லக்கினத்திற்கு 7-ல் குரு இருந்தால் உறவு முறையில் இவர் திருமணம் நடக்கும்.
குடும்ப சுக விருத்தியும் – மனைவியால் பலநன்மைகளும் – மாமனாரால் பல நன்மைகளும் , வீட்டில் சதா விருந்து உபசாரங்களும் , அடிக்கடி தீர்த்த யாத்திரை சென்று வருதல் , பெரிய சாது , மகான்களின் ஆசிர் வாதம் கிடைத்தல் , பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருதல் ஆக இவை போன்ற நல்லவைகள் நடக்கும் .
மனைவி உடல் நலத்தில் கவனம் தேவை.
பெரியோர்களின் நட்பும் ஆசீர்வாதமும் உண்டு
நல்ல புத்திரர்களின் அரவணைப்பும் , வண்டி – வாகன யோகமும் உண்டு .
குரு கடகத்தில் அமைந்து ராகு சேர்க்கை பெற்றால் காரிய நஷ்டம் உண்டாகும் . இவர்களுடன் வேறு பாவர்கள் சேர்ந்தால் சண்டாள குணம் உண்டாம் .
பெண்களால் அல்லது அபாண்டத்தால் ஒருக்கால் சகல சொத்துக்களும் அழியலாம் . தன் தந்தையை விட வெகு உதார குணம் இவருக்கு உண்டு உத்தியோக ஜீவனம் நடைபெறும் .
துலா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் தடையாகும்.
இவர் தசா புத்தியில் மனைவி ஏற்படல் , மனைவியால் சொத்து அடைதல் , புத்திரப்பேறு அடைதல் , புத்திரர்களால் யோகம் , வெளி தேச பயணம் , பரப்பிரம்பத்தைத் தியானம் செய்து புண்ணிடம் அடைதலும் உண்டாம் .
நல்ல தாய்பால் சுரக்கும் மனைவி அமைவாள்.
குரு – சூரியன் – சனி சேர்க்கை காச நோய் ஏற்பட லாம் .
குரு சனி சேர்க்கை இருதய நோய் ஏற்படலாம் .
மனைவி வரும் திக்கு – வடகிழக்கு ( மூதாதையர் – தாய் வழி ) குணம் – கணவனிடம் அன்பு கொண்டவள் . மனைவியின் நிறம் – பொன்மேனி .
மனைவி இருக்கும் தூரம் – சுமார் 300 மைல் தூரத்துக்குள் .
கணவன் – மனைவியின் தொழில் , வங்கி உத்தி யோகம் ஆசிரியர் , உலோக வியாபாரி , தங்க வேலை.