கேது சேர்க்கை தரும் பலன்கள்(மேஷம் முதல் மீனம் வரை)
மேஷ ராசி
மேஷ ராசியில் இருக்கும் கேதுவுடன் , சூரி , சனி , புதன் , சுக்கிரன் , சந்திரனும் சேர்ந்திருந்தால் , எதிரிகளின் துன்பத்தினால் மனக் கலக்கமடைந்து வறுமையினால் துயரமடைவார்கள்.
மேச ராசியில் இருக்கும் கேதுவுடன் , செவ் வாய் , குரு சேர்ந்திருந்தால் , வித்தியா விர்த்தியும் , கல்வியும் , ஞானமும் ஞாபகசக்தியும் , வியாபாரம் , உத்தியோகம் செய்தும் , பொருள் சேர்க்கையால் தனவந்தராக ஜீவிப்பார்கள்.
ரிஷப ராசி
ரிஷப ராசியில் கேது இருக்கும்போது , சுக்கிரன், சனி , புதன் சேர்ந்தால் , வித்தியா லாபமும் , ஞாபக சக்தியும் , உத்தமர் நேசமும் , உத்தியோகம் வியாபார விருத்தியும் அடைந்து பேரும் புகழும் , தனச்சேர்க்கையும் , அடைந்து பிரபலமாக இருப்பார்கள்.
சூரியன்+சந்திரன்+ குரு சேர்ந்தால் எதிரிகளால் தொல்லை, கலகம், வறுமை, பிணி-நோய் இவைகளால் துயரத்துடன் வாழ்வார்கள்.
மிதுன ராசி
மிதுனத்தில் கேது இருந்து , புதனும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகபலன்களைத் தந்திடுவார் , கல்வி , ஞானம் , புகழ் , சகலருக்கும் நல்லவராகி உத்தம குணமுள்ளவராகவும் , பொன் பொருள் சேர்க்கையும் சேர்ந்து புகழோடு வாழ்வார்கள்.
சூரியனும் , சந்திரனும் , சுக்கிரனும் சேர்ந்திருந்தால் சத்துருக்களால் மனக் கவலையடைந்து கைப் பொருட்களை இழந்து , வறுமை, நோயினாலே மானிலத்தோர் முன் மதிமயங்கி கலங்குவார்கள்.
கடக ராசி
கடகராசியில் கேதுவுடன் , சூரியனும் , சந்திரனும் , சனியும் , சுக்கிரனும் சேர்ந்திருந்தால் , கெட்ட குணம் அமைந்த பகைவர்கள் பாம்பு போல் சீறி துன்பப்படுவதுடன் தீராக் கவலையும் , வறுமையும் , மிகுந்த கஷ்ட நஷ்டத்தினால் கலங்கித் துடிப்பார்கள் .
ஆனால் கேது பகவானுடன் குரு சேர்ந்திருந்தால் , பகவத் பத்தியானந்தமாய் , விரதானுஷ்டானம் புரிந்து சகலருக்கும் நல்லவர்களாயிருந்து திரவியஞ் சேகரம் செய்து ஜீவித்திருப்பார்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசியிலிருந்து கேதுவுடன் சூரியன் , சந்திரன் , சுக்கிரன் , சனியும் சேர்ந்திருந்தால் , சத்துருக்களின் குரூர குணத்தினாலேற்படும் துன்பத்தினால் , மன விகாரமடைந்து சதாகாலமும் வறுமையினால் திகைத்திருப்பார்கள்.
ஆனால் சிம்ம ராசியில் கேதுவுடன் , புதன் , செவ்வாய் சேர்ந்திருந்தால் வித்யா விர்த்தியும் , ஞாபக சக்தி பொருந்தியவராய்,உத்தியோக விர்த்தியும் வியாபார லாபமும் அடைந்து தனவந்தராக இருப்பார்கள்.
கன்னி ராசி
கன்னி ராசியில் இருக்கும் கேதுவுடன் சந்திரன்,சுக்கிரன், சூரியன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் பகை வரால் துயரமடைந்து சதா காலமும் கலக்கமும் கவலையுமடைந்து , விசனத்தினால் வாழ்ந்து வறுமையாளாராயிருப்பதாகும்.
கேதுவுடன் வியாழனும் செவ்வாயும் , சேர்ந்திருந்தால் பலவிதமான நன்மையுடன் திரவியஞ் சேகரித்து சகலருக்கும் அன்பும் பிரியமுள்ளவர்களாயிருப்பார்கள்.
துலாம் ராசி
துலாம் ராசியில் கேதுவுடன் செவ்வாய் , சூரியன் , சந்திரன் சேர்ந்திருந்தால் , பகைவர்களின் கொடுமையினால் மன அமைதி கெட்டு , வறுமையால் பிடிக்கப்படுவார்கள்.
ஆனால் சுக்கிரன் , சூரியன் , சனியும் சேர்ந்திருந்தால் , வித்தையும் , புத்தியும் , பெருகி திரவியம் சேகரித்து பெருமையாய் வாழ்ந்தாலும் , கோபமும் குரோதமும் உடையவர்களாகி , சகலரையும் அலட்சியம் செய்து மதிக்காமல் பேசி . வீண் பகையைத் தேடிக் கொள்ளுவார்கள் .
விருச்சிக ராசி
விருச்சிக ராசியில் கேதுவுடன் , சனி , சூரியன் , சந்திரன் செவ்வாய் சேர்ந்திருந்தால் மோச , தந்திர அடாவடித்தனமாய் , திரவியஞ் சேகரித்து வீண் செலவு செய்து விட்டு கையில் காசில்லாத ஏழையாயிருந்தாலும் மனோ கர்வத்தினால் எவரையும் மதிக்காமல் அலட்சியமாய் பேசி சகலரும் நிந்திக்கும்படியாய் பொல்லாதவன் என்றும் வறுமையினால் கலங்கி நிற்பார்கள்.
கேதுவுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் கல்வியில் தேர்ச்சிடைந்து, ஞானவானாய் சகலரும் புகழ்ந்துரைக்குந் தன்மையாய் திரவியம் சேகரஞ் செய்து வாழ்ந்திருப்பார்கள்.
தனுசு ராசி
தனுசு ராசியில் கேதுவுடன் சனி , சூரியன் , சந்திரன் சேர்ந்திருந்தால் பகைவர்களால் மனக்கவலையும் , வறுமையும், துன்பமும் உண்டாகும்.
கேதுவுடன் , குரு , செவ்வாய் சேர்ந்திருந்தால் , கல்வியுடன் ஞானமும் அதிகரித்து , கீர்த்தி பிரகாசமாயிருப்பதுடன் வியாபார விருத்தியிலும், உத்தியோகத்தில் சிறந்தவர்களாய் திரவியமும் சேகரித்து பெருமையுடன் வாழ்வார்கள்.
மகர ராசி
மகரம் ராசியில் கேதுவுடன் , சூரியன் , சந்திரன் செவ்வாயும் சேர்ந்திருந்தால் , மன விரக்தியடைந்தவர்களாவும் , பந்துமித்ரர்களால் பகையினால் பலவித கஷ்ட நஷ்டங்களை அடைந்து சுகமில்லாமல் துன்பத்தில் ஆழ்ந்தவர்களாய் கலங்குவார்கள்.
சனி ஆட்சியுடன் குரு பகவானும் அந்த ஸ்தானத்தில் நட்பாயிருக்க , உலகில் பல பேருக்கும் நல்லவன் என்றே கல்வியிலும் , ஞானத்திலும் , சிறந்தவனாய் வியாபார விஷயத்திலும் உத்தியோக வகையில் முன்னேற்றமும் , அடைந்து கீர்த்தி பிரகாசமாய் பொருள் சேகரஞ் செய்தும் , சுக ஜீவியாக வாழ்வார்கள்.
கும்ப ராசி
கும்பத்தில் கேதுவுடன் , குரு , சனி , புதன் இருக்க , கல்வியிலும் தேர்ச்சி அடைந்தும் , வியாபார விஷயத்திலும் உத்தியோக விஷயத்திலும் , தேர்ச்சியடைந்து திரவியஞ் சேகரித்து தனவந்தராக இருப்பார்.
கேது , சூரியன் , சந்திரன் மூவரும் சேர்ந்திருக்கும் போது துர்க்குணம் உள்ள பகைவர்களால் , கலகமும் வறுமையாளர்களால் கலங்குவார்கள்.
மீன ராசி
மீன ராசியில் கேதுவுடன் . குருவம் சுக்கிரனுமிருந்தால் வித்தையும் , புத்தியும் ஞானமும் விவேகமும் அதிகரித்து தனதான்ய சம்பத்துடனே வியாபார லாபமும் பெற்று பக்தி ஆசாரத்துடன்,சுக ஜீவியாக வாழ்வார்கள்.
கேதுவுடன், சூரியன் சந்திரன் சேர்ந்திருந்தால் கெட்ட குணம் உள்ள சத்ருக்களின் கொடுமையினால் ,துன்பத்தையும்,மனகவலையும், வறுமை நோயாலும் வாடி வதங்கி கஷ்டப்படுவார்கள்.