Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கும்பம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 கும்பம்

சனி பெயர்ச்சி பலன்கள் – கும்பம்

இதுவரையில் கும்ப ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச்சனியாக இருந்து வந்த சனிபகவான் தற்போது ராசியிலேயே ஜென்மச் சனியாகி அமர்கிறார். இவர் இங்கு அவிட்டம், சதயம், பூரட்டாதி எனும் நட்சத்திரங்களின் வழியே பலன் தருவார் இங்கிருந்து 3-ஆமிடம் 7.10-ஆமிடத்தைப் பார்க்கிறார். ஏழரைச் சனியில் மத்திய சனி ஆகும்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள்

ஜென்ம சனி

ராசியில் அமரும் சனி ஆட்சியாக உள்ளார். இந்த சனி உங்களுக்கு ஒருவித வைராக்கியம் தருவார். பிடிவாதம் இருக்கும். ‘யாரோ எதையோ சொல்லட்டும்; நாம் முயற்சி செய்வோம்’ என ஏதோ ஒரு விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் முனைவர். இதில் பிளஸ் உள்ளதுபோல் மைனஸ்ஸும் உண்டு. அதாவது மற்றவர்கள் பல்வேறு வேலைகள், செயல்கள், முயற்சிகளில் முனைய, இவர்களோ ஒரேயொரு செயலில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வர். யோசியுங்கள். அது க்ளிக் ஆகி வெற்றி பெற்றால் பரவாயில்லை. அது தோல்வியடைந்துவிட்டால் இவர்கள் நிர்க்கதியாகி நின்றுவிடுவர்.

இதே பிற ராசியில் ஜென்மச் சனி இருந்தால் அவர்களும் நிறைய தோல்வி, அவமானங்களை சந்திக்கத்தான் வேண்டும். ஆனால் அவர்கள் அதிகம் பொருட்படுத்தாமல் அடுத்த வேலைபற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் கும்ப ராசியார் மனதுக்குள்ளேயே குமைந்து மருகுவர். அதிலிருந்து வெளிவர இயலாது. அதனால் வாழ்வின் சில கட்டங்களைக் கடப்பதற்கு சிரமப்படுவர். நல்ல காலத்திலேயே கும்ப ராசி மனிதர்கள் இந்த லட்சணத்தில் இருப்பர். இந்த அழகில் ராசியிலேயே சனி. இவர்களில் பலர் அவ்வப் போது வீட்டைவிட்டு சென்றுவிடுவார்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி 3ம் பார்வை பலன்கள்

சனி கும்ப ராசியில் அமர்ந்து 3-ஆமிடத்தைப் பார்த்து முடங்கச் செய்வார். வீரம் விலகும். தைரியம் தடுமாறும். வீரியம் விளங்காமல் போய்விடும். முயற்சி முடங்கும். ஞாபகம் மிகக் குறையும். மனபலம் மன்றாடும். உறுதி உருக்குலையும். குத்தகை விஷயம் குதித்து அடுத்த ஊருக்கு ஓடிவிடும். ஒப்பந்தம் ஒப்பேறாது. பணியாள் பணிக்கு வர சண்டித்தனம் செய்வார். வீடு மாற்ற வேண்டிவரும்.

அதனால் இந்த சனிப்பெயர்ச்சியில் யோசனையுடன் முன்கூட்டியே வரியைக் கட்டிவிடுவீர்கள். சிலருக்கு அரசு ஆணையால் வீடு இழப்பு இருக்கும். சிலரது இரு சக்கர வாகனம் காணாமல் போகக்கூடும். உங்களைப் பற்றிய வதந்தி கைபேசியில் உலா வரும்.

சனி 3-மிடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு ஆண்மைக் குறைவு போன்ற குழப்பம் வரும் அதற்காக கண்டலேசியம் சாப்பிட வேண்டாம். இந்த சனிப்பெயர்ச்சி முழுக்க இந்த நிலைதான் பலருக்கும் நீடிக்கும்.

சனி 7ம் பார்வை பலன்

கும்ப ராசியில் அமர்ந்த சனி தனது ஏழாம் பார்வையால் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். 7-ஆமிடம் கும்பராசிக்கு சிம்மத்திற்குரிய வீடாகும். இது பகை வீடு குரியன் நூறு சதவிகித பகையுடையது கும்ப ராசி அன்பர்களுக்கு தனது வாழ்க்கைத் துணையைக் கண்டால் கோபமாகும். சிலருக்கு அநியாய வெறுப்பு வரும் இதற்கு மறைமுகமாக உங்கள் பெற்றோர் காரணமார். சில திருமணங்கள் விவாகரத்திற்காக கோர்ட் படி ஏறும். சில கல்யாண தம்பதிகளுக்குள் பஞ்சாயத்து நடக்கும். இந்த காலகட்டத்தில் திருமணத்திற்கு வரன் பார்த்தால் திருமணம் அமைய மிகத் தாமதமாகும்.

இந்த மனப்போத்கால் திருமணம், வணிகம், குடும்ப வாழ்க்கை, நண்பர்கள், உறவினர்கள், சில அரசு அதிகார நலன் விரும்பிகள், சில அரசியல்வாதிகள். உங்கள் தந்தை என. உங்கள் வாழ்க்கைக்கு கைகொடுத்து உதவுபவர்களை சந்தேகப்பட்டே விளக்கும்படி ஆகிவிடும்.

இந்த சனியின் பார்வை உங்களை மனிதர்கள் அண்டாதவராக்கிவிடும். சிலர் ‘யாரும் உதவ மாட்டேன்கிறான்; தனியா கிடந்து கஷ்டப்படுறேனே’ என புலம்புவீர்கள். வெற்றி பெறும் வாய்ப்புள்ள வழக்குகளும் ஏனே இந்த காலகட்டத்தில் தோற்றுவிடும். வெளிநாட்டு விஷயங்களும் திருப்தியாக இராது அரசியல்வாதிகள் பொதுக்கூட்டம் போட்டால் பணம் கொடுத்து அழைத்தாலும் ஒருவரும் வரமாட்டார். காலி நாற்காலி களைப் பார்த்து பேச வேண்டியிருக்கும். அரசு
அதிகாரிகள் மக்களின் குறைதீர்க்கப் போளால் உங்களைச் சுற்றி நின்று வாதாடுவர் அலுவலகத்தில் நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அத்தனையும் தவறாகக் கூடும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி 10ம் பார்வை பலன்

சனி கும்பத்தில் அமர்ந்து தனது பத்தாம் பார்வையால் 10ஆமிடத்தைப் பார்க்கிறார். 10ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம். முதலில் தொழில் லாபத்தைக் குறைப்பார். லாபம் குறைந்த தொழில் செய்வதற்கு சற்று சலிப்பாக இருக்கும். இந்த லாபக் குறைவு பணப்புழக்கத்தைக் குறைக்கும். ஒன்று தொழிலில் மேலும் முதலீடு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் தோன்றும், அல்லது செலவு அதிகமாகும்.

இவ்விதமான கட்டத்தில் தொழில் தொடர்வது அவசியமா? என வினா எழும் இந்த கேள்வி உங்களுக்குள் வருமாறு சனியின் பார்வை வேலை செய்யும் சில பங்குத் தொழில் விறுவிறுப்பில்லாமல் ஆகும் இந்த கவலையில் கொஞ்சம் கெட்ட பழக்கம் தொடரும். உங்களின் சிலரின் வாரிசுகள் நான் கடையைப் பார்த்துக் கொள்கிறேன் என நுழைந்து அவர்களும் சொதப்பி விடுவார்கள்.

சிலரின் தவறான அறிவுரைகள் உங்கள் வாழ்வைக் கீழிறக்கும். இதனால் கௌரவக் குறைச்சல் வரும். தொழில் செய்யுமிடத்தில் ஏற்படும் காதல் விஷயம் அவமானம் தேடித் தரும். மந்திரி பதவி போன்று உயர் பதவியில் இருப்பவர்கள் பதவி இறக்கத்தை அல்லது பதவி இழப்பை சந்திப்பர். தொழில் மாற்றம் சுகம் தராது தொழிலில் இடமாற்றம் பரிமளிக்காது.சுரங்கத் தொழில், விவசாயம், மின்சாரம், தாதுப் பொருள், உலோகம் இவை சம்பந்த தொழில் கொண்டோர் சற்று கவனமாக இருக்கவேண்டும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

பலன் தரும் பரிகாரம்

திருநள்ளாறு சனி பகவானையும், நள நாராயணப் பெருமாளையும், ஸ்ரீ தர்ப்பாரணயேஸ்வர ஸ்வாமியையும் நன்கு வணங்கவும். சனீஸ்வரன் கோவில் அர்ச்சகருக்கு பஞ்சுத்திரி, தீப்பெட்டி, வஸ்திரம் போன்று வாங்கிக்கொடுக்கவும். இவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!