தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்:
நிர்பந்தத்தில் திருமணம் நடக்கும்.
அதிக பண செலவு -சுற்றத்தார் ஒன்று கூடி திருமணம் நடப்பது பெரும்பாடு.
உறவில் திருமணம் -தகுதி அழகை உத்தேசித்து திருமணம் நிச்சயமாகும்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.இதனால் அடி உதையும் வரலாம்.
தெற்கு -கிழக்கு திசையில் திருமணம் அமையும்.
இந்த குடும்பத்தில் நான்கு பேருக்குள் இருக்கலாம்.
திருமணத்திற்கு பின் கணவன் -மனைவி நிலை உயரும்.
சிலருக்கு காதல் தோல்வி ஏற்பட்டு பின் திருமணம் நடக்கும்.
அல்லது ஏற்கனவே பேசி வைத்து அது விலகி வேறு ஜாதகம் அமைந்து நடக்கும்.
சனி -செவ்வாய் -புதன் -சுக்கிரன் தசா -புத்தி அபகார காலங்களில் திருமணம் நடக்கும்.
2,5,7,11-ல் இருப்பவர் -பார்த்தவர்.தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
வரும் மனைவி பண வசதி உள்ளவளாகவும் .நல்ல நடத்தை உள்ளவளாகவும்-சர்வ குணமும்-நலன்களும் பொருந்தியவளாகவும் ,அடக்கமும் அழகும் உள்ளவளாகவும் ,துஷ்ட குணமற்றவளாகவும் இருப்பாள் ..