Homeஜோதிட குறிப்புகள்அதிஷ்டத்தை தரும் அற்புத கிரக அமைப்புகள்

அதிஷ்டத்தை தரும் அற்புத கிரக அமைப்புகள்

அதிஷ்டத்தை தரும் அற்புத கிரக அமைப்புகள்

ஜாதகரீதியில் அதிர்ஷ்டசாலிகள் யார்? ரிஷபம் ஜென்ம லக்னமாகவும் அதில் சந்திரனும் ,மீனத்தில் உச்ச சுக்கிரனும், மிதுனத்தில் குருவும், துலாத்தில் உச்ச சனியும் ஆக ஒருவருடைய ஜாதகம் அமைந்திருந்தால் அவர் கோடீஸ்வரராக திகழ்வார்.

  •  ஜன்ம லக்னம் மேஷமாகவும் சூரியன் அதில் உச்சமடைந்து தங்கியும், தனுசில் குருவும் ,சந்திரனும் ,சனியும் தங்கி இருந்தால் ஜாதகர் பெரும் செல்வந்தராகவும், அரசியல் தலைவராகவும், சமூகத்தில் புகழுடனும் விளங்குபவராக இருப்பார்.
  • லக்னத்தில் குரு, சுக்கிரன், புதன் ஆகியவர்கள் தங்கியும், சூரியன் பத்தாம் இல்லத்தில் வலிமை பெற்று, சனி ஏழாம் வீட்டில் தங்கியும் இருந்தால், ஜாதகர் அரச உதவியுடன் சுகத்துடன் வாழ்வான்.
  • லக்னம் கன்னியாகவும், புதனும், சந்திரனும், குருவும், மீனத்திலும் சூரியன், சந்திரன் பத்தாம் இடத்திலும் அமர்ந்து இருந்தால் ஜாதகர் செல்வந்தராகவும், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவராகவும் இருப்பார்.
  •  மூன்று சுப கிரகங்கள் உச்சம் அடைந்து இருந்தால், ஜாதகர் மண்டலாதிபதியாகவும் அனைவராலும் மதிக்கப்படுபவராகவும் விளங்குவார்.
அற்புத கிரக அமைப்புகள்
  • லக்னத்தில் குரு தங்கி அவர் உச்சமும் அடைந்து, மேலும் இரண்டு சுப கிரகங்கள் உச்சம் அடைந்து இருந்தால் ஜாதகர் ராஜயோகியாக விளங்குவார்.
  • புதன் கன்னியிலும் வேறு இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் தங்கள் சொந்த இல்லங்களிலும் தங்கி இருந்தால் ஜாதகர் பெரும் பணக்காரராகவும்,உயர்ந்த பதவி வகிப்பவராகவும் இருப்பார்.
  • சனி மகரத்தில் தங்கி அதுவே லக்னமாகவும் அமைந்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவர்கள் சொந்த இல்லங்களில் தங்கி இருந்தால், ஜாதகன் மாட மாளிகைகளுடன், பரிவாரங்களுடன், வசதிகளுடன் ஒரு குறையுமின்றி சுகத்துடன் வாழ்வான்.
  • லக்கனம் கடகமாகி அதில் குரு தங்கியும், செவ்வாய், சந்திரன், சுக்கிரன் வளமான இடங்களில் தங்கியும் இருந்தால் ஜாதகர் செல்வந்தராகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பார்.
  • லக்னத்தில் சந்திரன் உச்சம் அடைந்து, ஏழாவது வீட்டில் குருவும் அமைந்து, சனியும், சூரியனும் தங்கள் சொந்த இடங்களான மகரம் ,சிம்மம் ஆகிய வீடுகளில் தங்கி இருந்தால் ஜாதகர் மிக்க ஐஸ்வர்யங்களோடும், மிக்க பதவிகளோடும் வாழ்வார்.
  • லக்னத்தில் செவ்வாய் உச்சம் அடைந்து, குரு, புதன், சந்திரன், சுக்கிரன் ஆகிய நால்வரும் வளமுடன் சொந்த இல்லங்களில் தங்கி இருந்தால் ஜாதகர் திட ஆரோக்கியத்துடன் கூடியவராகவும் ,செல்வந்தராகவும், நீதி துறையில் உயர்ந்த அங்கம் வகிப்பவராகவும் திகழ்வார்.

இதையும் கொஞ்சம் படிங்க : 12 லக்னம் பற்றிய குறிப்புகள் மற்றும் அந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

  • லக்னம் மீனமாகவும் அதில் சந்திரன் தங்கியும், செவ்வாய், சூரியன், சனி ஆகியவர்கள் தங்கள் சொந்த இல்லங்களில் தங்கி இருந்தால், ஜாதகர் பெரிய நிலச்சுவான்தார் ஆகவும் ,செல்வந்தராகவும், உயர் பதவி வகிப்பவராகவும் விளங்குவார்.
  • லக்கினத்திற்கு ஐந்தாம் இல்லத்துக்கு உடையவன் பதினோராம் இல்லத்திலும், பதினோராம் இல்லத்துக்கு உடையவன் ஐந்தாம் இல்லத்திலும் தங்கினாலும் 9, 10, 11 ஆகிய இடங்களில் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தாலும் ஜாதகர் ஆரோக்கியத்துடனும் செல்வம், செல்வாக்கு ஆகியவைகளுடன் உயர்ந்த பதவி வகிப்பவராக இருப்பார்.
அற்புத கிரக அமைப்புகள்
  • தனாதிபதி, பஞ்சமாதிபதி, லாபாதிபதி பாக்கியாதிபதி ஆகியவர்கள் நல்ல இல்லங்களில் தங்கி சுபகிரகங்களின் பார்வைப் பெற்றால் ஜாதகர் அரச போகத்தை அனுபவிப்பார், ஆனால் 6 ,8, 12 ஆகிய இடங்களில் அதிபதிகளும் மேற்கூறிய கிரகங்களுக்கும் எவ்வகையிலும் தொடர்பு இருக்கக் கூடாது. அவர்கள் சேர்ந்து இருந்தாலும் அவர்களின் பார்வை ஏற்பட்டால் நேர்மறையாக மாறிப் போய்விடும்.
  • குரு, புதன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சொந்த இல்லங்களில் தங்கியும் பாவ கிரகங்களின் பார்வை ஏற்படாமல் இருந்தால் ஜாதகர் உயர்ந்த பதவியும், புகழும் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்வார்.
  • லக்னாதிபதி, பாக்கியாதிபதி, ராசியாதிபதி ஆகிய நால்வரும் தொடர்பில் இருந்தாலும், பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தாலும், நால்வரும் சேர்ந்து நல்ல இடங்களில் தங்கி இருந்தாலும், 1, 2 ,4, 5, 7 ,9 ,10 ,11 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் வலிமையுடன் தங்கியிருந்தாலும் ஜாதகருக்கு ராஜயோகம் கிடைக்கும்.
  • சந்திரனுக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருப்பது சுகபோகங்களை பூரணமாக அனுபவிக்க ஏற்றதாகும்.
  • லக்னாதிபதி பலமாக இருந்தால் ஜாதகர் செல்வச் சீமானாக மாத்திரம் இருப்பார் என்பது அல்ல, ஜாதகர் நீண்ட ஆயுளுடனும் திட ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு, அரசியலில் புகழ் முதலியவற்றுடன் சிறந்த பேச்சாளராகவும், அமைச்சராகவும் அவருக்கு அரசியலிலும், அரசாங்கத்திலும் புகழ் அளவுக்குமீறி இருந்து வரும்.
  • லக்கினம் அல்லது சந்திர ராசிக்கு 2, 4 ,5 ,7 ,9, 10 ,11 ஆகிய இடங்களில் ஏதாவது மூன்று கிரகங்கள் பலம் உடன் தங்கி இருந்தால் ஜாதகர் அரசியலில் செல்வாக்கு உள்ள தலைவராகவும் பாவ காரியங்களை கண்டு அஞ்சுபவர்கள், செல்வந்தராகவும் விளங்குவார்.
  • லக்னாதிபதி பலம் உள்ளவனாகவும் பாவ கிரகங்களின் பார்வையில் இருந்து விடுபட்டவனாகவும் இருப்பது மிகவும் அவசியம்.
  • சுப கிரகங்கள் நல்ல இடங்களில் தங்கியும் கேந்திர திரிகோணத்தில் அமர்ந்தோ அல்லது ஒன்றையொன்று பார்த்துக் கொண்டே இருந்தால் ஜாதகர் மிகச் சிறந்த கல்விமான் ஆகவும் செல்வந்தராகவும் இருப்பார்.

இதையும் கொஞ்சம் படிங்க : 12 லக்னம் பற்றிய குறிப்புகள் மற்றும் அந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

  • சந்திரனுக்கு கேந்திரத்தில் குருவும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் செல்வச் செழிப்புடன் விளங்கும் நல்ல இடத்தில் தங்கினாலும் 1, 2 ,4, 5 ,7 ,9, 10 ,11 இடங்களில் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடன் இருந்தால் ஜாதகன் அரசியலில் சிறந்து விளங்குவார் உயர் பதவி வகிப்பார் சுகபோகங்களுடன் வாழ்வார்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!