ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026:மேஷம்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்….
முருகப்பெருமானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே! வருகின்ற புத்தாண்டு உங்களுக்கு பொதுவாக மாற்றமும் ஏற்றமும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும்.
வருடத்தின் பாதியில் நிகழ இருக்கிற குரு பெயர்ச்சி, வருடத்தின் கடைசியில் வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சி ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும், ஏழரை சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் சோம்பலை விரட்டுவதும் அலட்சியத்தை துரத்துவதும் அவசியம்.
அலுவலகத்தில் உங்கள் செயல்களுக்கு ஆதரவும், பணிகளுக்கு பாராட்டும் கிடைக்கும். மேல் அதிகாரிகளால் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். பல காலம் கனவாகவே இருந்த பதவி, புகழ் இப்போது தேடி வரும்.
குடும்பத்தில் விசேஷ நிகழ்வுகள் நடக்கும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட சுப காரியங்கள் படிப்படியாக கைகூட தொடங்கும். வாரிசுகளால் பெருமைகள் ஏற்படும். வீடு, வாகனம், மனை, ஆபரணம் சேரும்.
அரசியல் அரசுத் துறையினருக்கு திடீர் ஏற்றம் ஏற்படும். பதவி ,கௌரவம், பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சி தரும். இதுவரைக்கும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தவங்க கூட புதிய பொறுப்புகளால் பிரகாசிக்க வாய்ப்பு வரும். பெரிய மனிதர்கள் சந்திப்பு ஆதாயம் தரும்.
மாணவர்களுக்கு இந்த ஆண்டு உயர்வுகளை தரும் காலகட்டமாக இருக்கும்.
கலை,படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் படிப்படியாக வர தொடங்கும். எந்த சமயத்திலும் ரகசியங்களை பரம ரகசியமாக வைத்துக் கொள்வது அவசியம். பிறருக்கு வாக்குத்தரும் சமயங்களில் கவனமாக இருங்கள்.
பெண்களுக்கு அதிர்ஷ்டத்தின் அளவு அதிகரிக்கக் கூடிய ஆண்டாக இந்த வருடம் அமையும். எதிர்கால ஏற்றத்துக்கான தீர்மானங்களையும், திட்டமிடலையும் இந்த சமயத்தில் செய்வது நல்லது. மனம் போல் திருமணமும் குழந்தை பேரும் கிட்டும். பணி புரியும் பெண்களுக்கு மேன்மைகள் ஏற்படும். அதே சமயம் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம்.
வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. உடற்பயிற்சிகள் அடிக்கடி செய்யுங்கள். அடிவயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம் கவனம்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும். மாதம் தோறும் ஏதாவது சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நற்பலன்களை அதிகப்படுத்தி தரும்.







