பட்டுக்கோட்டை ஸ்ரீநாடி அம்மன்
வரலாறு:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஸ்ரீ நாடியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
சிறப்பு:
ஸ்ரீ நாடியம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பதால் ஸ்ரீ நாடியம்மன் என பெயர் பெற்றார். இவள் பார்வதியின் அம்சம் பெற்றவள் .
பரிகாரம் :
பங்குனி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அன்று கோலாகலமான பண்டிகை கனகதார பூஜையுடன் தொடங்கும். இப்பண்டிகை,பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படும். இப்பண்டிகையின் போது வெள்ளி காமதேனு, அன்னம், ரிஷபம்,வெள்ளி சிம்மம் ,முத்துப் பல்லக்கு போன்ற வெவ்வேறு வாகனங்களில் நாடியம்மன் உலா வருவாள். இந்தப் பண்டிகை நாட்களில் சென்று அம்மனை தரிசித்து வேண்டிய வரம் பெறலாம்.
வழித்தடம் -Google Map
தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இத்தலத்திற்கு பேருந்துகள் மூலம் செல்லாம்