கருட புராணம்-அந்ததாமிஸ்ரம்-ரெளரவம்-மகாரெளரவம்
கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள் வரிசையில் இன்று நாம் காணவிருப்பது 2,3,4வது நரகம்..
2.அந்ததாமிஸ்ரம்
கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் பாவமாகும்.
கணவன் மனைவியை வஞ்சித்தாலும், மனைவி கணவனை வஞ்சித்தாலும் அடையும் நரகம் அந்ததாமிஸ்ரம் இங்கு ஜீவன்கள் கடுமையான இருளில் விழுந்து கண்கள் தெரியாத நிலையில் மூர்ச்சையாகி தவிர்க்க வேண்டும்.
3.ரெளரவம்
பிறருடைய குடும்பத்தை அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிக்கும் பாவச் செயலை புரிந்தவர்கள் அடையும் நரகம் ரெளரவம்
இங்கு ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தால் குத்தித் கொடுமையாக துன்புறுத்துவார்கள்.
4.மகாரெளரவம்
மிகவும் கொடூரமாக பிறரை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகாரெளரவம்
இந்த நரகத்தில் குரு என்னும் குரூரமான மான் இனத்தை சேர்ந்த மிருகம் பாவ ஜீவன்களை சூழ்ந்து, முட்டிமோதி ரத்தக்களறியாய்த் துன்புறுத்தும்.