அதிஷ்டத்தை தரும் அற்புத கிரக அமைப்புகள்
ஜாதகரீதியில் அதிர்ஷ்டசாலிகள் யார்? ரிஷபம் ஜென்ம லக்னமாகவும் அதில் சந்திரனும் ,மீனத்தில் உச்ச சுக்கிரனும், மிதுனத்தில் குருவும், துலாத்தில் உச்ச சனியும் ஆக ஒருவருடைய ஜாதகம் அமைந்திருந்தால் அவர் கோடீஸ்வரராக திகழ்வார்.
- ஜன்ம லக்னம் மேஷமாகவும் சூரியன் அதில் உச்சமடைந்து தங்கியும், தனுசில் குருவும் ,சந்திரனும் ,சனியும் தங்கி இருந்தால் ஜாதகர் பெரும் செல்வந்தராகவும், அரசியல் தலைவராகவும், சமூகத்தில் புகழுடனும் விளங்குபவராக இருப்பார்.
- லக்னத்தில் குரு, சுக்கிரன், புதன் ஆகியவர்கள் தங்கியும், சூரியன் பத்தாம் இல்லத்தில் வலிமை பெற்று, சனி ஏழாம் வீட்டில் தங்கியும் இருந்தால், ஜாதகர் அரச உதவியுடன் சுகத்துடன் வாழ்வான்.
- லக்னம் கன்னியாகவும், புதனும், சந்திரனும், குருவும், மீனத்திலும் சூரியன், சந்திரன் பத்தாம் இடத்திலும் அமர்ந்து இருந்தால் ஜாதகர் செல்வந்தராகவும், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவராகவும் இருப்பார்.
- மூன்று சுப கிரகங்கள் உச்சம் அடைந்து இருந்தால், ஜாதகர் மண்டலாதிபதியாகவும் அனைவராலும் மதிக்கப்படுபவராகவும் விளங்குவார்.
- லக்னத்தில் குரு தங்கி அவர் உச்சமும் அடைந்து, மேலும் இரண்டு சுப கிரகங்கள் உச்சம் அடைந்து இருந்தால் ஜாதகர் ராஜயோகியாக விளங்குவார்.
- புதன் கன்னியிலும் வேறு இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் தங்கள் சொந்த இல்லங்களிலும் தங்கி இருந்தால் ஜாதகர் பெரும் பணக்காரராகவும்,உயர்ந்த பதவி வகிப்பவராகவும் இருப்பார்.
- சனி மகரத்தில் தங்கி அதுவே லக்னமாகவும் அமைந்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவர்கள் சொந்த இல்லங்களில் தங்கி இருந்தால், ஜாதகன் மாட மாளிகைகளுடன், பரிவாரங்களுடன், வசதிகளுடன் ஒரு குறையுமின்றி சுகத்துடன் வாழ்வான்.
- லக்கனம் கடகமாகி அதில் குரு தங்கியும், செவ்வாய், சந்திரன், சுக்கிரன் வளமான இடங்களில் தங்கியும் இருந்தால் ஜாதகர் செல்வந்தராகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பார்.
- லக்னத்தில் சந்திரன் உச்சம் அடைந்து, ஏழாவது வீட்டில் குருவும் அமைந்து, சனியும், சூரியனும் தங்கள் சொந்த இடங்களான மகரம் ,சிம்மம் ஆகிய வீடுகளில் தங்கி இருந்தால் ஜாதகர் மிக்க ஐஸ்வர்யங்களோடும், மிக்க பதவிகளோடும் வாழ்வார்.
- லக்னத்தில் செவ்வாய் உச்சம் அடைந்து, குரு, புதன், சந்திரன், சுக்கிரன் ஆகிய நால்வரும் வளமுடன் சொந்த இல்லங்களில் தங்கி இருந்தால் ஜாதகர் திட ஆரோக்கியத்துடன் கூடியவராகவும் ,செல்வந்தராகவும், நீதி துறையில் உயர்ந்த அங்கம் வகிப்பவராகவும் திகழ்வார்.
இதையும் கொஞ்சம் படிங்க : 12 லக்னம் பற்றிய குறிப்புகள் மற்றும் அந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
- லக்னம் மீனமாகவும் அதில் சந்திரன் தங்கியும், செவ்வாய், சூரியன், சனி ஆகியவர்கள் தங்கள் சொந்த இல்லங்களில் தங்கி இருந்தால், ஜாதகர் பெரிய நிலச்சுவான்தார் ஆகவும் ,செல்வந்தராகவும், உயர் பதவி வகிப்பவராகவும் விளங்குவார்.
- லக்கினத்திற்கு ஐந்தாம் இல்லத்துக்கு உடையவன் பதினோராம் இல்லத்திலும், பதினோராம் இல்லத்துக்கு உடையவன் ஐந்தாம் இல்லத்திலும் தங்கினாலும் 9, 10, 11 ஆகிய இடங்களில் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தாலும் ஜாதகர் ஆரோக்கியத்துடனும் செல்வம், செல்வாக்கு ஆகியவைகளுடன் உயர்ந்த பதவி வகிப்பவராக இருப்பார்.
- தனாதிபதி, பஞ்சமாதிபதி, லாபாதிபதி பாக்கியாதிபதி ஆகியவர்கள் நல்ல இல்லங்களில் தங்கி சுபகிரகங்களின் பார்வைப் பெற்றால் ஜாதகர் அரச போகத்தை அனுபவிப்பார், ஆனால் 6 ,8, 12 ஆகிய இடங்களில் அதிபதிகளும் மேற்கூறிய கிரகங்களுக்கும் எவ்வகையிலும் தொடர்பு இருக்கக் கூடாது. அவர்கள் சேர்ந்து இருந்தாலும் அவர்களின் பார்வை ஏற்பட்டால் நேர்மறையாக மாறிப் போய்விடும்.
- குரு, புதன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சொந்த இல்லங்களில் தங்கியும் பாவ கிரகங்களின் பார்வை ஏற்படாமல் இருந்தால் ஜாதகர் உயர்ந்த பதவியும், புகழும் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்வார்.
- லக்னாதிபதி, பாக்கியாதிபதி, ராசியாதிபதி ஆகிய நால்வரும் தொடர்பில் இருந்தாலும், பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தாலும், நால்வரும் சேர்ந்து நல்ல இடங்களில் தங்கி இருந்தாலும், 1, 2 ,4, 5, 7 ,9 ,10 ,11 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் வலிமையுடன் தங்கியிருந்தாலும் ஜாதகருக்கு ராஜயோகம் கிடைக்கும்.
- சந்திரனுக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருப்பது சுகபோகங்களை பூரணமாக அனுபவிக்க ஏற்றதாகும்.
- லக்னாதிபதி பலமாக இருந்தால் ஜாதகர் செல்வச் சீமானாக மாத்திரம் இருப்பார் என்பது அல்ல, ஜாதகர் நீண்ட ஆயுளுடனும் திட ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு, அரசியலில் புகழ் முதலியவற்றுடன் சிறந்த பேச்சாளராகவும், அமைச்சராகவும் அவருக்கு அரசியலிலும், அரசாங்கத்திலும் புகழ் அளவுக்குமீறி இருந்து வரும்.
- லக்கினம் அல்லது சந்திர ராசிக்கு 2, 4 ,5 ,7 ,9, 10 ,11 ஆகிய இடங்களில் ஏதாவது மூன்று கிரகங்கள் பலம் உடன் தங்கி இருந்தால் ஜாதகர் அரசியலில் செல்வாக்கு உள்ள தலைவராகவும் பாவ காரியங்களை கண்டு அஞ்சுபவர்கள், செல்வந்தராகவும் விளங்குவார்.
- லக்னாதிபதி பலம் உள்ளவனாகவும் பாவ கிரகங்களின் பார்வையில் இருந்து விடுபட்டவனாகவும் இருப்பது மிகவும் அவசியம்.
- சுப கிரகங்கள் நல்ல இடங்களில் தங்கியும் கேந்திர திரிகோணத்தில் அமர்ந்தோ அல்லது ஒன்றையொன்று பார்த்துக் கொண்டே இருந்தால் ஜாதகர் மிகச் சிறந்த கல்விமான் ஆகவும் செல்வந்தராகவும் இருப்பார்.
இதையும் கொஞ்சம் படிங்க : 12 லக்னம் பற்றிய குறிப்புகள் மற்றும் அந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
- சந்திரனுக்கு கேந்திரத்தில் குருவும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் செல்வச் செழிப்புடன் விளங்கும் நல்ல இடத்தில் தங்கினாலும் 1, 2 ,4, 5 ,7 ,9, 10 ,11 இடங்களில் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடன் இருந்தால் ஜாதகன் அரசியலில் சிறந்து விளங்குவார் உயர் பதவி வகிப்பார் சுகபோகங்களுடன் வாழ்வார்…