ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே!! உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சனிபகவான் உள்ளார். ஜூன் மாதம் நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்துக்கு வருகிறார். அவருடைய ஐந்தாம் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. வருடக் கடைசியில் ராகுவும்-கேதுவும் முறையே உங்கள் ராசிக்கு 3 மற்றும் 9ஆம் இடத்துக்கு வருகிறார்கள். இத்தகைய அமைப்பின் காரணமாக இந்த ஆண்டு உங்களுக்கு உயர்வுக்கு உத்திரவாதம் கிடைக்கும். அதே சமயம் சோம்பலை விரட்டுவதும் முயற்சிகளை தொடர்வதும் முக்கியம்..
வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த சங்கடமான நிலை மாறி சாதகங்கள் படிப்படியாக உருவாகத் தொடங்கும். அதேசமயம் எதிர்பாரா இடமாற்றம், பதவி மாற்றம் வரலாம். அவற்றை மறுக்காமல் ஏற்றுக் கொள்வதும் பொறுப்புடன் செயல்படுவதும், உங்களை மேலும் உயர்த்தும். பணி சார்ந்த பயணங்கள் செல்லும் போது உரிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த சமயத்திலும் முடங்காமல் இருந்தால் முன்னேற்றம் தொடர்ச்சியாக இருக்கும்.
குடும்பத்தில் விசேஷங்கள் படிப்படியாக வர தொடங்கும். வாழ்க்கைத் துணை உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வரவு சீராக இருக்கும். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் திருமண தடை நீங்கும். குழந்தை பேருக்காக காத்திருப்பவர்கள் அவரவர் குல தெய்வத்தை வணங்குவதும், முறையாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சையை தவறாமல் எடுத்துக் கொள்வதும் அவசியம்.
செய்யும் தொழில் சீரான வளர்ச்சி ஏற்படும். அது தொடர வேண்டும் என்றால் நேரான வழியும் நிலையான முயற்சியும் முக்கியம். கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் வேண்டாம். வர்த்தக கடன்களை முறையாக பயன்படுத்துங்கள். இரும்பு வர்த்தகத்தில் எச்சரிக்கை முக்கியம்.
அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்தின் அனுமதி இல்லாத எந்த செயலிலும் கவனம் கனவிலும் ஈடுபட வேண்டாம். புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது அடக்கமா செயல்படுவது நல்லது.
கலை மற்றும் படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் படிப்படியாக வர தொடங்கும். பழம்பெருமை பேசுவதும் வறட்டு கௌரவம் பார்ப்பதும் வேண்டாம்.
பெண்களுக்கு எந்த வருடம் நன்மைகள் அதிகரிக்கும். உறவுகள் யாரோடும் வீண் வாக்குவாதம் வேண்டாம். வரவை சுப செலவாகி தக்க வைப்பது புத்திசாலித்தனம். மணமாலை சூடும் நேரமும், தாயாகும் பேரும் தாமதமானாலும் நிச்சயம் கிடைக்கும். ஹார்மோன் உபாதையின் அறிகுறி ஏதாவது தெரிந்தால் உடனே கவனியுங்கள்.
குலதெய்வ வழிபாடு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கின்ற குற்றங்களை நீக்கி குதூகலப்படுத்தும். ஆகையால் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வாருங்கள். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு ஏற்றம் நிறைந்த வருடமாக அமையும்.













