Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: கன்னி

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: கன்னி

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026

கன்னி

புதன் பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனிபகவான் உள்ளார்.ஜூன் மாதம் வரக்கூடிய பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்திற்கு வருகிறார். வருட முடிவில் டிசம்பர் மாதம் நிகழ இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியில் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு ராகுவும் 11ஆம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். இத்தகைய அமைப்புகளினால் இது உங்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றத்தை தரக்கூடிய வருடமாக இருக்கும். அதே சமயம் எதிலும் நேர்மையும் நிதானமும் அவசியம். 

வேலை செய்யும் இடத்தில் தேங்கி கிடந்த பதவி உயர்வுகள் தேடி வரத் தொடங்கும். மனம் போல் இடமாற்றம், பதவி உயர்வுகள் கிட்டும். சிலருடைய பேச்சில் ஏமாந்து ஏமாற்றம் ஆக்கிக்க வாய்ப்பு உண்டு. எந்த சமயத்திலும் அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனையை கேட்க தவற வேண்டாம். 

குடும்பத்தில் சந்தோஷம் இடம் பிடிக்கும். அதேசமயம் தம்பதியர் இடையே மனம் விட்டு பேசுங்கள். வீண் தர்க்கம் தவிர்க்கவில்லை என்றால் விரிசல்கள் விழுந்து விடலாம். உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். வாரிசுகள் வாழ்க்கையில் இருந்த சுபகாரிய தடைகள் விலகும்.மனம் மகிழும் படி குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகனம் புதுப்பிக்க சந்தர்ப்பம் அமையும். உறவுகள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். 

செய்யும் தொழிலில் லாபம் வரத் தொடங்கும். அதே சமயம் வேண்டாத நட்புகளும் தேடி வரலாம். உணர்ந்து முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது உத்தமம். புதிய ஒப்பந்தங்களில் சுய கவனத்துடன் இருங்கள். 

அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத பதவி கௌரவம் பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சி தரும். 

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 கன்னி

மாணவர்களின் மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும் திட்டமிட்டு படித்தால் மனம் போல் வெளிநாட்டு கல்வி வாய்ப்பு கல்வி உதவித்தொகைகள் கிட்டும். 

கலை மற்றும் படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக வரத் தொடங்கும். கசந்த காலமாக இருந்த பழைய அனுபவத்தை பாடமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு அதிர்ஷ்டத்தின் அளவு அதிகரிக்க கூடிய ஆண்டாக வருடத்தின் பிற்பாதி இருக்கும். எதிர்கால ஏற்றத்துக்கான தீர்மானங்களையும் திட்டமிடலையும் செய்வது நல்லது. பணி புரியும் பெண்களுக்கு மேன்மைகள் ஏற்படும். அதே சமயம் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடலாம். மூத்த உறவுகளுடன் இருந்த மனக்கசப்பு மறையும். மாதாந்திர உபாதை நாட்களில் நாட்களிலும், மழலையை சுமக்கும் சமயங்களிலும் கவனமாக இருங்கள். 

முக உறுப்புகள், கழிவு உறுப்புகள், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

பெருமாள் வழிபாடு உங்களுக்கு அளப்பரிய செல்வத்தை பெற்றுத் தரும். ஆகையால் புதன்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அந்த வேங்கடவனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். வருடம் முழுவதும் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!