முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-2
- ஜாதகத்தில் ஒன்றாம் வீட்டுக்கு அதிபதியானவர், பத்தாம் வீட்டுக்குரிய கிரகம் 9-லும் இடப் பரிவர்த்தனை பெற்று சுப பலம் ஓங்கி இருந்தால், ஜாதகருக்கு அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் உயர்ந்த பதவியும் ஏற்படும் என்பதற்கு உத்திரவாதம் உண்டு.
- 9ம் வீட்டுக்குரிய கிரகம் பத்தாம் வீட்டிற்கு உரிய கிரகமும் ஒன்று கூடி 9ஆம் வீட்டிலோ , 10-ஆம் வீட்டிலோ இருப்பார்களேயானால் மிகவும் விசேஷமான செல்வங்களையும், கௌரவத்தையும், செல்வாக்கையும் பெற்று ஜாதகர் ராஜயோகங்களை அடைகிறவர் ஆவார்.
- 9,10 ஆகிய இடங்களுக்கு உரிய கிரகங்கள் ஒரு திரிகோணம் அல்லது கேந்திரத்தில் இருந்து வலிமை பெற்றிருந்தால், அந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், நலன்களையும் அடைவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.
- ஐந்தாம் வீட்டுக்குரிய கிரகமும் , 10ம் வீட்டுக்குரிய கிரகமும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் மிகவும் சுபிக்ஷங்களை ஜாதகம் வாழ்நாட்களில் பெறுவார் என்பதில் தடையில்லை.
- 5,10க்கு உரியவர்கள் எந்தக் கோணத்திலேனும் அல்லது கேந்திரத்திலேனும் ஒன்று கூடி இருந்தால், ஜாதகர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை சந்திப்பதுடன் கூட கவுரவமும், மதிப்பும், செல்வாக்கும் கொண்ட உன்னதமான ஸ்தானத்தை அடைவதற்கு ஆதாரங்கள் உண்டு.
- சுப பலம் உள்ள ஒரு கிரகம் பத்தாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டிற்குரிய கிரகம் பலம் பெற்று இருந்தால், ஜாதகர் உயர் பதவியை அடைவதற்கு ஆதாரங்கள் உண்டு.
- சூரியனும் செவ்வாயும் பத்தாம் இடத்தில் குடிபுகுந்து பத்தாம் வீட்டிற்குரிய கிரகம் பலம் பெற்று இருந்தால், ஜாதகர் வாழ்க்கையில் புகழையும், செல்வாக்கையும் அடைவதுடன் அடைய வேண்டியவற்றை எல்லாம் அடைந்து, அனைவராலும் பாராட்டப்படக்கூடிய தகுதியைப் பெறுவார். ஆனால் இந்த கிரக சேர்க்கையானது தனித்து இராமல் வேறு பாவ கிரக இணைப்பை பெற்று இருக்குமேயானால், ஜாதகரின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என கருத வேண்டும்.
- ஒரு ஜாதகத்திலும் சனி பத்தாம் இடத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைத்து முன்னேற்றம படிகளில் ஏறி முதல் நிலைக்கு வந்து விடுவார்.
- 10-ஆம் இடத்து சனி ஜாதகரை உன்னத நிலைக்கு உயர்த்தி பிறகு கீழே சரிய வைக்கும் என்பார்கள் சிலர். நமது இந்து ஜோதிட முறைப்படி கருத்து சரியாக முடியாது.
- 6,8 12ஆம் வீட்டுக்கு உரியவர்கள் பத்தாம் இடத்தில் இருந்தால் முன்னேற்றத்தை தடுப்பார்கள். குறிப்பாக எட்டாம் அதிபதி 10-ல் இருந்தால் கெடுதலின் அளவு கூடுதலாக இருக்கும்.
- பத்தாம் வீட்டை கொண்டு வர்த்தகத் துறையின் ஏற்றத்தையும், தொழில் நடவடிக்கைகளையும், ஏஜென்சி போன்ற வியாபாரங்களையும் காண வேண்டும். கூட்டுத்தொழில் செய்வது என்றால், அதற்கு சாத்தியம் உண்டா என்பதை ஏழாம் வீட்டையும் சோதித்தறிந்து முடிவு எடுக்க வேண்டும்.
- ஏழாம் வீட்டின் அதிபதி 6 ,8, 12ஆம் வீடுகளில் ஒன்றில் பலம் சிதைந்து போய் இருந்தால் பங்குதாரரை சேர்த்துக் கொண்டு தொழில் செய்வதால் நன்மை பெற முடியும்.
- சந்திரனில் இருந்தோ ,லக்னத்தில் இருந்தோ பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகத்தை கொண்டு ஜாதகர் எந்தத் துறையில் தொழில் புரிய கூடும் என்பதை அறிய வேண்டும்.
- சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐவரில் ஒருவரோடு லக்னாதிபதி கூடி 6,8 ,12ஆம் இடங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்தால், ஜாதகரின் உடல் நலம் சீராக இருக்காது.
- லக்னாதிபதி பாவகிரகம் ஆகி மேற்சொன்னவாறு இருந்தாலும் உடல் நலம் சீராக இருக்காது.
- விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, செவ்வாய் லக்னாதிபதி ஆகிறார். இவர் ஆறாம் வீட்டில் இருந்தால் ஆட்சி பெற்றவராவார். ஆகையால் உடல் நலம் சீர் கெடாது.
- மேஷ லக்கினமாகி செவ்வாய் எட்டாம் இடத்தில் இருந்தாலும், கும்ப லக்னமாகி சனி 12ம் இடத்தில் இருந்தாலும், உடல்நலம் சீர்கெட இடமில்லை.
- லக்னாதிபதி ஒரு கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்து, சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் சரீர சுகத்திற்கு உத்திரவாதம் உண்டு.
- லக்னத்தில் ஒரு பாவ கிரகம் இருந்து, லக்னாதிபதி பலம் குறைந்து இருந்தால் மனக்குறையும், உடல்நலக் கோளாறும் உண்டாகலாம்.
- லக்னாதிபதி ஆறாம் வீட்டில் குடிபுகுந்தால் ஜாதகருக்கு தொடர்ந்து கவலைகள் இருந்து வரும்.
- லக்னாதிபதி ஒரு பாபக் கிரகமாகி லக்னத்திலேயே இருந்தால் சுப பலம் உண்டாகி நலங்கள் ஏற்பட நியாயம் உண்டு.
- லக்னாதிபதி தன் சொந்த வீடு அல்லாத மற்றொரு வீட்டில் இருந்து, அந்த வீடு ஒரு பாவ கிரகத்தின் வீடாக இருக்குமானால், ஜாதகருக்கு அறிவாற்றல் குறையக்கூடும்.
- சூரியனும்,சந்திரனும் பாவ கிரகங்களுக்கு மத்தியில் இருந்தால் ஜாதகரின் செயல்கள் குற்றம் உடையவையாக அமையக்கூடும்.
- மிதுனம் அல்லது கன்னியில் பிறந்து புதன் மேஷம், ரிஷபம், கடகம், தனுசு, மகரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் ஜாதகர் பலவீனமான சரீரம் உடையவர் ஆவார்.
இந்த கட்டுரையின் முந்தய பதிவினை படிக்க இங்கே சொடுக்கவும்
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-1