ஆறாம் வீட்டின் அதிபதி ஒரு அசுபக் கிரகத்துடன் சேர்ந்து, லக்னம் அல்லது 8ஆம் வீட்டில் இருந்தால் உடலில் காயங்கள் ஏற்படக்கூடும்.
லக்னாதிபதி மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம் ஆகிய இடங்களில் ஒன்றிலிருந்து செவ்வாய்யாலும், புதனாலும் பார்க்கப்பட்டால் கண் உபாதைகள் ஏற்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.
6ம் வீட்டுக்குரிய கிரகம் லக்னத்திலோ,ஆறாம் இடத்திலோ அல்லது எட்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சத்துருஜித்தனாக விளங்கக்கூடும்.
ஏழாம் வீட்டிற்குரிய கிரகம் எட்டாம் இடத்திலும், எட்டாம் அதிபதி ஏழாம் இடத்தில் இருந்தாலோ அல்லது ஆறாம் வீட்டு அதிபதி ஏழில் இருந்தால்,ஏழாம் வீட்டு அதிபதி 6ல் இருந்தால் மண வாழ்வில் சுபம் கெடக்கூடும்.
குரு 7ஆம் வீட்டில் தனித்து இருந்தாலும், ஒரு பாவ கிரகத்துடன் கூடி இருந்தாலும், இல்லற வாழ்வுக்கு நிறை இல்லாமல் போகும்.
சூரியனும், ராகுவும் 7-ம் வீட்டில் ஒன்றுகூடி இருந்தால் ஜாதகருக்கு பெண் இனத்தால் பொருள் விரயம் ஏற்படக்கூடும்.
ஏழாம் வீட்டில் கேது இருந்தால் நோய்வாய்ப்பட்ட மனைவி அமைவாள்
எட்டாம் வீட்டில் சனி இருந்தால் ஆயுள் தீர்க்கம் ஆகும்
பதினோராம் வீட்டில் நவகிரகங்களில் எந்த கிரகம் இருந்தாலும், நலம் செய்யக்கூடிய பலத்தை பெறுவார்கள். ஆனால் இங்கு உள்ள பாவ கிரகங்கள் ஜாதகரின் வருவாய்க்கு வளர்ச்சியை தருவார்கள் என்று சொல்லாமே தவிர சுகம் மற்றும் குடும்ப நலம்,சகோதர நலம் ஆகியவற்றைத் தருவார்கள் என்று சொல்வதற்கில்லை.
பதினோராம் வீட்டுக்குரிய கிரகம் ஐந்தாம் வீட்டில் இருந்தால்,கல்வியாலும், மக்களாலும் காவியம் புனைவதாலும் ஜாதகருக்கு பொருளாதாரநிலை உயரக்கூடும்.குரு
ஏழாம் வீட்டின் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால், மனைவியின் மூலமாகவோ, மாமனார் மூலமாகவோ, பங்குதாரர் மூலமாகவோ,பிஸினஸ் மூலமாகவோ லாபம் கிடைப்பது உண்டு.
எந்தெந்த பாவத்திற்குரிய அவர்கள் பதினோராம் வீட்டில் இருக்கிறார்களோ, அவர்களால் அந்தந்த பாவங்களுக்கு உரிய பலன்கள் அனுகூலமாக கூடிவரும்.
பதினோராம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். இந்த லாபம் எந்தத் துறையில் ஏற்படும் என்பதை அந்த வீட்டுக்கும் ஏனைய வீட்டு அதிபதிகளுக்கும் ஏற்படும் தொடர்பு குறித்து நிச்சயிக்க வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீடு என்பது தனம் திரட்டி குவிக்கின்ற வாய்ப்பை வெளிப்படுத்துவதாகும். 4ஆம் வீடு என்பது நிலம் போன்ற சொத்துகளால் வருவாய் உண்டாவதை குறிக்கும்.
பூர்வீக சொத்துக்களை பிரதிபலிப்பது எட்டாம் வீடு, 9ஆம் வீடு பொதுவாக அதிர்ஷ்டத்தை குறிக்கும். ஐந்தாம் வீடு மக்கள் மற்றும் பூர்வ புண்ணியத்தை குறிக்கும். ஆகவே இந்த இடங்களை நாம் சீர்தூக்கிப் பார்த்து ஜாதகரின் பொருளாதார நிலையையும் லாபத்தையும் முடிவெடுக்க வேண்டும்.
1,2 அதிபதிகள் ஒன்று கூடினால் பொருளாதாரத்திற்கு நல்லது. இவ்வாறே 1-4,1-5,1-9,1-10,1-11,2-4,2-5,2-9, 2-10,2-11 மற்றும்4-5,4-9,4-10,4-11,5-9,5-11,9-10,9-11,10-11, ஆகிய வீடுகளின் அதிபதிகள் ஒன்று சேர்ந்தால் பொருளாதார நிலை உயர்வு உண்டாக அதிக வாய்ப்பு வரும்.
இரண்டாம் வீட்டுக்குரிய கிரகம் 10-ஆம் வீட்டில் இருந்தால் பொருளாதார சிறப்பு உண்டு.
நான்காம் வீட்டின் அதிபதி, ஒன்பதாம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீட்டில் ஒன்று கூடினால் தனயோகம் ஏற்படும்.
பதினோராம் வீட்டின் அதிபதி இரண்டில் இருந்தாலும், இரண்டாம் வீட்டின் அதிபதி 11ல் இருந்தாலும் பொருளாதார சுபிட்சம் உண்டாகும்.
இரண்டாம் வீட்டின் அதிபதி, பதினொன்றாம் வீட்டின் அதிபதி ஒன்று சேர்ந்து ஒரு கேந்திர ஸ்தானத்தில் இருந்தால் பொருளாதார நலம் உண்டாகும்.
1-6,2-6,3-6,4-6,5-6,7-6,8-6,9-6,10-6,11-6,12-6 வீடுகளின் அதிபதிகள் சம்பந்தம் கொண்டு கெட்ட இடங்களிலிருந்து இருந்தார்களானால் ஜாதகரை வறுமை வாட்டும்.
8-12,1-12,2-12,3-12,4-12,5-12,7-12,9-12,10-12,11-12 ஆகிய வீடுகளின் அதிபதிகள் ஒன்றுகூடி துர்ஸ்தானங்களில் இருந்தார்களானால்பொருளாதார சங்கடம் ஜாதகருக்கு உண்டாகும்.