திருப்பதி கோவிலின் ஏடுகளிலிருந்து எடுக்க பட்ட அதிசயங்கள்!!!
‘லட்டு’ என்றால் நம் நினைவுக்கு வருவது திருப்பதிதான்.வாழ்க்கையில் பல திருப்பங்களை தரும் தலமாக திருப்பதி கோவில் ஏடுகளில் இருந்து எடுக்கபட்ட அதிசய தகவல்கள்.
தெய்வ சிலைகள் பொதுவாக கருங்கல்லில்தான் செதுக்க பட்டிருக்கும் .ஆனால் இச்சிலையில் சிற்பியின் உளி பட்ட எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜலபதி சிலையில் காண முடியாது.அதுமட்டுமல்ல சிலையில் வடிக்க பட்டுள்ள நெற்றிசுட்டி ,காதணிகள் ,புருவங்கள் ,நாகபரணங்கள் எல்லாம் நகை போல பளபளப்பாக மின்னுகின்றன ..
திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம் ,இருந்தாலும் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போது ,பெருமாளுக்கு வியர்த்து விடும் ,பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள் .ஏனெனில் ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பதிலேயே இருக்கும் .இது ஒரு அதிசயம் தானே
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ,ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளை களைவார் .அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாக கொதிப்பதை உணர்கின்றனர் ..
ஏழுமலையானுக்கு ஒரு புதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பார்.தயிர் சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் ,கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ள குலசேககர படியை தாண்டுவதில்லை
பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது .ஒரு முழம் நீளமும் ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாக திகழ்கிறது .இந்த ஆடைக்கு மேல் சாத்து வஸ்திரம் என்று பெயர் .வெள்ளியன்று மட்டுமே இதை அணுவிக்க முடியும் .
ஏழுமலையானின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ ,நேபாளத்தில் இருந்து கஸ்தூரி ,சீனாவில் இருந்து புனுகு ,பாரீசில் இருந்து வாசனை திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் .
பெருமாளுக்கு உரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன .சீனாவில் இருந்து கற்பூரம் ,அகில் ,சந்தனம் ,அம்பர், தக்கோலம் ,லவங்கம் ,குங்குமம் ,தாமலம் ,நிரியாசம் ,போன்ற வாசனை பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
ஏழுமலையான் சாற்றியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது .இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாற்ற முடியும் .சூரிய கடாரியின் எடை 5 கிலோ .ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100கோடி மதிப்பு கொண்டது உலகிலேயே இதைபோன்ற நீலக்கல் வேறு கிடையாது.
மராட்டிய மன்னர் ராகோஜி பொன்சலே மிகப்பெரிய எமரால்ட் பச்சை கல்லை பெருமாளுக்குகாணிக்கையாகியுள்ளர்.இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கபடுகிறது .
அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதர்கான வெள்ளி வெங்கடாஜலபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும் .பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்குரிய நகைகளை தந்துள்ளார்
அபிஷேகத்தின்போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது .திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை செய்கிறார்.
திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடை கத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கபடுகிறது .செஞ்சு இனத்தை சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்.
1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன .இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும் ,50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளது..
GOOD NEWS FORM YOUR WEBSITE