வழிபட்டால் தோஷம் நீங்கும்
குரு(Guru) :
திருமணத்தடை ,புத்திரதோஷம் குடும்ப ஒற்றுமை நிம்மதி குறைவு ,ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள் வியாழகிழைமை ஆலங்குடி குரு பகவானை நெய் தீபம் ஏற்றி வழிபாடுபவது சிறந்த பரிகாரம் ஆகும் .
சுக்கிரன்(Sukkiran) :
சுக்கிர தோஷம் உள்ளவர்கள் கஞ்சனுர் மூலவர் சுக்கிரீஸ்வரரை சுக்கிர பகவானாக கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும் .திருநாவலூர் பார்கவீஸ்வரரை வழிபடசுக்கிர தோஷம் நீங்கும்
சனி(Sani) :
ஜாதகப்படி 7 1 /2 சனி,அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநள்ளாறு நல தீர்த்தத்தில் நீராடி தர்பபாரண்யேஸ்வரரையும்,போகமர்த்த வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கும் ,சனி பாதிப்புஉள்ளவர் திருதாவூர் சனீஸ்வரனை சனிக்கிழமை அன்று வழிபடவேண்டும் சனி ஈஸ்வரனை பிடிக்க முயன்று கால் முடமாகி ,கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம் இது .
ராகு(Raghu) ;
ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீமத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள ஸ்ரீபெரும்புதூர் சென்று நெய்தீபம் ஏற்றி ,ஸ்ரீமத் ராமானுஜரையும்,ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ,ஸ்ரீ தியாகராஜ நாதவல்லி தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோஷம் நீங்கும்,
கேது(Kethu) :
பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம் ,கண்ணப்பனுக்கு கட்சி தந்த ஸ்தலம் திருக்காளத்தி ,இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரபிக்ஷேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் .