Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்:பகுதி45-4ம் வீட்டு அதிபதி தரும் பலன்கள்

அடிப்படை ஜோதிடம்:பகுதி45-4ம் வீட்டு அதிபதி தரும் பலன்கள்

4ம் வீட்டு அதிபதி தரும் பலன்கள் (4th house in astrology) 

  • 4-ம் வீட்டு அதிபதி (4th house in astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகரின் நற்குணத்தால் கல்வி, ஆபரணங்கள், நிலங்கள், வண்டி வாகனங்கள், தாயார் மூலம் மகிழ்ச்சி இவைகள் கிடைக்கும்.
  • 4-ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியை அனுபவிப்பார், எல்லாவிதமான செல்வங்களும், குடும்ப வாழ்க்கையும், மரியாதையும், வெற்றிகளும் கிடைக்கும் இவர் தந்திரக்கார ராகவும் இருப்பார்.
  • 4-ம் வீட்டு அதிபதி(4th house in astrology) மூன்றாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் தைரியம் உள்ளவர். சிறப்பான வேலையாட்கள், சுதந்திரமான எண்ணம், நல்ல குணம் மிக்க கருணையுள்ள, சொந்த முயற்சியினால் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை பெற்றிருத்தலும், நோய்கள் இல்லாமலும் இருப்பார்
  • 4-ம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மந்திரிகளாகவும், எல்லாவிதமான சொத்துக்களை பெற்றவராகவும், திறமை பெற்றவராகவும், நல்லொழுக்க குணங்களை பெற்றவர். மரியாதைக்குரியவராகவும், கல்வியறிவு பெற்றவராகவும், மகிழ்ச்சியுடனும், மனைவியுடன் அன்பாய் இருப்பவரும் ஆவார்.
  • 4-ம் வீட்டு அதிபதி(4th house in astrology) ஐந்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியுடனும் எல்லோரும் விரும்புமாறும்  இருப்பார். அவர் ஒரு விஷ்ணு பக்தராகவும், நல்ல குணங்களால் மதிக்கப்படுபவர், சொந்த முயற்சியால் உழைத்து கிடைத்த செல்வங்களை பெற்று இருப்பார்
  • 4-ம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தாய்மார்களிடம் இருந்து அன்பு இல்லாததால் மகிழ்ச்சியாய் இருக்க மாட்டார். கோபத்திற்கு உள்ளாவார் , திருடனாக அல்லது மாயாஜால வித்தைக்காராகவோ எல்லாவற்றிலும் தனியாக வேலை செய்வதும்,நோய்வாய் படுதலும் இருக்கும்.
4ம் வீட்டு அதிபதி தரும் பலன்கள்

  • 4-ம்வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் உயர்ந்ததானப்பட்ட கல்வி அறிவும், தந்தை வழியாக வந்த பணத்தையும் ,ரத்த சம்பந்தமான தும் கூடிய சபையில் ஊமையாய் இருப்பார்.
  • 4-ம் வீட்டு அதிபதி(4th house in astrology) எட்டாம் வீட்டில் இருப்பின் ஜாதகர் வீட்டில் வசதிகளும் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்காது மேலும் சமமாக இருப்பார்.
  • நான்காம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் எல்லோரிடமும் அன்பாக இருப்பார். கடவுள் பக்தி செலுத்துவார். நல்ல குணங்களை உடையவராகவும், மரியாதைக்குரியவராகவும், மகிழ்ச்சியை அளிப்பவராகவும் இருப்பார்.
  •  4-ம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் ராஜ மரியாதையுடனும்,  தாயாருடன் மகிழ்ச்சியாக இருந்து ஐம்புலன்களையும் வெல்பவராக இருப்பார்.
  • 4-ம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் ரகசியமான வியாதிகளால் பயப்படுவார், எல்லோரிடமும் சகஜமாக பழகும் நல்ல குணமும், கருணையும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர் ஆவார்.
  • 4-ம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருப்பின் ஜாதகர் வசதிகள் இல்லாத வீட்டிலும் ,துர்குணம் படைத்தவராகவும், முட்டாளாகவும் சோம்பேறியாகவும் இருப்பார்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!