அஸ்வினி நட்சத்திரம்
அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சூரியனை :
- செவ்வாய் பார்த்தால் அதிக முரடன்
- புதன் பார்த்தால் நல்ல அக சவுக்கியம். (சூரியனும் புதனும் பெரும்பாலும் அடுத்தடுத்து சஞ்சாரம் பண்ணுமானதால்)பார்வை சாத்தியமில்லை.
- குரு பார்த்தால் இவன் தாட்சிணியவாதி அன்புள்ளவன். அரசுப் பதவியையும் செல்வாக்கையும் அனுபவிப்பான்
- சுக்கிரன் பார்த்தால் சிற்றின்ப ஈடுபாடு அதிகம் இருக்கும் (இதுவும் அவ்வளவாக சாத்தியமில்லை) ஏன் என்றால் சுக்கிரனும் பெரும்பாலும் சூரியனுக்கு நெருக்கமாகவே சஞ்சரிப்பவன்.
- சனி பார்த்தால் இவன் ஏழையாக இருப்பான். சோம்பேறி, உழைப்பில் ஈடுபாடு இருக்காது.
அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சந்திரனை :
- சூரியன் பார்த்தால் தன்னை நாடியவருக்கு உதவி செய்வான், ஆனால் முரடன். அரசு செல்வாக்கு பதவி வகிப்பவர்.
- செவ்வாய் பார்த்தால் பல்-காது நோய்கள் இருக்கும். சமுதாயத்தில் பிறரை நம்பி வாழ்பவன்.
- புதன் பார்த்தால் பேரும் புகழும் அனுபவிப்பவன். எல்லா சுக சௌக்கியமும் அனுபவிப்பவன்.
- குரு பார்த்தால் மிகுந்த கல்வி உடையவன், மெத்தப் படித்தவன், பிறருக்கு போதகன்.
- சுக்கிரன் பார்த்தால் அழகிய பெண்களுடன் சகவாசம் உள்ளவன் ,பணக்காரன்.
- சனி பார்த்தால் ஏழை, பிறரிடம் இரக்கமற்றவன், நல்ல சந்ததி அற்றவன் அதாவது இவன் மக்கள் சிறப்பாக அமைவதில்லை.
அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள செவ்வாயை :
- சூரியன் பார்த்தால் அவன் மெத்தப் படித்தவன், தன் பெற்றோர்களிடம் மதிப்பு வைப்பவன்.
- சந்திரன் பார்த்தால் -பிற பெண்டிரிடம் அன்பு பற்றுள்ளவன். பிறரிடம் இரக்கமற்றவன். சில சமயம் களவிலும் ஈடுபடுவான்.
- புதன் பார்த்தால்-வேசியர் போகம் உள்ளவன். அதிக ஆடம்பரம் உள்ளவன்.
- குரு பார்த்தால்-தன் குடும்பத்திற்கு மதிப்புள்ள தலைவன். பணக்காரன் ,செல்வாக்கு தலைமை உள்ளவன்.
- சுக்கிரன் பார்த்தால்-நல்ல உணவு கிடைக்காது. பிற பெண்டிர் மேல் மோகத்தால் சில சமயம் சிக்கலில் மாட்டிக்கொள்பவன்.ஆனால் சமூகத்திற்கு நல்லது செய்வான்
- சனி பார்த்தால்- தன் குடும்பத்தை விட்டு விரட்ட படுவான். தாய் அன்பும் பாசமும் இவனுக்கு கிடைப்பதில்லை.
அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள புதனை :
- சூரியன் பார்த்த-உறவினரால் மிகவும் விரும்படுபவன். உண்மை விளம்பி, அரசாங்கத்திடமிருந்து நிறைய சலுகைகள் அனுபவிப்பவன்.
- சந்திரன் பார்த்தால்-இசை, நுண் கலைகளில் வல்லவன். பெண்களிடம் நிறைந்த சுகம் அனுபவிப்பான். வாகன யோகமும், நல்ல வீடும் உண்டு.
- செவ்வாய் பார்த்தால்-அரசினரிடம் நெருக்கமும் அதனால் ஆதாயமும் உள்ளவன்.
- குரு பார்த்தால்-நல்ல மனைவி, மக்கள், குடும்பம், செல்வம் உண்டு.
- சுக்கிரன் பார்த்தால்-இவன் பழகும் எல்லோராலும் நன்கு விரும்பப்படுவான். செல்வமும் பெயரும் புகழும் உண்டு.
- சனி பார்த்தால்-சமூகத்திற்கு நல்ல தொண்டு செய்பவன், நல்ல உறுதியான உடல், தன் குடும்பத்தாருடன் பூசலிடுபவன்.
அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள குருவை :
- சூரியன் பார்த்தால்-நீதிக்குப் புறம்பாக எதையும் செய்ய அஞ்சுபவன், தேவதாபக்தி உள்ளவன். பொது ஜன சேவை செய்பவன்.
- சந்திரன் பார்த்தால்-பெயர், புகழ் ,செல்வம் எல்லாம் பெருகும்.
- செவ்வாய் பார்த்தால்-கொடூரன், மற்ற முரடர்களை அடக்கி ஆள்பவன். அரசாங்கத்தால் வருமானம் உள்ளவன்.
- புதன் பார்த்தால்-நன்னடத்தை இராது, எப்பொழுதும் வலுச்சண்டை பூசல்களில் ஈடுபாடும்.அக்கறையும் உள்ளவன்
- சுக்கிரன் பார்த்தால்-பரிமள வாசனாதிப் பொருள்களை வியாபாரம் பண்ணுபவன். பெண்கள் பயன்படுத்தும் பொருள்கள் வியாபாரம்.பல பெண்களை அனுபவிப்பவன்
- சனி பார்த்தால்-குடும்ப சுகம், நிம்மதி இல்லாதவன், கடின சித்தம் உள்ளவன், கொடூரன்
அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சுக்கிரனை:
- சூரியன் பார்த்தால்-அழகிய குணவதியான மனைவி உள்ளவன். நிலபுலன், வீடு ,வாசல் ,சொத்து உள்ளவன்.
- சந்திரன் பார்த்தால்-தாய் மிகவும் உயர்ந்த அந்தஸ்து உள்ளவள். இவனும் சமூகத்தில் அதிக மதிப்புள்ளவன்.
- செவ்வாய் பார்த்தால்-திருமண வாழ்க்கை பாழாகும், பெண்களால் தனம் சொத்து அழியும்.
- புதன் பார்த்தால்-எப்பொழுதும் மகிழ்ச்சியும் அதிர்ஷ்ட பாக்கியமும் உள்ளவன்.
- குரு பார்த்தால்-நல்ல மனைவி உள்ளவன், நல்ல சந்ததி, செல்வம் உண்டு.
- சனி பார்த்தால்-மகிழ்ச்சி என்பது சிறிதளவும் இராது, தன் மனைவியிடமே இவன் மிகவும் துன்பப்படுவான். உறவினரும் மனைவியும் சேர்ந்து இவனை துன்புறுத்துவார்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சனியை :
- சூரியன் பார்த்தால்-மெத்தப் படித்தவன், வேதசாஸ்திர வித்தகன் ஆனால் வாழ்க்கையில் தன் பிழைப்புக்கு பெரும்பாலும் பிறரை நம்பி இருப்பான்.
- சந்திரன் பார்த்தால்-அரசியலில் பெரும் பதவியை அடையலாம். அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் தலைவனாகவும் முதன்மை அதிகாரியாக இருப்பான்.
- செவ்வாய் பார்த்தால்-படை அல்லது போலீஸ் துறையில் பெரிய அதிகாரி ஆகலாம்.
- புதன் பார்த்தால்-பெண்களின் கீழ் வேலை செய்ய வேண்டிவரும். பல சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவான்.
- குரு பார்த்தால்-பிறர் சுக துக்கங்களில் பங்கேற்று, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய எப்பொழுதும் முன் இருப்பான்.
- சுக்கிரன் பார்த்தால்-மதுவையும் மங்கையரையும் பெரிதும் அனுபவித்து மகிழ்வான். அரசுத் தலைமைக்கு மிகவும் வேண்டியவனாக இருப்பான்.