இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்
இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் – பொருள் சேதம்.
இரண்டில் சந்திரன் இருந்தால் – இளம் வயதிலேயே திருமணமாகிவிடும்.பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும்.பெண்களுடனான கேளிக்கைகளில் நாட்டம் உள்லவனாக இருப்பான்
இரண்டில் செவ்வாய் இருந்தால் – கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்
இரண்டில் புதனிருந்தால் – நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்
இரண்டில் குரு இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்செய்பவன். சுகமாக வாழக்கூடியவன்.
இரண்டில் சுக்கிரன் இருந்தால் சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்கொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.பெண்களிடம் வசப்பட்டுவிடுபவன்.
இரண்டில் சனி இருந்தால் – இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசுதங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப் பெண்களாலேயே உண்டாகும்.
இரண்டில் ராகு அல்லது கேது இருந்தால் – இரண்டு விவாகம் அல்லதுஇரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மனசஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதானகாலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.
இரண்டில் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் – பெரும் பணக்காரனாகஇருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.
இரண்டில் சுபக்கிரகங்களுடன் – சூரியனும் கூடி நின்றால் – பொருள்நாசம். கையில் காசு தங்காது.
இரண்டில் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்(அறிவும்) செல்வமும் உண்டு
இரண்டில் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்ததுமட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்
இரண்டில் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,செல்வம் எல்லாம் கூடி வரும்
இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்அமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்
இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேதுசேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது
இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால் அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.
அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்துஅமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய் இருப்பான்.
இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன் கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்
இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாகஅமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.
இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னிரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்
இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்
இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில் குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.
மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரியசெல்வந்தனாக இருப்பான்.